தேக்கூர் சுப்பிரமணியம்
தேக்கூர் சுப்பிரமணியம் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் பெல்லாரி | |
பதவியில் 1952–1967 | |
பின்னவர் | வி. க. ர. வ. ராவ் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | உரவகொண்டா, சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா | 9 ஆகத்து 1900
இறப்பு | 24 திசம்பர் 1974 பெங்களூர் | (அகவை 74)
தேசியம் | இந்தியர் |
துணைவர் | மீனாட்சியம்மாள் |
கல்வி | வார்டுலா யுவர்நிலைப்பள்ளி, பெல்லாரி |
முன்னாள் கல்லூரி | சென்னை பச்சையப்பன் கல்லூரி, அரசு சட்டக் கல்லூரி |
வேலை | அரசியல்வாதி |
தேக்கூர் சுப்பிரமணியம் (Tekur Subramanyam ) ஓர் இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியாவின் பெல்லாரியைச் சேர்ந்த அரசியல்வாதியும் ஆவார். சுதந்திர இயக்கத்தில் இவர் ஈடுபட்டதற்காக, பல முறை பிரித்தானிய நிர்வாகத்தால் சிறையில் அடைக்கப்பட்டார். பல முறை பெல்லாரியின் அல்லிபுரம் சிறையில் இருந்துள்ளார். இவர், சுதந்திரத்துக்குப் பிந்தைய பெல்லாரி மக்களவைத் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக 1952 முதல் தொடர்ச்சியாக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் அரசியல் செயலாளராகவும் இருந்தார்.[1][2][3]
2014ஆம் ஆண்டில் இவரது வாழ்க்கை குறித்த புத்தகம் வெளியிடப்பட்டது. அதில் இதுவரை வெளிவராத கட்டுரைகளும், படங்களும் சுப்ரமணியத்துடன் தொடர்புடைய கடிதங்களும் இடம்பெற்றுள்ளன.
சுயசரிதை
[தொகு]தேக்கூர் சுப்பிரமணியம் 1900 ஆம் ஆண்டு ஆகத்து 9ஆம் தேதி அப்போதைய சென்னை மாகாணத்தின் (தற்போது ஆந்திரப் பிரதேசம்) அனந்தபூர் மாவட்டத்திலுள்ள உரவகொண்டாவில் பிறந்தார்.
சுதந்திரத்திற்கு முன்பு பிரபலமாக அறியப்பட்ட இவர், பல்லாரி சென்னை மாகாணத்தின் ஒரு பகுதியாக பெல்லாரி இருந்தபோது சென்னை மாகாணத்தில் தலைவராக இருந்தார். இவர் சென்னை காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் செயலாளராகவும், அப்போதைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்த ராஜாஜியின் (1937-1939) அரசியல் செயலாளராகவும் இருந்தார். சுதந்திரத்திற்குப் பிறகு, 1953இல் பல்லாரி பழைய மைசூர் மாநிலத்துடன் (தற்போது கர்நாடகா) இணைந்தபோது இவர் கர்நாடகாவில் ஒரு முக்கிய அரசியல் தலைவராக ஆனார். ஒரு தலைவராக இவர் காந்தி, நேரு, ராஜாஜி மற்றும் பிற தேசிய தலைவர்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தார்.
இவர் சுதந்திரப் போராட்டத்தில் பெரிய அளவில் பங்கேற்று நான்கு முறை சிறைவாசம் அனுபவித்து பல்லாரியில் உள்ள அல்லிபுரம் சிறை, மத்திய சிறை; வேலூர், மத்திய சிறை: தஞ்சாவூர் உட்பட பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார்.
இறப்பு
[தொகு]தேக்கூர் சுப்பிரமணியம் 24-12-1974 அன்று தனது 74வது வயதில் சிறு நோய்க்கு பின் பெங்களூரில் காலமானார்.
சான்றுகள்
[தொகு]- ↑ "This jailhouse has a rich past". 26 April 2010. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
- ↑ "A Congress bastion since 1952". Archived from the original on 26 January 2013. பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.
- ↑ "Caste will play a vital role in Bellary". பார்க்கப்பட்ட நாள் 4 June 2010.