பாம்பேலா தேவி இலைசுராம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாம்பேலா தேவி இலைசுராம்
Bombayla Devi Laishram
Bombayla Devi.jpg
2012 இல் லைஷ்ரம்
தனித் தகவல்கள்
விளிப்பெயர்(கள்)Bom
தேசியம்இந்தியன்
பிறந்த நாள்22 பெப்ரவரி 1985 (1985-02-22) (அகவை 38)
பிறந்த இடம்இம்பால் கிழக்கு, மணிப்பூர்
வசிப்பிடம்இம்பால், மணிப்பூர்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுவில்வித்தை

பாம்பேலா தேவி இலைசுராம் (Bombayla Devi Laishram) ஓர் இந்திய வில்லாளர் ஆவார். மணிப்பூர் மாநிலம், கிழக்கு இம்பாலில்[1] பிறந்த இவர், 1997[2] ஆம் ஆண்டு முதல் தேசியப் போட்டிகளிலும், 2007 ஆம் ஆண்டு முதல் அனைத்துலகப் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாக பங்கேற்று வருகிறார்.

இளம்பருவம்[தொகு]

இலைசுராம் 22 February 1985 பிப்ரவரி 22 இல் மணிப்பூரில் பிறந்தார்.[1] இவரதுதாய் உள்ளூர் வில்வித்தைப் பயிற்சியாளரான எம். யாமினி தேவி. தந்தையார் மங்களம் சிங். இவர் மணிப்பூர் கைப்பந்து குழுவின் மாநிலப் பயிற்சியாளர் ஆவார்.[3] இவர் வில்வித்தையைத் தன் 11 ஆம் அகவையிலேயே பயிலத் தொடங்கி, பிறகு இந்திய விளையாட்டு ஆணையத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.[4] இவர் தன் நேர்முகப் பேட்டியொன்றில் தனது குடும்ப விளையாட்டு மரபைப் பின்பற்றியே வில்வித்தையைத் தேர்வு செய்ததாகக் கூறியுள்ளார்.[5] இவர் இப்போது மணிப்பூரில் உள்ள இம்பாலில் வாழ்ந்து வருகிறார்.[6]

வாழ்க்கைப் பணி[தொகு]

பெய்சிங் நகரில் நடைபெற்ற 2008 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக பெண்கள் தனிப்பிரிவிலும், பெண்கள் அணிப்பிரிவிலும் இலைசுராம் பங்கேற்றார். இலைசுராம் , தோலா பாணர்சி மற்றும் பிரணித்தா வர்தினேனி ஆகியோர் இணைந்த பெண்கள் அணி பெண்களுக்கான தகுதிச்சுற்றுப் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்தது. 16 ஆவது சுற்றில் கிடைத்த நேரடி வாய்ப்பு மூலம் காலிறுதிப் போட்டிக்குள் நுழைந்த இவ்வணி சீனாவிடம் 206-211 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தது. தனிநபர் பிரிவில் தகுதிச்சுற்றின் போது 22 ஆம் இடத்தில் இருந்த இலைசுராம், 64 ஆவது சுற்றில் போலந்தின் மார்சிங்கிவிக்சிடம் 101-103 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி வாய்ப்பை இழந்தார்[7]

2012 லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் பெண்கள் தனிநபர் பிரிவின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் மெக்சிகோவின் ஐடா உரோமனிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்று வெளியேற்றப்பட்டார்[8]. அணிப்பிரிவு ஆட்டத்தில் இவர் இடம்பெற்றிருந்த இந்திய அணி டென்மார்க்கிடம் முதல் சுற்றிலேயே 211-210 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தது[9]

2016 இரியோ ஒலிம்பிக் போட்டிகளிலும் விளையாட இவர் இடம்பெற்றுள்ள அணி இந்தியாவின் சார்பாக பங்கேற்றது. பாம்பேலா தேவி இலைசுராம், தீபிகா குமாரி மற்றும் இலட்சுமிராணி மாய்கி ஆகியோர் அடங்கிய இவ்வணி தகுதிச்சுற்றுப் போட்டியில் ஏழாவது இடத்தைப் பிடித்தது[10]. முன்னதாக கொலம்பியாவுடன் விளையாடி வெற்றியை ஈட்டிய இவர்கள் காலிறுதிப் போட்டியில் உருசியாவிடம் ஆட்டத்தை இழந்தனர்[11].

ஆசுட்ரியாவின் இலாரன்சு பால்டௌஃப்புடன் பெண்கள் தனிநபர் பிரிவில் போட்டியிட்ட இலைசுராம் 6-2 என்ற கணக்கில் வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். சீன தைபேவைச் சேர்ந்த லின் சிகிச்சியாவுடன் மோதிய அடுத்த சுற்றுப் போட்டியிலும் 6-2 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று மேலும் ஒரு சுற்றுக்கு முன்னேறினார்[12]. முதல் எட்டு இடங்களில் ஒன்றைப் பிடிப்பதற்கான அடுத்த சுற்றுப் போட்டியில், மெக்சிகோவின் அலேயாண்ட்ரா வேலன்சியாவிடம் 2-6 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி தோல்வியடைந்தார்[13].

விருது[தொகு]

அருச்சுனா விருது - 2012[14]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Bombayla Devi Laishram – Archery – Olympic Athlete". 2012 London Olympic and Paralympic Summer Games. International Olympic Committee. 25 டிசம்பர் 2018 அன்று மூலம் பரணிடப்பட்டது. 4 August 2012 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Bombayla Laishram Devi". World Archery Federation. 7 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Bombayla Devi Profile: Archery". The Indian Express. 1 August 2016. 17 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  4. "All you need to know about Manipur's Bombayla Devi, Olympian archer". The Northeast Today. 25 ஏப்ரல் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 17 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  5. "7 Takeaways: Rio 2016 Individual Elimination Day 3". World Archery Federation. 10 August 2016. 17 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Bombayla Laishram Devi". World Archery Federation. 17 August 2016 அன்று பார்க்கப்பட்டது.
  7. "Athlete biography: Laishram Bombayla Devi". 2008-08-13 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2016-08-17 அன்று பார்க்கப்பட்டது., beijing2008.cn, ret: 23 August 2008
  8. "Bombayla bows out in pre-quarters". The Hindu (Chennai, India). 30 July 2012. http://www.thehindu.com/sport/other-sports/article3703365.ece. 
  9. "team (FITA Olympic round - 70m) women results - Archery - London 2012 Olympics". www.olympic.org. 2015-10-03 அன்று பார்க்கப்பட்டது.
  10. "2016 Rio Olympics: Indian men's archery team faces last chance to make cut". Zee News. 11 June 2016. http://zeenews.india.com/sports/2016-rio-olympics-indian-mens-archery-team-faces-last-chance-to-make-cut_1894321.html. பார்த்த நாள்: 8 August 2016. 
  11. "India women’s archery team of Deepika Kumari, Laxmirani Majhi, Bombayla Devi lose quarter-final against Russia". Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/india-womens-archery-team-of-deepika-kumari-laxmirani-majhi-bombayla-devi-lose-quarter-final-against-russia-day-2-2960351/. பார்த்த நாள்: 8 August 2016. 
  12. "Rio 2016 - Archers and boxer Manoj Kumar dazzle, while Jitu Rai falters". 10 August 2016.
  13. "Bombayla Devi, Deepika Kumari bow out of Rio 2016 Olympics". The Indian Express. 11 August 2016. http://indianexpress.com/sports/rio-2016-olympics/bombayla-devi-deepika-kumari-bow-out-of-india-archery-day-6-2968789/. பார்த்த நாள்: 12 August 2016. 
  14. "Sports ministry announces 25 Arjuna awards for this year". Business Standard. 20 August 2012. 17 August 2016 அன்று பார்க்கப்பட்டது.