தேவதை புல்வெளி தேசியப் பூங்கா

ஆள்கூறுகள்: 35°23′12.67″N 74°35′02.98″E / 35.3868528°N 74.5841611°E / 35.3868528; 74.5841611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேவதை புல்வெளி தேசியப் பூங்கா
தேவதை புல்வெளியிலிருந்து நங்க பர்வதத்தின் தோற்றம்
Map showing the location of தேவதை புல்வெளி தேசியப் பூங்கா
Map showing the location of தேவதை புல்வெளி தேசியப் பூங்கா
பாக்கித்தானில் தேவதை புல்வெளியின் அமைவிடம்
அமைவிடம்வடக்கு நிலங்கள், பாக்கித்தான்
அருகாமை நகரம்சிலாசு
ஆள்கூறுகள்35°23′12.67″N 74°35′02.98″E / 35.3868528°N 74.5841611°E / 35.3868528; 74.5841611
ஏற்றம்3,300 மீட்டர்கள் (10,800 அடி)
நிறுவப்பட்டது1995 (1995)
நிருவாக அமைப்புகில்கிட்-பால்ட்டிஸ்தான் அரசு

தேவதை புல்வெளி தேசிய பூங்கா ( Fairy Meadows) ஜெர்மன் மலையேறுபவர்களால் இப்பெயரிடப்பட்டது ( "விசித்திரக் கதை புல்வெளி") மேலும், உள்நாட்டில் ஜூட் (Joot,) என்று அழைக்கப்படும் [1] இது பாக்கித்தானிலுள்ள கில்கிட்-பால்டிஸ்தானின், தயமர் மாவட்டத்தில் அமைந்துள்ள நங்க பர்வதத்தின் அடிப்படை முகாம் தளங்களில் ஒன்றிற்கு அருகிலுள்ள புல்வெளியாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 3,300 மீட்டர் (10,800 அடி) உயரத்தில், நங்க பர்வதத்தின் ராய்கோட் முகப்பில் மலையேற்றம் செய்பவர்களுக்கான தொடக்கப் புள்ளியாக இது செயல்படுகிறது. 1995 ஆம் ஆண்டில், பாக்கித்தான் அரசு இதனை ஒரு தேசியப் பூங்காவாக அறிவித்தது.[2]

இடம்[தொகு]

காரகோரம் நெடுஞ்சாலையில் உள்ள ராய்கோட் பாலத்திலிருந்து தொடங்கி கிராமம் தட்டு (தாட்டோ) வரை பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் மலையேற்றம் மூலம் இந்தப் பூங்காவை அணுகலாம். [3] [4] உள்ளூர் மக்கள் மட்டுமே பயன்படுத்தும் குறுகிய சரளை மலைப்பாதை பாலத்திலிருந்து கிராமத்திற்கு செல்கிறது. அவர்கள் பார்வையாளர்களை இதில் அழைத்துச் செல்கிறார்கள். 2013 ஆம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் இந்த கிரகத்தின் இரண்டாவது ஆபத்தான சாலையாக அறிவித்தது. [5] தாட்டோவிலிருந்து, தேவதை புல்வெளிவரை வரை ஐந்து கிலோமீட்டர் மலையேற்றத்தில் மூன்று முதல் நான்கு மணி நேரம் நடைபயணமாக இருக்கும். [4]இந்த புல்வெளி ராய்கோட் பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இது ராய்கோட் பனிப்பாறையின் ஒரு முனையில் நங்க பர்வதத்தில் இருந்து உருவாகிறது. இறுதியாக சிந்து ஆற்றில் விழும் ஒரு நீரோடைக்கு ஆதாரமாக இருக்கிறது. 1992 முதல், உள்ளூர்வாசிகள் இப்பகுதியில் முகாம் தளங்களை இயக்கி வருகின்றனர். [6]

சுற்றுலா[தொகு]

தேவதை புல்வெளியிலுள்ள குடிசைகளின் காட்சி

இந்தப் புல்வெளியில் ஆறு மாத சுற்றுலாக் காலம் ஏப்ரல் மாதம் தொடங்கி செப்டம்பர் இறுதி வரை தொடர்கிறது. "ராய்கோட் செராய்" என்று அழைக்கப்படும் 800 எக்டேர்கள் (2,000 ஏக்கர்கள்) பரப்பளவில் அமைந்துள்ள முகாம் தளத்தில் சுற்றுலாப் பயணிகள் தங்கிச் செல்கின்றனர். பூங்காவின் தளம், ஓரளவு வளர்ச்சியடைந்தாலும், முக்கியமாக உணவு, போக்குவரத்து மற்றும் தங்குமிட சேவைகளை வழங்குவதன் மூலம் சுற்றுலாவிலிருந்து சுமார் 17 மில்லியன் வருவாயை ஈட்டுகிறது. பூங்காவிற்கான சாலை முதல் சாரணத் தளபதி பிரிகேடியர் எம். அசுலம் கான், என்பவரால் கட்டப்பட்டது. இது இன்று உள்ளூர் மக்களால் பயன்படுத்தப்படுகிறது. காடுகளை பாதுகாக்கவும், சுற்றுலாவை மேம்படுத்தவும் மரங்கள் வெட்டுவதை உள்ளூர் சமூகம் தடுத்து நிறுத்தியுள்ளது. புல்வெளிகளைத் தவிர இந்த இடத்தின் முக்கிய ஈர்ப்பு நங்க பர்வதம் மலையின் காட்சியாகும். சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக இந்த புல்வெளியிலிருந்து மலையின் அடிவார முகாமுக்குச் செல்வார்கள்.

புகைப்படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Zofeen T. Ebrahim (July 2011). "Trekking to tranquility". Pakistan Wildlife News (Bioresource Research Center) 3 (7): 7. பன்னாட்டுத் தர தொடர் எண்:2077-9305. http://www.pbrc.edu.pk/pdf/BRC-Newsletter-July-2011.pdf. பார்த்த நாள்: 30 August 2013. 
  2. Kanak Mani Dixit (March–April 1995). "Objects of Desire in the Northern Areas". Himal Southasian (Nepal: Himal Association) 8 (2). பன்னாட்டுத் தர தொடர் எண்:1012-9804. 
  3. . 
  4. 4.0 4.1 Danial Shah (28 July 2013). "Over the top: Misreporting on location of Nanga Parbat attack". 
  5. "The Majesty of Pakistan's Fairy Meadows". 15 January 2016. 
  6. Jurgen Clemens; Marcus Nusser (1 December 2000). "Pastoral Management Strategies in Transition". in Eckart Ehlers, Herrmann Kreutzmann. High Mountain Pastoralism in Northern Pakistan. Franz Steiner Verlag. பக். 168–169, 186. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3515076623.