உள்ளடக்கத்துக்குச் செல்

துருகியோ, பெரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துருகியோ, பெரு
மேலிருந்து இடதிலிருந்து வலதாக: முதன்மை சதுக்கத்தில் விடுதலை நினைவுச் சின்னம், விக்டர் லார்கோவில் சவாரி செய்யும் குதிரை வணிகர்கள், பெருவிய பாசோ குதிரையுடன் மரினேரா நடனம், ஆணும் பெண்ணும் ஆடும் மரினேரா நடனம், இலத்தீன் அமெரிக்க கடலுணவு செவிச்சே, கபலிதோ தெ தொதுரா கட்டுமர அலைச்சறுக்கு, சூரியக் கோவில், உச்ச நீதிமன்றம்- லா லிபர்டெடு, துருகியோ வசந்த விழா, குதவழிப் பாலுறவு காட்டும் மோசிக்கா பீங்கான் பொம்மை, அடிமைத்தன மீட்பு மாளிகை, கடலோர நகரம் யுவான்சாக்கோவின் காட்சி, நிலவுக் கோவிலில் தீட்டப்பட்டுள்ள கடவுள் ஐ அபேக், தொல்லியல் களம் சான்சானில் காவலர்கள், பேசியோ பிசாரோ நடைபாதைச் சாலை.
மேலிருந்து இடதிலிருந்து வலதாக: முதன்மை சதுக்கத்தில் விடுதலை நினைவுச் சின்னம், விக்டர் லார்கோவில் சவாரி செய்யும் குதிரை வணிகர்கள், பெருவிய பாசோ குதிரையுடன் மரினேரா நடனம், ஆணும் பெண்ணும் ஆடும் மரினேரா நடனம், இலத்தீன் அமெரிக்க கடலுணவு செவிச்சே, கபலிதோ தெ தொதுரா கட்டுமர அலைச்சறுக்கு, சூரியக் கோவில், உச்ச நீதிமன்றம்- லா லிபர்டெடு, துருகியோ வசந்த விழா, குதவழிப் பாலுறவு காட்டும் மோசிக்கா பீங்கான் பொம்மை, அடிமைத்தன மீட்பு மாளிகை, கடலோர நகரம் யுவான்சாக்கோவின் காட்சி, நிலவுக் கோவிலில் தீட்டப்பட்டுள்ள கடவுள் ஐ அபேக், தொல்லியல் களம் சான்சானில் காவலர்கள், பேசியோ பிசாரோ நடைபாதைச் சாலை.
துருகியோ, பெரு-இன் கொடி
கொடி
துருகியோ, பெரு-இன் சின்னம்
சின்னம்
அடைபெயர்(கள்): எக்காலத்தும் இளவேனில் நிலவும் தலைநகரம், பெருவின் பண்பாட்டுத் தலைநகரம்,[1] மரினேரா நடனத் தலைநகரம், தகுதிசார் நகரமும் தாய்நாட்டிற்கு நம்பிக்கைக்குரியதும்,[2] பெருவிய பாசோ குதிரையின் தொட்டில்,[3] விடுதலைத் தொட்டில், பெருவின் நீதித்துறை தொட்டில்[4]
நாடு பெரு
நிர்வாக மண்டலம்லா லிபெர்டாடு
மாகாணம் துருகியோ
மாவட்டம் துருகியோ
எசுப்பானிய நிறுவல்நவம்பர் 1534 - டியேகோ டெ அல்மாக்ரோ[5]
அரசு
 • வகைமேயர்–நகர மன்றம்
 • மேயர்சீசர் அகுனா பெரால்டா
பரப்பளவு
 • மாநகரம்
1,100 km2 (400 sq mi)
ஏற்றம்
34 m (112 ft)
மக்கள்தொகை
 (2014)
 • தரவரிசைபெருவில் இரண்டாவது
 • நகர்ப்புறம்
7,88,236[6]
 • பெருநகர்
9,49,498[7]
 • பெருநகர் அடர்த்தி837/km2 (2,170/sq mi)
நேர வலயம்ஒசநே-5 (PET)
சிப் குறியீடு
13001
இடக் குறியீடு044
பாதுகாவல் புனிதர்கள்சான் வாலென்டின்[8]
லா போர்த்தாவின் கன்னி[9]
பெருநகரப் பகுதிதுருகியோ மெட்ரோபொலிடனோ
ஒன்றிணைந்த மாவட்டங்கள்[10]துருகியோ மாவட்டம்
விக்டர் லார்கோ
யுவான்சாக்கோ
மோச்சே
லா எசுபெரன்சா
லாரெடோ
எல் போர்வெனிர்
சலாவெர்ரி
பிளோரென்சியா டெ மோரா
இணையதளம்துருகியோ நகராட்சி
சில குறிப்புகள்:
-இந்த நகரம் "நியூ காஸ்டிலாவின் ட்ரிவிக்சிலோ" என நிறுவப்பட்டது[11]

-இந்த நகரம் திசம்பர் 6, 1534இல் நிறுவப்பட்டதாக சில ஆசிரியர்கள் கூறுகின்றனர்

அண்மைய இடங்கள்
  • யுவான்சாக்கோ கடற்கரை
  • புவெனஸ் ஐரிஸ், துருகியோ
  • கொனாச்சே ஏரி
  • சான் சான் தொல்லியல் களம்

துருகியோ (Trujillo) பெருவின் வடமேற்கே உள்ள கடலோர நகரமாகும். இது லா லிபெர்டாடு மண்டலத்தின் தலைநகரமாகும். நாட்டின் மிகவும் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது மையமாக விளங்குகின்றது.[12] பெருவின் மிகுந்த மக்கள்தொகை கொண்ட பெருநகரப் பகுதிகளில் இரண்டாவதாக உள்ளது. மோச்சே பள்ளத்தாக்கில் அமைதிப் பெருங்கடலின் முகத்துவாரத்தில் மோச்சே ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது. இங்குதான் இன்கா பேரரசு வரலாற்றுக்காலத்திற்கு முந்தைய பண்பாட்டு மையங்களான மோச்சே நாகரிகமும் சிமூ நாகரிகமும் தழைத்திருந்தன.[13]

1820ஆம் ஆண்டு திசம்பர் 29 அன்று துருகியோவின் வரலாற்று மையத்தில் எசுப்பானியாவிலிருந்து துருகியோவின் விடுதலை அறிவிக்கப்பட்டது; விடுதலைக்கு இந்த நகரம் ஆற்றிய பணிக்காக 1822இல் குடியரசின் நாடாளுமன்றம் "தகுதிசார் நகரமும் தாய்நாட்டிற்கு (பெருவில் தந்தைநாடு) நம்பிக்கைக்குரியதும்",[14] என் பட்டத்தை வழங்கியது. பெருவின் நீதித்துறை பிறந்த இடமாகவும் கருதப்படுகின்றது. நாட்டின் தலைநகரமாக இருமுறை விளங்கியது. 1932இல் துருகியோவில் புரட்சி நிகழ்ந்தது.

துருகியோ "எக்காலத்தும் இளவேனில் நிலவும் தலைநகரம்" எனவும்,[15] பெருவின் பாரம்பரிய நடனமான "மரினேரா நடனத் தலைநகரம்" எனவும், தனித்துவமான பெருவிய பாசோ குதிரையின் தொட்டில் எனவும்,[3] "பெருவின் பண்பாட்டுத் தலைநகரம்" எனவும்[1] அறியப்படுகின்றது. இங்கு பல தேசிய, பன்னாட்டு பண்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தேசிய மரினேரா விழா, திருகியோ வசந்த விழா, துருகியோ பன்னாட்டு புத்தகக் கண்காட்சி,[16][17] இங்கு இடம் பெறுகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்கு உணவகங்களும் தங்கு விடுதிகளும் நிறைந்துள்ளன.

பெருவின் இரு முதன்மை தொல்பொருளியல் களங்களுக்கு அண்மையில் இந்த நகரம் அமைந்துள்ளது; தொன்மைக்கால சுடப்படாத செங்கற் நகரங்களில் பெரியதான சான் சான் 1986இல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டுள்ளது; பெருவிலுள்ள மிகப் பெரும் சுடப்படாத செங்கற் பிரமிடுகளான சூரிய,சந்திரக் கோயில்கள்.[18]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 "Ministerio Público – Fiscalía de la Nación: Información del distrito judicial La Libertad". Archived from the original on 2012-05-14. பார்க்கப்பட்ட நாள் 15 ஏப்ரல் 2012. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. Luis Alva Castro (2003). "LEYES DE LA LIBERTAD" (in ஸ்பானிஷ்). Archived from the original on 14 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 September 2012.
  3. 3.0 3.1 Tourist Climate Guide – Perú, Page 115 http://www.senamhi.gob.pe/?p=0702
  4. "History of Judiciary in Perú". Archived from the original on 4 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 29 March 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |año= (help)
  5. Newspaper La Industria (ed.). (Spanish)Napoleón Cieza Burga:Fundación de Trujillo no fue el 5 de marzo. Archived from the original on 8 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 April 2012. {{cite book}}: Check date values in: |archivedate= (help); Cite has empty unknown parameter: |año= (help)
  6. "Perú: Estimaciones y Proyecciones de Población Total por Sexo según Principales Ciudades 2000-2015" (in ஸ்பானிஷ்).
  7. INEI (ed.). "Perú: Estimaciones y Proyecciones de Población por Sexo, Según Departamento, Provincia y Distrito,2000-2015".
  8. "San Valentín Patrono de Trujillo y el Terremoto de 1619 (San Valentín Patron of Trujillo and the Earthquake of 1619)" (in spanish). 25 May 2012. {{cite web}}: Cite has empty unknown parameter: |editorial= (help)CS1 maint: unrecognized language (link)
  9. "Virgen de La Puerta (Virgin of La Puerta)" (in spanish). 25 May 2012. Archived from the original on 17 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 23 மே 2016. {{cite web}}: Cite has empty unknown parameter: |editorial= (help)CS1 maint: unrecognized language (link)
  10. "Trujillo Metropolitan districts (page 15)" (PDF). Archived from the original (PDF) on 24 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. Historia General del Perú – Garcilaso de la Vega. பார்க்கப்பட்ட நாள் 27 de April de 2012. {{cite book}}: Check date values in: |accessdate= (help); Cite has empty unknown parameter: |año= (help)
  12. Perú: Estimaciones y Proyecciones de Población Total por Sexo de las Principales Ciudades, 2000-2015 (PDF). INEI. 2012. p. 50. Archived from the original (PDF) on 2021-02-24. பார்க்கப்பட்ட நாள் 2016-05-23.
  13. "Chan Chan : Capital of Kingdom Chimu – UNESCO". 29 March 2012.
  14. "Sucesos, información histórica", RPP Noticias, Reviewed July 29, 2008.
  15. "Trujillo, la ciudad de la eterna primavera(Trujillo, City of the everlasting Spring) – La Republica" (in spanish). La República-Perú. 19 April 2012. http://www.larepublica.pe/05-03-2012/trujillo-celebra-477-aniversario-de-fundacion. 
  16. El Portavoz, Sobre la IV Feria Internacional del Libro de Trujillo பரணிடப்பட்டது 2012-03-01 at the வந்தவழி இயந்திரம். Reviewed July 10, 2009.
  17. Feria del Libro de Trujillo, Información general பரணிடப்பட்டது 2009-02-12 at the வந்தவழி இயந்திரம். Reviewed July 10, 2009.
  18. "DESCUBRE PERU Un país...muchos destinos -Información turística de Trujillo" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2012-07-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=துருகியோ,_பெரு&oldid=3642425" இலிருந்து மீள்விக்கப்பட்டது