துறவற சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

துறவற சபை என்பது கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வுச் சபைகளில் ஒருவகை ஆகும். இவ்வகை சபையின் உறுப்பினர்கள், தங்கள் சபையின் தனிச் சட்டத்திற்கேற்ப, பகிரங்க வார்த்தைப்பாடுகள் எடுக்கின்றனர்; மற்றும் சகோதரக் கூட்டுவாழ்வு நடத்துகின்றனர்;[1]. இவ்வகை அர்ப்பணவாழ்வு தனியாகவோ அல்லது ஒரு சபையோடு சேர்ந்தோ வாழலாம் என்பது குறிக்கத்தக்கது. கத்தோலிக்க திருச்சபையில் அர்ப்பணவாழ்வுச் சபைகளின் மற்றுமொரு வகை உலகுசார் சபைகள் என்பது குறிக்கத்தக்கது.[2] மறைத்தூதுப்பணி வாழ்வுச் சமூகங்கள் துறவற சபைகளை ஒத்திருந்தாலும் அவற்றின் உறுப்பினர்கள் துறவற வார்த்தைப்பாடுகள் அளிப்பதில்லை.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Code of Canon Law, canon 607 §2
  2. Code of Canon Law, canon 710
  3. Code of Canon Law, canon 731 §1
"https://ta.wikipedia.org/w/index.php?title=துறவற_சபை&oldid=2163100" இருந்து மீள்விக்கப்பட்டது