இணைப்பு உயிரணு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உயிரணு உயிரியலில், இணைப்பு உயிரணுக்கள் (stromal cells) எனப்படுபவை எந்தவொரு உறுப்பின் இணைப்பிழைய உயிரணுக்கள் ஆகும்; எடுத்துக்காட்டுகளாக கருப்பையின் சீதமென்சவ்வு (கருப்பையகம்), முன்னிற்கும் சுரப்பி, எலும்பு மச்சை, மற்றும் சூலகம் ஆகியவற்றில் உள்ளவற்றைக் குறிப்பிடலாம். இந்த உயிரணுக்கள் அந்த உறுப்பின் மூல உயிரணுக்களின் செயற்பாட்டிற்கு உதவுகின்றன. நார் அரும்புயணுக்கள், வெண்குருதியணுக்கள், சிறுதமனிச்சூழ் மீள்திசுக்கள், மற்றும் அழற்சி உயிரணுக்கள் மிகவும் பரவலான இணைப்பு உயிரணு வகைகளாகும்.

இணைப்பு உயிரணுக்களுக்கும் கட்டிகளுக்கும் உள்ள இடைவினை புற்றுநோய் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் முதன்மை பங்காற்றுவதாக அறியப்பட்டுள்ளது.[1]

மேற்சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைப்பு_உயிரணு&oldid=3233558" இருந்து மீள்விக்கப்பட்டது