தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்
தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம்
Güneydoğu Anadolu Bölgesi | |
---|---|
சிவப்பு நிறத்தில் துருக்கியின் தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் | |
துருக்கியின் (சிவப்பு நிறத்தில்) தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் | |
நாடு | துருக்கி |
பரப்பளவு | |
• மொத்தம் | 59,176 km2 (22,848 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 85,76,391 |
தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் (Southeastern Anatolia Region) (துருக்கியம்: Güneydoğu Anadolu Bölgesi) துருக்கி நாட்டின் 7 புவியியல் பிராந்தியங்களில் ஒன்றாகும். இது துருக்கியின் தென்கிழக்கில் அமைந்துள்ளது. இதன் பெரிய நகரம் காஜியான்டெப் ஆகும். பிற நகரங்கள் சான்லியுர்பா, தியார்பக்கிர், மர்தின் மற்றும் அதியமான் ஆகும். இப்பிராந்தியம் 7 மாகாணங்களைக் கொண்டுள்ளது. 59,176 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பிராந்தியத்தின் மக்கள் தொகை 85,76,391 ஆகும். இப்பிராந்தியத்தின் அத்யமான் மாகாணத்தில் உள்ள நெம்ருத் மலை துருக்கியின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகும்.
அமைவிடம்
[தொகு]இதன் மேற்கில் மத்தியதரைக் கடல் பிராந்தியம், வடக்கில் கிழக்கு அனடோலியா பிராந்தியம், தெற்கில் சிரியா மற்றும் ஈராக் நாடுகள் உள்ளது. இப்பிராந்தியம் 7 மாகாணங்களைக் கொண்டுள்ளது.
மாகாணங்கள்
[தொகு]- மார்தீன் மாகாணம்
- சான்லூர்பா மாகாணம்
- அத்யமான் மாகாணம்
- பத்மான் மாகாணம்
- தியர்பாகர் மாகாணம்
- காசியான்டெப் மாகாணம்
- சியர்ட் மாகாணம்
புவியியல் & தட்ப வெப்பம்
[தொகு]தென்கிழக்கு அனதோலியா பிராந்தியம் 59,176 km2 கொண்டது. இது துருக்கியின் இரண்டாவது சிறிய பிராந்தியம் ஆகும். இதன் கோடைக் காலம் கடும் வெப்பமும், குளிர்காலம் கடும் பனிப்பொழிவும் கொண்டது.
இதனையும் காண்க
[தொகு]- மத்திய அனதோலியா பிராந்தியம்
- கிழக்கு அனடோலியா பிராந்தியம்
- மத்தியத்தரைக் கடல் பிராந்தியம்
- ஏஜியன் பிராந்தியம்
- கருங்கடல் பிராந்தியம்
- மர்மரா பிராந்தியம்
- அனத்தோலியா
- மேல் மெசொப்பொத்தேமியா
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Southeastern Anatolia