தொடர் கொலையாளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1829 ஆம் ஆண்டு ஐரிய தொடர் கொலையாளி வில்லியம் பர்க் மார்கெரி காம்ப்பெல்லைக் கொலை செய்த படம்.

ஒரு தொடர் கொலையாளி (Serial killer) என்பவர் பொதுவாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொல்பவரைக் குறிக்கிறது.[1] ஒரு மாதத்திற்கும் மேலாக இத்தகைய கொலை குற்றங்கள் நடந்தாலும் ஒவ்வொரு கொலைக்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி இருக்கின்றன. தொடர் கொலைகள் என்பதற்கு மூன்று கொலைகள் என நிர்ணயித்தாலும்[1][2] சிலர் நான்காக அதிகரிக்கவோ அல்லது இரண்டாகவோ குறைக்கின்றனர்.[3]

உளவியல் மனநிறைவு என்பது தொடர் கொலைக்கான வழக்கமான நோக்கமாகும், மேலும் பல தொடர் கொலையாளிகள் பாதிக்கப்பட்டவருடன் பாலியல் ரீதியிலான தொடர்பைக் கொண்டிருப்பார்கள். [4] புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் (FBI) தொடர் கொலையாளிகள், கோபம், சிலிர்ப்பு தேடுதல், நிதி ஆதாயம் மற்றும் கவன ஈர்ப்பு ஆகிய நோக்கங்களினால் கொலைகள்ச் சம்பவங்களில் ஈடுபடுவதாகக் கூறுகிறது. [5] பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்தியில், மக்கள்தொகை விவரக்குறிப்பு, தோற்றம், பாலினம் அல்லது இனம் ஆகிய ஏதேனும் ஒன்று ஒற்றுமையாக இருக்கலாம் . [6] பெரும்பாலும் புலன் விசாரணைக் காவலர்கள் தொடர் கொலையாளிகள் கொலை செய்யப்பட்ட விதத்தினை அடிப்படையாக வைத்து கொலைகாரர்களைத் தேடுவர். [7][8]

சொற்பிறப்பியல் மற்றும் வரையறை[தொகு]

தொடர் கொலையாளி என்ற ஆங்கிலச் சொல்லும் கருத்தும் மேனாள் எஃப்பிஐ சிறப்பு துப்பறிவாளர் ராபர்ட் ரெஸ்லரால் முதன்முதலாகப் பயன்படுத்தியதாகக் கருதப்படுகிறது. இவர் 1974 ஆம் ஆண்டில், ஐக்கிய இராச்சியம், இங்கிலாந்து, ஹாம்ப்ஷயர், பிராம்சிலில் உள்ள காவலர் பணியாளர் அகாதமியில் நடைபெற்ற ஒரு விரிவுரையில் தொடர் கொலை என்ற சொல்லைப் பயன்படுத்தினார். [9] ஆன் ரூல் தனது 2004 ஆம் ஆண்டு நூலான கிஸ் மீ, கில் மீ யில், 1985 ஆம் ஆண்டில் பியர்ஸ் புரூக்சு இந்தச் சொல்லை முதன்முதலாகப் பயன்படுத்தினார் எனக் கூறியுள்ளார்.[10]

வரலாறு[தொகு]

பின்லாந்தின் தொடர் கொலையாளியான ஜுஹானி ஆட்டமின்போய்கா, "கெர்பெய்க்காரி" என்றும் அழைக்கப்படுகிறார் ('மரணதண்டனை செய்பவர்'), 19 ஆம் நூற்றாண்டின் தொடர் கொலையாளிகளில் ஒருவர், பிடிபடுவதற்கு ஐந்து வாரங்களுக்குள் 12 பேரைக் கொன்றார். [11]

வரலாற்றுக் குற்றவியல் வல்லுநர்கள் பல காலங்களாக (வரலாறு முழுவதும்) தொடர் கொலையாளிகள் இருந்ததாக தெரிவிக்கின்றனர்.[12] ஓநாய் மனிதன் மற்றும் வாம்பையர் போன்ற புராணக்கதைகள் நடுக்கால தொடர் கொலையாளிகளால் ஈர்க்கப்பட்டதாக சில ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.[13] ஆப்பிரிக்காவில், சிங்கம் மற்றும் சிறுத்தை மனிதர்களால் அவ்வப்போது கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. [14]

சீனாவின் லியு பெங்லி, ஆன் பேரரசர் ஜிங்கின் மருமகன், ஜிங்கின் ஆட்சியின் மத்திய காலத்தின் ஆறாவது ஆண்டில் (கி.மு.144) ஜிடாங்கின் இளவரசராக நியமிக்கப்பட்டார். சீன வரலாற்றாசிரியர் சிமா சியானின் கூற்றுப்படி, அவர் "20 அல்லது 30 அடிமைகளுடன் அல்லது சட்டத்திலிருந்து மறைந்திருக்கும் இளைஞர்களுடன் கொள்ளையடிக்கும் பயணங்களுக்குச் செல்வார், மக்களைக் கொன்று, அவர்களின் உடைமைகளை கைப்பற்றுவதனை விளையாட்டாகக் கொண்டிருந்தார்". பலருக்கு இதுபற்றி தெரிந்திருந்தாலும் அந்த மன்னரின் 29 ஆவது வயதில் அவரால் கொல்லப்பட்ட ஒருவரின் தந்தையின் புகாருக்குப் பின்னரே இந்தத் தகவல் வெளியில் வந்தது.இறுதியில், அவர் குறைந்தது 100 பேரைக் கொன்றது கண்டுபிடிக்கப்பட்டது. நீதிமன்றத்தின் அதிகாரிகள் லியு பெங்லியை தூக்கிலிட வேண்டும் என்று கோரினர்; இருப்பினும், தனது சொந்த மருமகன் கொல்லப்படுவதை பேரரசரால் தாங்க முடியாமல் லியு பெங்லி ஒரு சாமானியனாக்கப்பட்டு நாடு கடத்தப்பட்டார். [15]

9 ஆம் நூற்றாண்டில் (இஸ்லாமிய நாட்காட்டியின் ஆண்டு 257), "பாக்தாத்தில் கழுத்தை நெரித்து கொலை செய்தவவரைக் கைது செய்தனர். பல பெண்களைக் கொன்று, அவர் வசிக்கும் வீட்டில் புதைத்தது பின்னர் கண்டறியப்பட்டது." [16]

அடிக்குறிப்புகள்[தொகு]

 1. 1.0 1.1
  • Holmes & Holmes 1998, Serial murder is the killing of three or more people over a period of more than 30 days, with a significant cooling-off period between the murders The baseline number of three victims appears to be most common among those who are the academic authorities in the field. The time frame also appears to be an agreed-upon component of the definition.
  • Petherick 2005, p. 190 Three killings seem to be required in the most popular definition of serial killing since they are enough to provide a pattern within the killings without being overly restrictive.
  • Flowers 2012, p. 195 in general, most experts on serial murder require that a minimum of three murders be committed at different times and usually different places for a person to qualify as a serial killer.
  • Schechter 2012, p. 73 Most experts seem to agree, however, that to qualify as a serial killer, an individual has to slay a minimum of three unrelated victims.
 2. Burkhalter Chmelir 2003, ப. 1.
 3. Hough & McCorkle 2016, p. [...] Serial killing has been defined by different researchers or groups as either two or more, three or more or even four or more people killed over at least one month with a cooling off period between each of the murders.
 4. Geberth 1995, ப. ? "The base population was 387 serial murderers, who killed (under various motivations), three or more persons over a period of time with cooling-off periods between the events. The author identified 232 male serial murderers who violated their victims sexually".
 5. Morton 2005, ப. 4, 9.
 6. Scott, Shirley Lynn. "What Makes Serial Killers Tick?". truTV இம் மூலத்தில் இருந்து July 28, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100728094415/http://www.trutv.com/library/crime/serial_killers/notorious/tick/victims_1.html. 
 7. Freeman, Shanna (October 2, 2007). "How Serial Killers Work". HowStuffWorks. https://people.howstuffworks.com/serial-killer2.htm. 
 8. Osowki, Kaylee (December 11, 2018). "Investigating a Serial Killer: The Development of the FBI's Role Told Through Public Documents". DTTP: Documents to the People (Documents to the People) 46 (4): 19–24. doi:10.5860/dttp.v46i4.6892. https://journals.ala.org/index.php/dttp/article/view/6892/9271. பார்த்த நாள்: September 22, 2021. 
 9. Ressler & Schachtman 1993, Schechter 2003
 10. Rule 2004, ப. 225.
 11. Jarmo Haapalainen (2007) (in fi). Twelve murders in five weeks, Heinola's "beast" Finnish record. Heinola. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-952-99946-0-1. 
 12. S. Waller (2011). Serial Killers – Philosophy for Everyone: Being and Killing. John Wiley & Sons. பக். 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4443-4140-9. https://books.google.com/books?id=EbcTUxIR19QC&pg=PT56. பார்த்த நாள்: August 30, 2020. 
 13. Schlesinger 2000, ப. 5.
 14. "Tanganyika: Murder by Lion". Time. November 4, 1957. http://www.time.com/time/magazine/article/0,9171,867859,00.html. 
 15. Qian 1993, ப. 387.
 16. Al-Tabari (868-879). "Al-Tabari's History, vol. 36.". p. 123 இம் மூலத்தில் இருந்து 2022-10-09 அன்று. பரணிடப்பட்டது.. https://ghostarchive.org/archive/20221009/https://archive.org/download/tabarivolume36/Tabari_Volume_36.pdf. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்_கொலையாளி&oldid=3749311" இருந்து மீள்விக்கப்பட்டது