அருட்சகோதரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

அருட்சகோதரி அல்லது அருட்கன்னியர் என்போர் கிறித்தவத்தில் பெண் துறவியரை குறிக்கப்பயன்படும் சொல்லாகும். இவ்வகை துறவியர் பொதுவாக ஒரு சமூகமாக மடத்தில் கூடிவாழ்வர். இவர்கள் கற்பு, ஏழ்மை மற்றும் கீழ்ப்படிதல் வாக்களிப்பர். இப்பதம் கத்தோலிக்க திருச்சபை, மரபுவழி திருச்சபை, ஆங்கிலிக்கம், லூதரனியம் முதலிய கிறித்தவப்பிரிவுகளில் அதிகம் பயன்படுகின்றது. ஜைனம், பௌத்தம், தாவோயியம், இந்து முதலிய பிற சமயங்களிலும் இவ்வகையில் வாழ்வோர் உள்ளனர் என்றாலும் அவர்கள் பிற பெயர்களால் அழைக்கப்படுகின்றனர்.

இவர்கள் தவம், செபம், ஒறுத்தல் போன்ற கடவுளன்புப் பணிகளையும், கல்விக்கூடங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள் போன்றவை நடத்துதல் போன்ற பிறரன்புப்பணிகளையும் செய்கின்றனர். அருட்சகோதரிகளுக்கென்று பல துறவற சபைகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதமான பணிகளை செய்கின்றன.

துறவற சபைகள்[தொகு]

பிறர் அன்பின் பணியாளர் சபை அருட்சகோதரிகள்

கார்மேல் சபை[தொகு]

இச்சபையை நிறுவியர் புனித அவிலா தெரசா. லிசியே நகரின் தெரேசா, அவிலாவின் புனித தெரேசா கார்மேல் சபை அருட்சகோதரிகளில் புனிதர்களாக உயர்த்தப்பட்டவர்களில் முக்கியமானவர்கள்.[1][2]

பிறர் அன்பின் பணியாளர் சபை[தொகு]

இச்சபையை நிறுவியர் அருளாளர் அன்னை தெரசா.[சான்று தேவை]

மாசற்ற மரியாவினுடைய மகள்கள்[தொகு]

இச்சபை 1987-ம் ஆண்டு அருட்பணி. அருள் ராஜ் ஒ.எம்.ஏ அவர்களால் தொடங்கப்பட்டது.[3]

நல்ல ஆயனுடைய அருட்சகோதரிகள்[தொகு]

இச்சபை 1829-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.[4]

ஆதாரங்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருட்சகோதரி&oldid=1907959" இருந்து மீள்விக்கப்பட்டது