உள்ளடக்கத்துக்குச் செல்

தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம்
வழமையான முன்னிற்குஞ்சுரப்பியையும் (இடது) தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கதினையும்(வலது) காட்டும் படம்.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புசிறுநீரியல்
ஐ.சி.டி.-10N40.
ஐ.சி.டி.-9600
நோய்களின் தரவுத்தளம்10797
மெரிசின்பிளசு000381
ஈமெடிசின்med/1919
பேசியண்ட் ஐ.இதீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம்
ம.பா.தD011470

தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம்(benign prostatic hyperplasia, BPH), அல்லது முன்னிற்குஞ்சுரப்பியின் தீதில்லாப் பெருக்கம் (benign enlargement of the prostate, BEP அல்லது adenofibromyomatous hyperplasia மற்றும் benign prostatic hypertrophy), எனக் குறிப்பிடப்படுவது முன்னிற்கும் சுரப்பியின் அளவு பெரிதாவது ஆகும்.

முன்னிற்குஞ்சுரப்பியின் இணைப்பு மற்றும் புறவணியிழைய உயிரணுக்களின் மிகைப்பெருக்கத்தால் முன்னிற்குஞ்சுரப்பியின் சிறுநீர்க்குழாய்ப்புற மண்டலத்தில் பெரிய, தனித்தனியான முடிச்சுகள் உண்டாவதை இது குறிக்கிறது. இந்த முடிச்சுக்கள் குறிப்பிடக்கூடிய அளவில் பெரிதானால் சிறுநீர்வழிப் பாதையைச் சுருக்கி பகுதியான அல்லது சிலநேரங்களில் முழுமையான, தடங்கலை ஏற்படுத்தி வழமையான சிறுநீர்ப் போக்கை கட்டுப்படுத்தும். இதனால் தயக்கமான சிறுநீர்க் போக்கு, அடிக்கடி சிறுநீர் கழித்தல், வலியுடன் கூடி சிறுநீர் கழிதல், கூடிய தீவாய்ப்புள்ள சிறுநீர் தடத் தொற்றுக்கள், மற்றும் சிறுநீர் தங்கல் போன்ற நோயறிகுறிகள் தோன்றும். உறுப்பின் அளவு பெரிதாவதாலும் சிறுநீர் தடத் தொற்றுக்களால் ஏற்படும் அழற்சியாலும் இந்த நோயாளிகளுக்கு முன்னிற்குஞ்சுரப்பிக்கே உரித்தான முறிதூண்டி அளவுகள் கூடிய அளவில் இருந்தாலும் தீதிலி முன்னிற்குஞ்சுரப்பி மிகைப்பெருக்கம் புற்றுநோய்க்கோ புற்றுநோய்க்கான கூடிய தீவாய்ப்புகளுக்கோ வழிவகுப்பதில்லை.

இந்த மிகைப் பெருக்கத்தில் தனியான உயிரணுக்களின் அளவு பெரிதாவதில்லை (hypertrophy); உயிரணுக்களின் எண்ணிக்கையே பெருகுகிறது (hyperplasia).இருப்பினும் இந்த இரு சொற்களும் பொதுவாக,சில நேரங்களில் சிறுநீர்குழாய் மருத்துவர்களாலும்,ஒன்றுக்கொன்று வேற்றுமையின்றி பயன்படுத்தப்படுகின்றன.[1]

முன்னிற்குஞ்சுரப்பியின் சீதப்படலக் கட்டி வளர்ச்சி ஏறத்தாழ 30 அகவையிலிருந்து தொடங்குகிறது. ஆடவர்களில் 50% பேருக்கு 50 அகவையிலும் 75% பேருக்கு 80 அகவையிலும் இந்நோயின் இழைய சான்றுகள் தெரியத் துவங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது; இவர்களில் 40–50% ஆடவர்களுக்கு, இந்த மிகைப்பெருக்கம் மருத்துவரீதியாக குறிப்பிடத்தக்கதாக உள்ளது.[2]

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Bostwick, D. G. (2002). "The Pathology of Benign Prostatic Hyperplasia". In Kirby, Peter; McConnell, John D.; Fitzpatrick, John M.; Roehrborn, Claus G.; Boyle (eds.). Textbook of Benign Prostatic Hyperplasia. London: Isis Medical Media. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-901865-55-4. {{cite book}}: More than one of |editor1-first= and |editor-first= specified (help)
  2. Rubenstein, Jonathan; McVary, Kevin T. (6 February 2008). "Transurethral Microwave Thermotherapy of the Prostate (TUMT)". eMedicine.

கூடுதல் பார்வைக்கு

[தொகு]

மேலும் அறிய

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Benign prostatic hyperplasia
என்பதில் ஊடகங்கள் உள்ளன.