ஓநாய் மனிதன்
Appearance
ஓநாய் மனிதன் என்பது நாட்டுப்புறவியலில் ஒரு மனிதன் தன் உருவத்தை மாற்றி ஓநாயாக உருமாறும் தன்மை உடையவனாக சித்தரிக்கப்படும் ஒரு கற்பனை கதாபாத்திரம். ஐரோப்பிய நாட்டுப்புறவியலில் இந்த ஓநாய் மனிதன் பற்றிய பல கதைகள் உள்ளன.[1] அவர்களின் சொந்த ஆற்றல் மூலமோ அல்லது சாபத்தின் வெளிப்பாட்டாலோ இது போன்ற உருவமாற்றத்திற்கு உட்படுகின்றனர். இந்த உருமாற்றம் பெரும்பாலும் முழுநிலவு நாட்களில் நிகழும். கிமு 26-ஆம் ஆண்டில் ரோமானிய மன்னன் நீரோ ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த பெட்ரோனாஸின் நாவலில் ஓநாய் மனிதன் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது.
திரைப்படங்கள்
[தொகு]ஓநாய் மனிதன் கதாபத்திரத்தை கொண்ட பல திரைப்படங்கள் வெளிவந்துள்ளன அவற்றில் சிலவற்றின் பட்டியல்
- தி ஹௌலிங் (1981)
- வான் ஹெல்சிங் (2004)
- தி கேபின் இன் தி வுட்ஸ்(2012)
வெளி இணைப்புகள்
[தொகு]- ↑ Kim R. McCone, "Hund, Wolf, und Krieger bei den Indogermanen" in W. Meid (ed.), Studien zum indogermanischen Wortschatz, Innsbruck, 1987, 101-154