தேசிய கலை இலக்கியப் பேரவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய கலை இலக்கியப் பேரவை ஈழத்தில் உருவாகி செயற்படும் ஒரு முக்கியமான கலை இலக்கிய அமைப்பாகும். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட நூல்கள் இவ்வமைப்பால் வெளியிடப்பட்டுள்ளன. கவிதை, சிறுகதை, புதினம், ஆய்வு, அறிவியல், நாடகம் எனப் பலதரப்பட்ட நூல்கள் அவற்றுள் அடங்கும். தாயகம் சஞ்சிகையும் 1974இலும் பின் 1983இலிருந்தும் முப்பதாண்டுகளுக்கு மேலாக இவ்வமைப்பால் வெளியிடப்படுகிறது.

தோற்றம்[தொகு]

தேசிய ரீதியில் மக்கள் இலக்கியக் கோட்பாட்டை வரையறை செய்து அதனை கலை இலக்கிய அமைப்பு வாயிலாக முன்னெடுக்கும் முடிவு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு விவாதங்கள் மேற்கொள்ளப்பட்டு பலகலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பங்குகொண்டவர்களில் கே. ஏ. சுப்பிரமணியம், க. தணிகாசலம், க. கைலாசபதி, சி. கா. செந்திவேல், க. குணேந்திரராசா, என். கே. இரகுநாதன், கி. சிவஞானம், இ. செல்வநாயகம், அ. இராஜலிங்கம், வை. வன்னியசிங்கம், இளைய பத்மநாதன், க. சிவம், கே. டானியல், நந்தினி சேவியர், சி. நவரத்தினம், த. குணரத்தினம், க. தர்மகுலசிங்கம், கே.இரத்தினம், கு. சிவராசா, முருகுகந்தராசா, குட்டிக்கிளி போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். இத்தகைய கூட்டான கலந்துரையாடல் மூலம் 1973ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் தேசிய கலை இலக்கியப் பேரவை அமைப்பு ரீதியாகத் தோற்றுவிக்கப்பட்டது. அதன் இணைச் செயலாளர்களாக க. தணிகாசலம், க.குணேந்திரராசா ஆகியோரும் பொருளாளராக கி. சிவஞானமும் தெரிவு செய்யப்பட்டனர்.[1]


வெளி இணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்[தொகு]

  1. http://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D_1974-1999