தீபிகா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தீபிகா குமாரி
Purnima mahato with deepika kumari at world cup final,istanbul.jpg
இசுதான்புல் உலகக் கோப்பை இறுதியில் தீபிகாவும் (இடது) பூர்ணிமா மகதோவும்
தனித் தகவல்கள்
தேசியம் இந்தியர்
பிறந்த நாள் சூன் 13, 1994 (1994-06-13) (அகவை 22)
பிறந்த இடம் ராஞ்சி
வசிப்பிடம் ராஞ்சி, ஜார்க்கண்ட், இந்தியா
உயரம் 1.61 m (5 ft 3 in) (2010)
எடை 56 kg (123 lb) (2010)
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டு வில்வித்தை
சங்கம் டாட்டா விற்கலை அகாதமி
அணி இந்திய விற்கலை மகளிர் அணி
தொழில்முறையாக மாறியது 2006
 
பதக்கங்கள்
மகளிர் விற்கலை
 இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கம் 2010 தில்லி மகளிர் பின்வளை தனியாள்
தங்கம் 2010 தில்லி மகளிர் பின்வளை அணி
வெண்கலம் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மகளிர் பின்வளை அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலம் 2010 குவாங்சௌ பின்வளை அணி

தீபிகா குமாரி இந்தியாவைச் சேர்ந்த ஒரு வில்வித்தை விளையாட்டு வீராங்கனை. இவர் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். இவர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனியாட் பிரிவிலும் குழுவாகவும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இவர் விற்கலையில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்தார்.[1] தற்போது உலகளவில் ஏழாம் இடத்தில் உள்ளார்.[2][3]

2013 ஜூலை 22-ம் தேதி, கொலம்பியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை விற்கலைப் போட்டியின் மூன்றாவது கட்டத்தில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றது. [4]

2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய விளையாட்டுத் துறையில் இரண்டாவது மிக உயரிய விருதான அருச்சுனா விருது வழங்கப்பட்டுள்ளது.[5] பெப்ரவரி 2014 இல் இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்களின் கூட்டமைப்பு அந்தாண்டின் மிகச்சிறந்த விளையாட்டாளராக தீபிகாவை கௌரவித்தது.[6] 2016இல் இவருக்கு இந்தியக் குடிமை விருதான பத்மசிறீ வழங்கியது. [7]

இளமைக் காலம்[தொகு]

ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சிவநாராயண் மகதோவிற்கும் ராஞ்சி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய கீதா மகதோவிற்கும் மகளாகப் பிறந்தார். இவர்களது வசிப்பிடம் ராஞ்சியிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள ராட்டு சாட்டி சிற்றூரில் உள்ளது. சிறு வயதில் மாங்காய்களைப் பறிப்பதற்காக கற்களை குறிபார்த்து செலுத்துவதில் திறமை பெற்றிருந்தார்.[8] துவக்கத்தில் தீபிகாவின் கனவை நனவாக்குவதற்கு பெற்றோர்கள் நிதிக்குறைவால் அவதியுற்றனர். பல நேரங்களிலும் தங்கள் அடிப்படைத் தேவைகளை தியாகம் செய்து தீபிகாவிற்கு வேண்டிய விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தந்தனர்; இதனால் தீபிகா வீட்டில் செய்த மூங்கில் வில், அம்புகளைக் கொண்டு பயிற்சி மேற்கொண்டார். டாட்டா விற்கலை அகாதமியில் இருந்த தீபிகாவின் உறவினர் வித்தியா குமாரி தீபிகாவின் முறையான பயிற்சிக்கு உதவினார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_குமாரி&oldid=2057574" இருந்து மீள்விக்கப்பட்டது