கற்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருமணம் செய்துகொண்டு வாழும் வாழ்க்கையைக் கற்பு என்கிறோம். [1] கற்பு என்று சொல்லப்படுவது ஒரு ஆணையும் ஒரு பெண்ணையும் அவர்களது பெற்றோர் ஊரார் அறியும்படி சில கடமைகளைச் செய்து சேர்ந்து குடும்பம் நடத்தும்படி விடுவது. அப்போது பெண்ணின் பெற்றோர் தம் பெண்ணைக் கொடுக்க, ஆணின் பெற்றோர் அவளைப் பெற்றுக்கொள்வர். [2] பெண்ணைத் தரவேண்டியவர்கள் திருமணம் செய்து தராமல் காதலி காதலனுடன் சென்று வாழும் வாழ்க்கைச் சடங்கு முறையும் கற்பு எனப்படும். [3] வாழ்க்கையில் கற்புநெறிக் காலத்துல் என்னென்ன நிகழும் என்று தொல்காப்பியம் தொகுத்துக் கூறுகிறது.

திருமணமாகாத பெண் ஆண் உடலுறவு கொள்ளாதிருக்கும் கன்னித் தன்மையையும் திருமணம் ஆன பெண் கணவன் ஒருவனோடு மட்டும் உடலுறவு கொள்ளும் பழக்கத்தையும் இக்காலத்தில் கற்பு என்று கூறுவது நடைமுறையில் உள்ளது.

களவு, கற்பு[தொகு]

களவு, கற்பு என்று கருதுவது உள்ளத்தில் நிகழ்வதோர் அன்பின் உயர்வின்மீது கொள்ளப்படும் ஒழுக்கக் கோட்பாடு. [4] இதற்கு நக்கீரர் கூறும் விளக்கம்[5] சிறப்பாக உள்ளது

கடவுள் கற்பு[தொகு]

மனைவி கணவனுடன் மட்டும் உறவு கொண்டு வாழும் வாழ்க்கை கற்பு. [6] பரத்தை இவ்வாறு வாழ வேண்டியது இல்லை. அப்படி மாதவி போல வாழ்ந்த ஒருத்தியின் கற்பினைக் கடவுள் கற்பு என்று தலைமகளே பாராட்டிப் போற்றுகிறாள். தலைவின் மகன் தெருவில் விளையாடிக்கொண்டிருந்தான். தலைவனின் காதல் பரத்தை சிறுவனைப் பார்த்தாள். வருக என்று சொல்லிக்கொண்டு அவனைத் தூக்கித் தன் மார்போடு அணைத்துக்கொண்டாள். அதை மகனின் தாய் பார்ந்துவிட்டாள். "மாசு இல்லாதவளே! கடவுள் கற்பு உடையவள் நீ. ஏன் மயங்குகிறாய்? நீயும் இந்த மகனுக்குத் தாய்தான்" என்றாள். அதனைக் கேட்ட காதல் பரத்தை நாணித் தலை குனிந்தாள். [7]

கற்பு பற்றி சமயநெறி[தொகு]

இசுலாம்[தொகு]

இசுலாம் மதத்தில் கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இசுலாம் மதச்சட்டப்படி திருமணத்திற்கு முன் கற்பிழந்த பெண் கல்லால் எறிந்து கொல்லப்பட வேண்டும்.[8]

கிறிஸ்தவம்[தொகு]

கிறிஸ்தவ மதத்தை பொறுத்தவரை கற்பு மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. கடவுள் மனிதருக்கு தந்த பத்துக்கட்டளைகளில் ஏழாவது கட்டளை விபச்சாரம் செய்யாதே என்றும் ஒன்பதாவது கட்டளையில் பிறர் மனைவியை கவர்ந்திட விரும்பாதே என்றும் கட்டளையிடுகின்றன. இவை மனிதன் கற்போடு வாழ கட்டளையிடுகின்றன. [9]

மேற்கோள்[தொகு]

  1. திருக்குறள் - கற்பியல்
  2. கற்பு எனப்படுவது கரணமொடு புணர
    கொளற்கு உரி மரபின் கிழவன் கிழத்தியை
    கொடைக்கு உரி மரபினோர் கொடுப்ப கொள்வதுவே. தொல்காப்பியம், கற்பியல் 1
  3. கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
    புணர்ந்து உடன் போகிய காலையான. தொல்காப்பியம், கற்பியல் 2
  4. களவு கற்பெனக் கண்ணிய ஈண்டையோர்
    உள நிகழ் அன்பின் உயர்ச்சி மேன (இறையனார் களவியல் - நூற்பா-60)
  5. https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%85%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D.pdf/218
  6. தெய்வம் தொழால்; கொழுநனை மட்டும் தொழுது எழுவாள் (திருக்குறள்)
  7. யானும்
    பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
    அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
    மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே (அகநானூறு 16)
  8. https://d1.islamhouse.com/data/ta/ih_articles/single/ta_ekhtebar_ethbat_bakarah.pdf
  9. மத்தேயு நற்செய்தி ஐந்தாவது அதிகாரம் 23-வது வசனத்தில் இயேசு தனது போதனையில் ஏழாவது கட்டளையை இன்னும் ஆழமாக விளக்குகிறார்.
    ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: ஒரு பெண்ணை இச்சையுடன் நோக்கும் எவரும் தம் உள்ளத்தால் ஏற்கனவே அப்பெண்ணோடு விபச்சாரம் செய்தாயிற்று.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கற்பு&oldid=3445569" இலிருந்து மீள்விக்கப்பட்டது