திருமாந்தம்குன்னு கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திருமாந்தம்குன்னு சிறீ பகவதி கோயில்
திருமந்தம்குன்னு கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:கேரளம்
மாவட்டம்:மலப்புறம்
அமைவு:அங்காடிபுரம், பெரிந்தல்மண்ணை
கோயில் தகவல்கள்
திருமாந்தம்குன்னு பகவதி கோயில், வடக்கு நாடு

திருமாந்தம்குன்னு கோயில் (Thirumandhamkunnu Temple) என்பது தென் இந்தியா கேரள மாநிலத்தின் மலப்புறம் மாவட்டத்தில் வள்ளுவநாடு இராஜவம்சத்தின் தலைநகராக இருந்த பெரிந்தல்மண்ணையின் அங்காடிபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமயக் கோவிலாகும் .[1] கோயில் தெய்வத்தின் பெயர், திருமந்தம்குன்னில் அம்மா என்பதாகும். வள்ளுவநாட்டு மன்னர்களின் பரதேவதையாகும் (அதிகாரப்பூர்வ தெய்வம்). உள்ளூர் நிலப்பிரபுத்துவ மன்னர்கள் இடைக்காலத்தில் இப்பகுதியை ஆண்டனர். வள்ளுவநாடு மன்னர்களின் நாயர் போர்வீரர்கள் (சாவர்கள் அதாவது தியாகிகள்) புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவில் பங்கேற்க இந்த கோயிலிலிருந்து திருநவயாவுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். திருமந்தம்குன்னு கோயிலின் பிரதான நுழைவாயிலுக்கு முன்னால் சாவர் தாரா ("தியாகிகளின் தளம்") என்று அழைக்கப்படும் ஒரு நினைவு அமைப்பைக் காணலாம். [2]

கோயில் தெவங்கள்[தொகு]

இந்த கோயில் ஒரு முக்கியமான யாத்ரீக மையமாகவும் உள்ளது, குறிப்பாக கிரிகோரியன் நாட்காட்டியின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கொண்டாடப்படும் பதினொரு நாள் ஆண்டு தோறும் நடைபெறும் கோவில் திருவிழாக்களுக்கு மிகவும் புகழ் பெற்றது . கோயிலின் "முக்கிய தெய்வம்" சிவபெருமான் ஆவார். ஆனால் இங்கு புகழ்பெற்ற தெய்வமாக சிறீ பத்ரகாளி அல்லது சிறீபார்வதி இருகிறார். உள்ளூரில் திருமந்தம்குன்னிலம்மா என்று அழைக்கப்படுகிறார். மற்றும் பிள்ளையாரும் இங்குள்ளார். இங்கு பிரபலமான மாங்கல்ய பூசை செய்யப்படுகிறது. மாங்கல்ய பூஜை ஒருவரின் திருமணத்திற்கான தடைகளை நீக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். திருமந்தம்குண்ணிலம்மா இந்து மதத்தில் சக்தி தேவி என்றும் கருதப்படுகிறார். தாருகன் என்ற அரக்கனைக் கொல்ல சிவபெருமானின் மூன்றாவது கண்ணிலிருந்து பத்ரகாளி பிறந்ததாக நம்பபப்படுகிறது. பத்ரா என்றால் நல்லது என்றும் காளி என்றால் காலத்தின் தெய்வம் என்றும் பொருள். பத்ரகாளி செழிப்பு மற்றும் இரட்சிப்புக்காக வணங்கப்படுகிறார். தேவி படைப்பாளர், பாதுகாவலர், அழிப்பவர், இயற்கை மற்றும் குண்டலினி என்றும் கருதப்படுகிறார். [3] மாங்கல்ய பூசை, இருக்கு வேத லட்ச அர்ச்சனை, சந்தட்டம் மற்றும் கலம்பட்டு ஆகியவை திருமந்தம்குன்னு கோயிலின் முக்கியமான மத பிரசாதங்களாகும் . [4]

அமைப்பு[தொகு]

இந்த இந்து கோவிலுக்கென சில குறிப்பிட்ட சடங்குகள் உள்ளன. அவை பிறரால் பின்பற்றப்படுவதில்லை. [5] திருமந்தம்குன்னு கோயில் முற்றங்கள் கீழே அமைந்துள்ள கிராமப்புறங்களின் காட்சியை வழங்கும் ஒரு மலையடிவாரத்தில் உள்ளன.

திருமாந்தம்குன்னு கோயிலைச் சுற்றியுள்ள புராணக்கதை[தொகு]

சூர்யா வம்சத்தின் மன்னர் மந்தாத்தா தனது இராஜ்யத்தை நீண்ட காலம் ஆட்சி செய்தார். பின்னர் அவர் தனது வாரிசுகளுக்கு இராச்சியத்தை விட்டுவிட்டு, உயர்வான கடவுளான சிவனை தியானிக்கவும், இறுதியில் சிவனின் பாதத்தை அடையவும் தேர்வு செய்தார். சிவன் இவரது தவத்தில் மகிழ்ச்சி அடைந்தார். கைலாச மலையில் மன்னர் மந்தாத்தா முன் தோன்றினார். சிவன் அவருக்கு மிகவும் பிடித்த மற்றும் புனிதமான இலிங்கத்தை வழங்கினார். இது பார்வதியால் வணங்கப்பட்டது. வரமளித்தப் பின்னர் கடவுள் மறைந்துவிட்டார்.

திருமாந்தம்குன்னு பூரம், கோயிலின் வருடாந்த திருவிழாவாகும். இது 11 நாள் கொண்டாடப்படுகிறது. இது மலப்புறம் மாவட்டத்தில் ஒரு முக்கிய திருவிழாவாகும். இதில் "ஆராட்டு" ஒரு அழகான வழக்கமாகும். தேவியின் குளியல் விழாவான ஆராட்டு, இதில் உயரமான யானை மீது புனித சிலை கொண்டு செல்லப்படுகிறது. மேலும் 5 யானைகளுடன் கோயிலுக்கு அருகிலுள்ள ஏரிக்கு செல்கிறது. சிலைக்கு கோயிலின் பிரதான வழங்குநரால் புனித குளியல் வழங்கப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் கொண்டு செல்லப்படுகிறது.

மேலும் காண்க[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. "Angadipuram Temple".
  2. "Malappuram". malappuram.net.
  3. "Thirumandhamkunnu temple, Angadipuram". kerlatourism.org.
  4. "Thirumandhamkunnu temple, Angadipuram". Official Website Kerala Tourism.
  5. "Vallabha Vamsam III". varma.net.

வெளி இணைப்புகள்[தொகு]