சான்லூர்பா மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சான்லூர்பா மாகாணம்
Şanlıurfa ili
துருக்கியின் மாகாணம்
Location of Şanlıurfa Province in Turkey
Location of Şanlıurfa Province in Turkey
நாடுதுருக்கி
பிராந்தியம்Southeastern Anatolia
SubregionŞanlıurfa
அரசு
 • Electoral districtŞanlıurfa
 • ஆளுநர்Güngör Azim Tuna
பரப்பளவு
 • மொத்தம்18,584 km2 (7,175 sq mi)
மக்கள்தொகை (2018)[1]
 • மொத்தம்20,35,809
 • அடர்த்தி110/km2 (280/sq mi)
தொலைபேசி குறியீடு00414
வாகனப் பதிவு63

சான்லூர்பா மாகாணம் (Şanlıurfa Province துருக்கியம்: Şanlıurfa ili ) அல்லது வெறுமனே உர்பா மாகாணம் என்பது தென்கிழக்கு துருக்கியில் உள்ள ஒரு மாகாணமாகும். இந்தன் தலைநகரம் சான்லூர்பா நகரம் ஆகும். இந்த நகரத்தின் பெயரையை இந்த மாகாணத்திற்கு இடப்பட்டுள்ளது. மாகாணத்தின் மக்கள் தொகை 1,845,667 (2014) ஆகும்.

ஆபிரகாமிய சமய தளங்களுக்கு இந்த மாகாணத்தின் பாலாக்லகல் போன்ற பகுதிகள் பிரபலமானவை. அங்கு நபி ஆபிரகாமை நிம்ரோட் என்பவரால் தீயில் எறியப்பட்டார். அப்போது அது தண்ணீராக மாறியதாக நம்பப்படுகிறது. இங்கு உள்ள மெவ்லிட்-ஐ ஹலில் பள்ளிவாசலுக்கு அடுத்த குகையில் ஆபிரகாம் பிறந்தார் எனப்படுகிறது . இந்த மாகாணத்தில் உள்ள சான்லூர்பா நகரின் வடகிழக்கில், சுமார் 12   கிமீ (7   மைல்) தொலைவில் உள்ள பெருவயிறு மலையானது வரலாற்றுக்கு முந்தைய இடமாகும், அங்கு மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகளில் இந்த இடத்தில் புதிய கற்காலத்தின் ஆரம்ப காலத்திலிருந்து 12,000 ஆண்டுகள் பழமையான கழ வனம் என அறியப்பட்டது. இது ஸ்டோன் ஹெஞ்ச்சிற்கு 6,000 ஆண்டுகள் முந்தைய உலகின் பழமையான கோயில் இருந்த இடமாக கருதப்படுகிறது.

இந்த மாகாணத்தின் மக்களை தொகையானது 1990 ஆண்டில் 1,001,455 ஆகும். இதில் மாவட்ட தலைநகரங்களில் 551,124, எனவும் கிராமங்களில் 450,331 எனவும் இருந்தது. 2000 ஆம் ஆண்டளவில், சான்லூர்பா மாகாணத்தின் மக்கள் தொகை 1,436,956 ஆகவும், உர்பா நகரத்தின் மக்கள் தொகை 829,000 எனவும் வளர்ந்தது. இந்த மாகாணத்தின் தலைநகரமாக உர்பா நகரம் உள்ளது. மாகாணத்தின் போக்குவரத்துக் குறியீடு 63 ஆகும்.

மாவட்டங்கள்[தொகு]

சான்லூர்பா மாகாணம் 13 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

நிலவியல்[தொகு]

இதன் பரப்பளவு 18,584   km² (7,173 சதுர மைல்கள்), கொண்டு தென்கிழக்கு அனடோலியாவின் மிகப்பெரிய மாகாணமாக உள்ளது:

  • வடக்கே அத்யமான் ;
  • தெற்கே சிரியா ;
  • கிழக்கே மார்டின் மற்றும் தியர்பாகர் ;
  • மேற்கே காஜியண்டெப் ;

தென்கிழக்கு அனடோலியா திட்டத்தின் பல முக்கிய கூறுகளை சான்லூர்பா கொண்டுள்ளதாக (துருக்கியம் Güneydogu Anadolu Projesi (GAP) இல்) வடிவமைக்கப்பட்டுள்ளது:

  • டைக்ரிஸ் மற்றும் யூப்ரடீஸ் நதிகளின் நீர்மின் ஆற்றலைப் பயன்படுத்துதல்;
  • விவசாயத்திற்கான நீர்ப்பாசனத்தை பெருமளவில் விரிவுபடுத்துதல்; மற்றும்
  • பிராந்தியத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துதல்.

அரசு நிதியளிக்கும் இந்த மிகப் பெரிய, வளர்ச்சித் திட்டத்தில் இந்த பரந்த, அரை வறண்ட பிராந்தியத்தில் நதிகளின் குறுக்கே அணை கட்டி நீரை திருப்பி விடுதல், நீர் மின் ஆற்றலை தயாரித்தல் மற்றும் பிற பயன்பாடுகளை உள்ளடக்கியதாக உள்ளது. (பின்னர் இந்த ஆறுகள் சிரியா மற்றும் ஈராக்கில் பாய்கின்றன). இந்த ஜிஏபி திட்டத்தில் 22 அணைகள், நூற்றுக்கணக்கான மைல் நீர்ப்பாசன பணிகள் போன்றவை உள்ளன.

ஜிஏபி திட்டத்துக்கு முன்பே, சான்லூர்பா மாகாணமானது ஜிஏபி பிராந்தியத்தில் பயிரிடப்பட்ட மற்றும் பயிரிடக்கூடிய நிலங்களில் மிகப்பெரிய பங்கைக் கொண்டிருந்தது. காரணம் அதன் சமவெளி நிலப்பாங்கு மற்றும் அதிக வளமான, விவசாய நிலம் போன்றவை ஆகும். சான்லூர்பா மற்றும் ஹரான் சமவெளியானது சுமார் 1,500  கிமீ² (579 சதுர மைல்கள்) பரப்பளவில் உள்ளது. இந்த சமவெளிகளுக்கு நீர்ப்பாசனம் செய்வது ஜிஏபி திட்டத்தின் மிக முக்கியமான கூறுகளில் ஒன்றாகும்.

1990 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, சான்லூர்பா மாகாணத்தில் 148,521 வீடுகள் உள்ளன, சராசரியாக ஒரு வீட்டில் 6.74 நபர்கள் உள்ளனர். 71% குடும்பத் தலைவர்கள் தங்கள் தொழிலை விவசாயம் என்று குறிப்பிட்டுள்ளனர். 1992 ஆம் ஆண்டில், துருக்கியில் நில உரிமையாளர்களின் நிலகுவிப்பு சான்லூர்பாவில் மிகுதியாக இருந்தது. இந்த மாகாணத்தில் நிலமற்றவர்களின் வீதம் 48% ஆகும். மாகாணத்தில் 5% குடும்பங்கள் 65% நிலத்தை வைத்திருக்கும் நிலையில், மக்களில் பெரும்பான்மையினர் (70%) மாகாணத்தின் நிலத்தில் 10% மட்டுமே வைத்திருந்தனர்.

1985 மற்றும் 1990 க்கு இடையில் சான்லூர்பாவின் சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதம் 4.6% ஆக இருந்தது, இது தேசிய மற்றும் பிராந்திய சராசரிகளை விட மிக அதிகமாகும்.

மக்கள்வகைப்பாடு[தொகு]

இந்த மாகாணமானது குர்துகள், அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் யாசிடி ஆகியோரைக் கொண்டுள்ளது. இந்த மாகாணத்தில் குர்துகள் பெரும்பான்மையாக உள்ளனர்.

குறிப்புகள்[தொகு]

  1. "Population of provinces by years - 2000-2018". பார்க்கப்பட்ட நாள் 9 மார்ச்சு 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சான்லூர்பா_மாகாணம்&oldid=2868431" இலிருந்து மீள்விக்கப்பட்டது