அத்யமான் மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அத்யமான் மாகாணம்
Adıyaman ili
துருக்கியின் மாகாணம்
துருக்கியில் அத்யாமான் மாகாணத்தின் அமைவிடம்
துருக்கியில் அத்யாமான் மாகாணத்தின் அமைவிடம்
நாடுதுருக்கி
பிரிவுதென்கிழக்கு அனடோலியா பிரிவு
துணைப் பிரிவுகாசியான்டெப் துணைப்பிரிவு
அரசு
 • துருக்கி தேர்தல் மாவட்டம்அத்யமான்
 • ஆளுநர்மஹ்முத் சௌதார்
பரப்பளவு
 • மொத்தம்7,606.16 km2 (2,936.75 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்6,24,513
 • அடர்த்தி82/km2 (210/sq mi)
தொலைபேசி குறியீடு0416
வாகனப் பதிவு02

அத்யமான் மாகாணம் ( துருக்கியம்: Adıyaman ili , Kurdish ) என்பது தென்-மத்திய துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும் . இது 1954 இல் மாலத்யா மாகாணத்தைப் பிரித்து உருவாக்கப்பட்டது. [2] இதன் பரப்பளவு 7,606.16 km² ஆகும். மக்கள் தொகை 590,935 (2010 தோராயமாக) மக்கள் தொகையானது 1990 இல் 513,131 என இருந்தது. மாகாணத்தின் தலைநகரம் அத்யமான் நகரமாகும். இந்த மாகாண மக்களில் பெரும்பாலும் குர்திஷ் மக்களாவர். இதன் மக்கள் மத ரீதியாக பழமை விரும்பிகளாவர்.

பழங் காலத்திலிருந்தே இப்பகுதியில் மக்கள் வசித்து வந்தனர். இங்கு பல நாகரிகத்தினர் குடியேறினர். பயணிகளை ஈர்க்கும் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இங்கு உள்ளன. மாகாண்ணதில் உள்ள நெம்ருத் மலை காணத்தக்க ஒரு இடமாகும், இது காமஜீனின் அந்தியோகஸ் I தியோஸால் அமைக்கபட்ட சிலைகள் காப்பகத்திற்காக குறிப்பிடப்படுகிறது. இதை கஹ்தா நகரம் வழியாக அணுகலாம்.

பெரிய அடாடர்க் நீர்த்தேக்கத்தின் ஒரு கிளை அதையமனுக்கும் சம்சத் நகரத்துக்கும் இடையில் அமைந்துள்ளது.

அரசியல்[தொகு]

1950 கள் வரை, ஆத்யமன் மாலத்யா மாகாணத்திற்குட்பட்ட ஒரு நகரமாக இருந்தது. 1954 பொதுத் தேர்தலில் வென்ற ஜனநாயகக் கட்சிக்கு வாக்களித்ததற்கான வெகுமதியாக 1954 திசம்பர் முதல் நாள் இது ஒரு மாகாணமாக மாற்றப்பட்டது. [2]

அத்யமான் இஸ்லாமிய அரசியல்வாதியான நெக்மெட்டின் எர்பகனுக்கு ஒப்பீட்டளவில் அதிக வாக்குகளை அளித்துள்ளது. அவரது இயக்கம் (அப்பொழுது, தேசிய இரட்சிப்புக் கட்சி) 1973 ஆம் ஆண்டில் 15% வாக்குகளைப் பெற்று மைல்கல்லை எட்டியது. இந்த சுமாரான தொடக்கத்திற்குப் பிறகு சில ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கான வாக்குகள் படிப்படியாக அதிகரித்தது. 1980 ல் நடந்த இராணுவ சதித்திட்டத்தால் பாதிப்படைந்த பின்னர், எர்பகனின் கட்சி (இது நலன்புரி கட்சியாக மாறியது) 1994 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் முறையே 29.24% மற்றும் 27% வாக்குகளைப் பெற்று மாகாணத்தை வென்றது. [3] [4]

துருக்கிய பிரதமர் ரெசெப் தயிப் எர்டோகனின் ஏ.கே.பி 2004 உள்ளூர் தேர்தலில் 39.21% வாக்குகளைப் பெற்று வெற்றி ஈட்டினார். [5]

நிலவியல்[தொகு]

நெம்ருட் மலையின் சிகரத்திற்கு அருகில் சில சிலைகள்

அத்மன் மாகாணத்தில் 2,134 மீட்டர் உயரமுள்ள (7,001 அடி) மலையாக நெம்ருட் மலை உள்ளது.

மாவட்டங்கள்[தொகு]

அத்யமான் மாகாணத்தில் ஒன்பது மாவட்டங்கள் உள்ளன:

 • அத்யமான் (தலைநகர் மாவட்டம்)
 • பெஸ்னி
 • Ikelikhan
 • கெர்கர்
 • கோல்பாஸ்
 • கோத்தா
 • சம்சத்
 • சின்சிக்
 • டட்

குறிப்புகள்[தொகு]

 1. "Population of provinces by years - 2000-2018". 9 மார்ச் 2019 அன்று பார்க்கப்பட்டது.
 2. 2.0 2.1 "The Heritage of the Kingdom of Commagene - Adıyaman".[தொடர்பிழந்த இணைப்பு] பிழை காட்டு: Invalid <ref> tag; name "adiyaman" defined multiple times with different content
 3. "Adıyaman Seçim Sonuçları 1994" (துருக்கிஷ்). 8 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
 4. "Adıyaman Seçim Sonuçları 1999" (துருக்கிஷ்). 8 September 2013 அன்று பார்க்கப்பட்டது.
 5. "Adıyaman Seçim Sonuçları 2004" (துருக்கிஷ்). 8 September 2013 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அத்யமான்_மாகாணம்&oldid=3231247" இருந்து மீள்விக்கப்பட்டது