துறவற மடம்
துறவற மடம் (convent) என்பது குருக்கள், மத சகோதரர்கள், மத சகோதரிகள், துறவிகள் அல்லது அருட்சகோதரிகளின் சமூகமாகும்; அல்லது கத்தோலிக்க திருச்சபை, லூதரன் தேவாலயங்கள், ஆங்கிலிக்க ஒன்றியம் ஆகியவற்றால் பயன்படுத்தப்படுகிற கட்டிடம் ஆகும்.[1]
சொற்பிறப்பு மற்றும் பயன்பாடு
[தொகு]இந்தச் சொல்லானது இலத்தீன் 'கன்வென்டஸ்' (conventus) என்பதில் இருந்து பழைய பிரெஞ்சு மொழி மூலம் பெறப்பட்டது. இதற்கு கூட்டிணைவு அல்லது ஒன்றுசேர்தல் என்று பொருள். பயணத்திலேயே பெரும்பாலான நேரத்தை செலவழிக்கும், மதத்தை பரப்புவதற்காய் வறுமையை ஏற்றுக்கொண்டு / கையேந்தி வாழ்பவர்களின் கூட்டிணைவை குறிப்பிடவே இச்சொல் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. ஆனால், ஒரு "மடாலயம்" அல்லது "அருட்சகோதரிகளின் மடம்" என்பது துறவிகளின் ஒரு சமூகமாகும். அதேசமயத்தில் ஒரு "convent" என்பது வறுமையைப் பூண்டுள்ள துறவிகள் மற்றும் ஆசாரியர்களின் / மதகுருக்களின் சமூகமாகும். "abbey", “priory", "canonry", “monastery" ஆகிய சொற்கள் மடாலயங்கள் மற்றும் துறவறங்களுக்கு பயன்படுத்தப்படலாம்.
19 ஆம் நூற்றாண்டில் இருந்து ஆங்கில பயன்பாட்டில், "கான்வென்ட்" என்ற வார்த்தை கிட்டத்தட்ட பெண்கள் வசிக்கும் கன்னியாஸ்திரிகளின் மடத்தைக் குறிப்பதாயும்,[2] அதே சமயத்தில் "மடாலயம்" அல்லது "மடம்" என்பவை ஆண்கள் வசிக்கும் துறவற இல்லத்தைக் குறிப்பதாயும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வரலாற்றுப் பயன்பாட்டில் இவ்வார்த்தைகள் பெரும்பாலும் இடம்மாற்றி உபயோகிக்கக்கூடியவை. குறிப்பாக "convent" என்ற சொல் ஆண்களின் மடத்திற்கும் பயன்படுத்தப்படலாம்.
குறிப்புகள்
[தொகு]- ↑ Evangelisti, Silvia (2008). Nuns: A History of Convent Life, 1450–1700 (in English). ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். p. 38-39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-953205-6.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Etym on line
வெளி இணைப்புகள்
[தொகு]- "Convent". கத்தோலிக்க கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்). (1913). நியூயார்க்: இராபர்ட் ஆபில்டன் நிறுவனம். . Catholic Encyclopedia. New York: Robert Appleton Company.
- Carmelite Monastery of the Sacred Hearts —- an example of a modern-day convent
- "Convent". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th). (1911). Cambridge University Press. . Encyclopædia Britannica (11th ed.). Cambridge University Press.