உள்ளடக்கத்துக்குச் செல்

தென்னை சர்க்கரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தென்னை வெல்லம்

தென்னை சர்க்கரை (Coconut sugar (also known as coco sugar, coconut palm sugar, coco sap sugar or coconut blossom sugar) என்பது தென்னை மரத்தில் கிடைக்கும் மூலப்பொருகைக் கொண்டு தயாரிக்கப்படும் சர்க்கரை ஆகும். இதுபோல பனை, பேரீச்சை, ஈச்ச மரம், சாகோ பனை, சர்கரை பனை ஆகிய மரங்கில் இருந்து கிடைக்கும் மூலப்பொருட்களைக் கொண்டும் சர்க்கரை தயாரிக்கப்படுகிறது.

தென்னை சர்க்கரையானது பல நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. என்றாலும் தென்னை சர்க்கரையில் பிற இனிப்புகளில் உள்ளதைப்போல குறிப்பிடத்தக்க அளவு ஊட்டச்சத்துகள் இல்லை.

தயாரிப்பு

[தொகு]

தென்னை சர்கரையானது தென்னை மரத்தில் இருந்து இறக்கப்படும் நீர்மத்தில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

தென்னை சர்கெரைத் தயாரிப்பானது இரண்டு படிநிலைகளைக் கொண்டது.[1] பதநீர் இறக்குவது போல் தென்னங்குழைகளைச் சீவி அதிலிருந்து வடியும் நீரை எடுப்பது.[2] முதல் நிலை. பின்னர் சேகரித்த பதநீரை கொப்பறையில் வைத்துக் காய்ச்சும்போது அது பாகுபோல் திரண்டுவரும்போது. இதை ஆறவிட்டு, சர்க்கரைத் துகள்கள் தயாரிக்கப்படுகின்றன.

சர்க்கரை உள்ளடக்கம்

[தொகு]

தென்னை சர்கரையின் முதன்மைக் கூறுகளாக சுக்குரோசு (70–79%), குளுக்கோசு, மற்றும் புருக்டோசு (3–9% ஒவ்வொன்றும்) உள்ளன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Purnomo H (2007). "Volatile Components of Coconut Fresh Sap, Sap Syrup and Coconut Sugar". ASEAN Food Journal 14 (1): 45-49. http://www.ifrj.upm.edu.my/afjv14(1)2007/45-49.pdf. பார்த்த நாள்: 2018-06-06. 
  2. Beck L (16 June 2014). "Coconut sugar: Is it healthier than white sugar, or just hype?". The Globe & Mail. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தென்னை_சர்க்கரை&oldid=3297519" இலிருந்து மீள்விக்கப்பட்டது