தீபிகா குமாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீபிகா குமாரி
இசுதான்புல் உலகக் கோப்பை இறுதியில் தீபிகாவும் (இடது) பூர்ணிமா மகதோவும்
தனித் தகவல்கள்
தேசியம்இந்தியர்
பிறந்த நாள்சூன் 13, 1994 (1994-06-13) (அகவை 29)
பிறந்த இடம்ராஞ்சி
வசிப்பிடம்ராஞ்சி, ஜார்க்கண்ட், இந்தியா
உயரம்1.61 m (5 அடி 3 அங்) (2010)
எடை56 kg (123 lb) (2010)
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவில்வித்தை
சங்கம்டாட்டா விற்கலைப் பயில்கழகம்
அணிஇந்திய விற்கலை மகளிர் அணி
தொழில்முறையாக மாறியது2006
 
பதக்கங்கள்
மகளிர் விற்கலை
நாடு  இந்தியா
பொதுநலவாய விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி மகளிர் கூட்டுவில் தனியாள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 தில்லி மகளிர் கூட்டுவில்அணி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மகளிர் கூட்டுவில் அணி
ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2010 குவாங்சௌ கூட்டுவில் அணி

தீபிகா குமாரி இந்தியாவைச் சேர்ந்த ஒரு வில்வித்தை விளையாட்டு வீராங்கனை. இவர் இந்தியாவின் சார்க்கண்டு மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் பிறந்தார். இவர் 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் தனியாட் பிரிவிலும் குழுவாகவும் தங்கப் பதக்கம் வென்றார். மேலும் இவர் விற்கலையில் உலக அளவில் முதல் இடத்தில் இருந்தார்.[1] தற்போது உலகளவில் ஏழாம் இடத்தில் உள்ளார்.[1][2]

2013 ஜூலை 22-ம் தேதி, கொலம்பியாவில் நடைபெற்ற உலகக் கோப்பை விற்கலைப் போட்டியின் மூன்றாவது கட்டத்தில் பங்கேற்றுத் தங்கப்பதக்கம் வென்றார். இந்தப் போட்டியில் இந்தியா நான்காவது இடத்தைப் பெற்றது.[3]

2012ஆம் ஆண்டில் இவருக்கு இந்திய விளையாட்டுத் துறையில் இரண்டாவது மிக உயரிய விருதான அருச்சுனா விருது வழங்கப்பட்டுள்ளது.[4] பெப்ரவரி 2014 இல் இந்திய வணிக மற்றும் தொழிலகக் கழகங்களின் கூட்டமைப்பு அந்தாண்டின் மிகச்சிறந்த விளையாட்டாளராக தீபிகாவை கௌரவித்தது.[5] 2016இல் இவருக்கு இந்தியக் குடிமை விருதான பத்மசிறீ வழங்கியது.[6]

இளமைக் காலம்[தொகு]

தானுந்து ஓட்டுநர் சிவநாராயண் மகதோவிற்கும் ராஞ்சி மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய கீதா மகதோவிற்கும் மகளாகப் பிறந்தார். இவர்களது வசிப்பிடம் ராஞ்சியிலிருந்து 15 கிமீ தொலைவிலுள்ள ராட்டு சாட்டி சிற்றூரில் உள்ளது. சிறு வயதில் மாங்காய்களைப் பறிப்பதற்காக கற்களை குறிபார்த்து செலுத்துவதில் திறமை பெற்றிருந்தார்.[7] தொடக்கத்தில் தீபிகாவின் கனவை நனவாக்குவதற்கு பெற்றோர்கள் நிதிக்குறைவால் அவதியுற்றனர். பல நேரங்களிலும் தங்கள் அடிப்படைத் தேவைகளைத் தியாகம் செய்து தீபிகாவிற்கு வேண்டிய விளையாட்டுப் பொருட்களை வாங்கித் தந்தனர்; இதனால் தீபிகா வீட்டில் செய்த மூங்கில் வில், அம்புகளைக் கொண்டு பயிற்சி மேற்கொண்டார். டாட்டா விற்கலை பயில்கழகத்தில் இருந்த தீபிகாவின் உறவினர் வித்தியா குமாரி தீபிகாவின் முறையான பயிற்சிக்கு உதவினார்.

வாழ்க்கைப் பணி[தொகு]

தீபிகா தன் முதல் எழுச்சியை அர்ஜுன் வில்வித்தை கல்விக் கழகத்தில் நுழைவில் பெற்றார். இந்நிறுவனம் கர்சவானில் மாநில முதல்வர் திரு அர்ஜுன் முண்டாவின் துணைவியாரான மீரா முண்டா அவர்களால் நிறுவப்பட்டது. அனால் அவரது தொழில்முறை வில்பயிற்சி 2006 இல் ஜம்செட்பூரில் உள்ள டாட்டா வில்வித்தை நிறுவனத்தில் சேர்ந்தபோது தான் தொடங்கியது. இங்கு தான் அவர் உரிய சீருடையிலும் கருவிகளுடனும் தன் வில்பயிற்சியை மேற்கொண்டார். இங்கு அவர் 500 உரூபாய் நல்கைத் தொகையையும் பெற்றார். அவர் மூன்று ஆண்டுகள் கழித்து 2009 இல்தான் அதாவது அடிப்படை உலகப் பயிற்சி வீரர் தகவைப் பெற்ற பிறகு தான் வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.[8]

தனியர்ச் செயல்திறக் கால நிரல்[தொகு]

போட்டி 2010 2011 2012 2013 2014 2015 வீவீ
உலக வில்வித்தை போட்டிகள்
ஒலிம்பிக் விளையாட்டுகள் 1R 0/1
உலகத் தகைமைகள் 1R 3R 3R 1/3
உலகக் கோப்பை
கட்டம் 1 3R QF 2nd 0/4
கட்டம் 2 QF 3R W 2R 3R 3rd 2/6
கட்டம் 3 3R 2nd QF 1/3
கட்டம் 4 2nd 3rd QF 3rd 34
உலகக் கோப்பை இறுதி QF 2nd 2nd 2nd DNQ 2nd 4/5
ஆண்டு முடிவில் உலகத் தரவரிசை 4 5 2 3

வீவீ=வீழ்த்து வீதம்

சாதனைகள்[தொகு]

மெக்சிகோவில் உள்ள மேரிடாவில் நடந்த 2006 உலக வில்வித்தைக் கோப்பை இளையோர் கூட்டுவில் போட்டியில் பாள்டன் ஆன்சுடாவிற்குப் பிறகு வென்ற இரண்டாம் இந்திய வீராங்கனை ஆவார்.[9]

அமெரிக்க ஒன்றிய நாட்டில் 2009 இல் உட்டாவில் உள்ள ஓகுடெனில் நடந்த 11 ஆம் இளையோர் உலக வில்வித்தைப் போட்டியில் தீபிகா தன் 15 ஆம் அகவையிலேயே வெற்றிபெற்றார். மேலும் இவர் பெண்கள் கூட்டுவில் குழுப் போட்டியிலும் தோலா பானர்ஜியுடனும் பாபேலா தேவியுடனும் இணைந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

தில்லி பொதுநலவாயத்து விளையாட்டுகளில் தீபிகா இரண்டு தங்கப் பதக்கங்ளை வென்றார். இதில் ஒன்று பெண்தனியர் விளையாட்டு சார்ந்தது; மற்றொன்று பெண்கள் குழு கூட்டுவில் போட்டி சார்ந்தது . இதற்காக இவர் 2010 இல் பொநவி (பெண்கள்) சார்ந்த ஈடிணையற்ற செயல்திறத்துக்காக சகாரா விளையாட்டு விருது விழாவில் பாராட்டப்பட்டார்.

பின்னர் சீனா, குவாங்சௌவில் 2019 இல் நடந்த ஆசிய விளையாட்டுகளில் பெண்கள் தனியர் வில்வித்தையில் வெண்கலப் பதக்கத்தை வட கொரியாவைச் சேர்ந்த குவான் அன்-சில்லிடம் இழந்தார். ஆனால் இந்திய கூட்டுவில் வித்தைக் குழுவின் சார்பாக இரிமில் புருயூலி, தோலா பானர்ஜி ஆகிய இருவருடன் இணைந்து விளையாடி, தீபிகா சீனாவின் தைபேயை 218–217 என வெண்கலப் பதக்க விளையாட்டில் பின்வாங்கச் செய்து அயோத்தி வில்வித்தை நெடுக்கத்தில் அரங்கு நிறைவு செய்தார். (அரங்கு நிறைவு=முதல் மூன்றாம் இடத்தில் ஒன்றைப் பிடித்தல்)

தீபிகா முதன்முதலாக, 2012 மே மாத்த்தில் உலகக் கோப்பையை வென்று தனியர் கூட்டுவில் தங்கப் பதக்கத்தை துருக்கி, அந்தாலியாவில் வென்றார். இவர் அப்போது கொரியாவின் இலீ சுங்-ழின்னை இறுதியில் ஆறுக்கு நான்கு இலக்கு பெற்று வீழ்த்தினார்.[10] பின்னர் 2012 இல் பெண்கள் கூட்டுவில் வித்தையில் உலக முதன்மையை எட்டினார்.

தீபிகா 2012 இலண்டம் ஒலிம்பிக்கில் பெர்ம்பிரித்தானியாவைச் சேர்ந்த அமி ஆலிவரிடம் தொடக்கச் சுற்றிலேயே காய்ச்சலாலும் கடுங்காற்றினாலும் தோற்றார்.[11][12]

கொலம்பியாவில் மெடல்லினில் 2013 ஜூலை 22 இல் நடந்த வில்வித்தை உலகக் கோப்பை கட்டம் மூன்றில் இவர் தங்கப் பதக்கத்தை வென்றார். இங்கு இந்தியா நான்காம் இடத்தைப் பிடித்தது.[13] இவர் 2013 செப்டம்பர் 22 இல் 4-6 இலக்கு பெற்று தென்கொரியாவின் யுன் ஓக்-ஈ யிடம் தோற்று 2013 FITA வில்வித்தை உலகக் கோப்பையில் வெள்ளிப் பதக்கத்துடன் அமைதியுற நேர்ந்தது இது இவர் பங்குபற்றிய பல வில்வித்தை உலக்க் கோப்பை இறுதிகளில் பெற்ற மூன்றாம் வெள்ளிப் பதக்கமாகும்.[14]

தீபிகா 2014 இல் ஃபோர்பேசி (இந்தியா) நட்த்திய நிகழ்வில் 30க்கு 30 பெற்றவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[12] என்றாலும், தேசிய அளவுத் தகுதியில் முதல் நான்காம் இடத்துக்கும் அப்பால் மட்டுமே வந்ததால் 2014 இந்தியக் குழுவில் சேர இயலவில்லை .[15]

தீபிகா 2015 இல் 2915 வில்வித்தை உலக்க் கோப்பியின் இரண்டாம் கட்டத்தில் தனியர் ஆட்டத்தில் முதலில் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார். மேலும் கோபன்வாகனில் நடந்த 2015 உலக வில்வித்தை போட்டிகளில், இலட்சுமிராணி மாய்கி, இரிமில் புரியூலி ஆகியோர் இணைந்த குழுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதில் மிகக் குறுகிய இழப்பில், உருசியாவுடன் போட்டியிட்டு 5க்கு 4 இலக்கு பெற்று தங்கப் பதக்கத்தை இழக்க நேர்ந்த்து. இதே ஆண்டின் பின்னரைப் பகுதியில், அதாவது 2015 நவம்பரில் ஆசிய வில்வித்தைப் போட்டிகளில் உலகக் கோப்பை இறுதியில் ஜயந்தா தாலுக்தாருடன் இணைந்து கூட்டுவில் கலப்புக் குழு ஆட்ட்த்தில் இவர் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.

சாங்காயில் நடந்த 2016 வில்வித்தை உலகக் கோப்பை முதல் கட்டத்தில் தீபிகா 2016 ஏப்பிரலில் கி போ-பேவுக்குச் சமமான உலக இலக்கை (686/720) பெண்கள் கூட்டுவில் நிகழ்வில் எட்டினார்.[16]

இவர் 2016 இரியோ ஒலிம்பிக் குழுவில் ஒருவராகத் தேர்வு செய்யப்பட்டார்.[17] தீபிகா குமாரி, பாம்பேலா தேவி இலைசுராம், இலட்சுமிராணி மாய்கி இணைந்த இந்தியப் பெண்கள் கூட்டுவில் குழு ஏழாம் தரவரிசை பெற்றுள்ளது. இந்தக் குழு 16 ஆம் சுற்றில் கொலம்பியாவை வென்றது.ஆனால் உருசியாவுடன் காலிறுதிப் போட்டியில் தோல்வி கண்டது.[18]

தனியர் பெண்கல் வில்வித்தையில், 64 ஆம் சுற்றில் இலிதுவேனியாவின் கிறித்தைன் ஏசெபுவாவுடன் போட்டியிட்டு 6-4 இலக்கில் வான்புகழ் பெருமையுடன் வென்றார். அடுத்த சுற்றில் இத்தாலியின் குவேந்தலினா சார்த்தருடனான போட்டியில் மிக எளிதாக வீழ்த்தப்பட்டார். இவர் முதல் சுற்றில் எளிதாக தோன்றினாலும் அடுத்த மூன்று சுற்றுகளில் 6-2 இலக்கு அடைந்து முடிவில் வென்றார்.[19] என்றாலும் 16 ஆம் சுற்றில் சீனா, தைப்பேயின் தான் யா-திங் அவர்களிடம் 0-6 இலக்கு பெற்ரு தோற்றார்.[20]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "India's Deepika Kumari becomes World No. 1 archer". 21 June 2012 இம் மூலத்தில் இருந்து 19 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120819003408/http://sports.ndtv.com/othersports/othersports/item/192199-indias-deepika-kumari-becomes-world-no-1-archer. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 6 ஆகஸ்ட் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120806010101/http://www.archery.org/index.asp?link_id%3D60. பார்த்த நாள்: 22 July 2012. 
  3. உலக கோப்பை வில்வித்தை போட்டியில் தங்கப்பதக்கம்
  4. "Khel Ratna award for Vijay, Yogeshwar". IBNLive. Archived from the original on 2012-09-01. பார்க்கப்பட்ட நாள் 2016-04-28.
  5. "FICCI announces the Winners of India Sports Awards for 2014". IANS. news.biharprabha.com. பார்க்கப்பட்ட நாள் 14 February 2014.
  6. "Padma Awards 2016". Press Information Bureau, Government of India. 2016. பார்க்கப்பட்ட நாள் February 2, 2016.
  7. "Deepika Kumari: From mangoes to CWG gold", The Siasat times, 10 October 2010, Retrieved 10 October 2010.
  8. "Father accepts Deepika has proved him wrong" பரணிடப்பட்டது 2010-12-27 at the வந்தவழி இயந்திரம், The Hindustan times, 11 October 2010, Retrieved 11 October 2010.
  9. "Archery champion Deepika, an inspiration for the youth". Thaindian.com. 30 July 2009. Archived from the original on 28 பிப்ரவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 15 March 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  10. "Deepika Kumari wins first World Cup title". The Hindu (Chennai, India). 6 May 2012. http://www.thehindu.com/sport/other-sports/article3387963.ece. பார்த்த நாள்: 6 May 2012. 
  11. "Deepika Kumari crashes out to end Indian challenge in archery". The Times Of India. http://timesofindia.indiatimes.com/sports/tournaments/london-olympics/Deepika-Kumari-crashes-out-to-end-Indian-challenge-in-archery/articleshow/15311945.cms. பார்த்த நாள்: 1 August 2012. 
  12. 12.0 12.1 "Deepika Kumari: Targeting Gold". dna. 19 February 2014.
  13. "Deepika shoots gold in archery World Cup". The Hindu (Chennai, India). 22 July 2013. http://www.thehindu.com/sport/other-sports/deepika-shoots-gold-in-archery-world-cup/article4940765.ece. 
  14. "Deepika Kumari settles for silver in Archery World Cup Final". dna. 22 September 2013.
  15. "KUMARI not in India's Shanghai squad". dna. 2 April 2014. Archived from the original on 15 ஏப்ரல் 2014. பார்க்கப்பட்ட நாள் 19 ஆகஸ்ட் 2016. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  16. "DEEPIKA KUMARI EQUALS WORLD RECORD IN SHANGHAI". World Archery Federation (worldarchery.org). 27 April 2016. http://worldarchery.org/news/139330/deepika-kumari-equals-world-record-shanghai. பார்த்த நாள்: 27 April 2016. 
  17. "2016 Rio Olympics: Indian men's archery team faces last chance to make cut". Zee News. 11 June 2016. http://zeenews.india.com/sports/2016-rio-olympics-indian-mens-archery-team-faces-last-chance-to-make-cut_1894321.html. பார்த்த நாள்: 8 August 2016. 
  18. "India women’s archery team of Deepika Kumari, Laxmirani Majhi, Bombayla Devi lose quarter-final against Russia". Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/india-womens-archery-team-of-deepika-kumari-laxmirani-majhi-bombayla-devi-lose-quarter-final-against-russia-day-2-2960351/. பார்த்த நாள்: 8 August 2016. 
  19. https://sportscafe.in/articles/sports/2016/aug/11/rio-2016-archers-and-boxer-manoj-kumar-dazzle-while-jitu-rai-falters
  20. "Bombayla Devi, Deepika Kumari bow out of Rio 2016 Olympics". The Indian Express. 11 August 2016. http://indianexpress.com/sports/rio-2016-olympics/bombayla-devi-deepika-kumari-bow-out-of-india-archery-day-6-2968789/. பார்த்த நாள்: 12 August 2016. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தீபிகா_குமாரி&oldid=3558662" இலிருந்து மீள்விக்கப்பட்டது