உள்ளடக்கத்துக்குச் செல்

திருமலை சமணர் கோயில் வளாகம்

ஆள்கூறுகள்: 12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திருமலை சமணர் கோயில் வளாகம்
திருமலை சமணர் கோயில்
திருமலை சமணர் கோயில் குன்று
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்திருமலை கிராமம், ஆரணி திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு
புவியியல் ஆள்கூறுகள்12°13′N 79°04′E / 12.22°N 79.07°E / 12.22; 79.07
சமயம்சமணம்

திருமலை சமணர் கோயில் வளாகம் தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டத்தின், ஆரணி அருகே திருமலை எனும் குன்றில் அமைந்த திகம்பர சமண வளாகம் ஆகும். இவ்வளாகம் வேலூரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது.[1] பொ.ஊ. ஒன்பதாம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட இச்சமண வளாகம், மூன்று சமணக் குடைவரைகளும், இரண்டு சமணக் கோயில்களும் கொண்டது. பொ.ஊ. 12ம் நூற்றாண்டில், இச்சமணக் கோயிலில் தீர்த்தங்கரரான நேமிநாதரின் 16 அடி உயரச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

திருமலை சமணக் கோயிலின் குடைவரை அமைப்பு

பொ.ஊ. 16ம் நூற்றாண்டில் இவ்வளாகத்தில் மகாவீரர் கோயில் நிறுவப்பட்டுள்ளது.

சமண ஓவியம்

பொ.ஊ. 15–17 நூற்றாண்டுகளில் இச்சமண வளாகத்தில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளது. அவைகளில் சில தற்போதும் உள்ளது.

ஆரணியிலிருந்து போளூர் செல்லும் திருவண்ணாமலைச் சாலையில் இச்சமணக் கோயில் வளாகம் உள்ளது.

படக்காட்சிகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Shri Khstra Arihantgiri Digambar Jain Mandir". Archived from the original on 2015-07-12. பார்க்கப்பட்ட நாள் 2018-04-01.
  2. Singh, Nagendra Kumar (2001). Encyclopedia of Jainism. Anmol Publications Pvt. Ltd. p. 1000.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]