திணிப்பு (சுடுகலன்)
Appearance
திணிப்பு (ஆங்கிலம்: wadding) என்பது, துப்பாக்கிகளில் எறியத்துக்கு பின்னுள்ள வாயுக்களை (எறியத்துக்கு முன் பக்கமாக வெளியேற விடாமல்) அங்கேயே இருக்கும்படி அடைக்கப்பதற்கு, அல்லது வெடிபொடியையும் குண்டையும் தனித்தனியே பிரித்து வைப்பதற்கு பிரயோகிக்கப்படும் ஒரு வட்டுப்பொருள் ஆகும்.[1]
ஏதேனும் வாயு எறியத்தின் பக்கம் கசிந்தால், வெடிப்பதால் அங்கே உருவாகும் உந்துசக்தியானது விரையமாகும்; ஆகவே ஒரு துப்பாக்கியின் செயல்திறன் திணிப்பை சார்ந்துள்ளது என்று அறுதியிட்டுச் சொல்லலாம். இதைவிட கடினமான, மேலும் துல்லிய வடிவமாகவும் விளங்கும் நிலையமர்த்தியும், இதே பயனை தான் அளிக்கிறது. வாய்-குண்டேற்றுபவைகளில் துணி அல்லது காகிதம் திணிப்பாக பிரயோகிக்கப்படும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Glossary of Firearms Terms பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம், Introduction to Hunter Education