பர்க் மற்றும் ஹேர் கொலைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
வில்லியம் பர்க் மற்றும் வில்லியம் ஹேர்
பர்க் மற்றும் ஹேர்
Background information
இறப்பு:28 சனவரி 1829(1829-01-28) (அகவை 37) invalid month invalid day (பர்க்)
இறப்புக் காரணம்:தூக்கு
Killings
பாதிக்கப்பட்டோர்:17
நாடு:ஸ்காட்லாந்து

பர்க் மற்றும் ஹேர் கொலைகள் (Burke and Hare murders) என்பது ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோவில் நவம்பர் 1827 முதல் அக்டோபர் 31, 1928 வரை நடைபெற்ற 17 தொடர் கொலைகளாகும். இக்கொலைகளைச் செய்தவர்கள் வில்லியம் பர்க் (William Burke) மற்றும் வில்லியம் ஹேர் (William Hare) என்போர். மருத்துவ மாணவர்கள் உடலை அறுவை (dissection) செய்து பயிலும் பொருட்டு மருத்துவர் நாக்ஸ் (Dr.Knox) என்பவருக்கு சடலங்களை விற்கவே இக்கொலைகளை இவ்விருவரும் செய்தனர். இருவரில் ஒருவர் கொலை செய்யப்படுபவரின் மூக்கைப் பொத்த (smothering) மற்றொருவர் நெஞ்சின் மீது அமரவுமாகவும் (truamtic asphyxia) இவர்கள் செய்த கொலைகளால் "பர்க்கிங்" (burking) எனும் பெயரே உருவானது.