திக்கல் புதர்க் கதிர்க்குருவி
திக்கல் புதர்க் கதிர்க்குருவி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Phylloscopus |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/PhylloscopusP. affinis
|
இருசொற் பெயரீடு | |
Phylloscopus affinis (Tickell, 1833) |
திக்கல் புதர்க் கதிர்க்குருவி ( Tickell's leaf warbler ) என்பது ஆசியாவில் வங்காளதேசம், பூட்டான், சீனா, இந்தியா, மியான்மர், நேபாளம், பாக்கித்தான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படும் ஒரு புதர்க் கதிர்க்குருவி ஆகும்.[1] இந்தப் பறவையின் அடிப்பகுதியும், புருவமும் மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற புதர்க் கதிர்க்குருவிகளைப் போலவே, இது பெரும்பாலும் பூச்சிகளைப் பிடித்து உண்கிறது. இது ஒரு சுறுசுறுப்பான பறவை, தரையிலும் தாழ்வான புதர்களிலும் கிளைகளிலும் தாவிப் பறந்து சுறுசுறுப்பாக இரை தேடக்கூடியது. தெளிவான மஞ்சள் நிற அடிப்பகுதி மற்றும் இதை ஒத்த இனங்களுக்கு இறக்கை பட்டை உள்ளது போல் இல்லாமை போன்றவற்றால் இதை எளிதில் வேறுபடுத்தி அறிய இயலும். இது பெரும்பாலும் வெளிரிய கீழ் அலகையும், சாம்பல் நிற இறக்கைகளையும், மெலிதான கருமையான கால்களையும் கொண்டுள்ளது.
வகைபிரித்தல்
[தொகு]இதில் மூன்று துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]
- P. a. affinis (டிக்கெல், 1833) - கிழக்கு இமயமலை நேபாளத்திலிருந்து தென்கிழக்கு திபெத் வரை
- P. a. perflavus Martens, J, Sun & Päckert, 2008 – மேற்கு இமயமலை பாக்கிதானிலிருந்து வட இந்தியா வரை [3]
- P. a. occisinensis Martens, J, Sun & Päckert, 2008 – மேற்கு-மத்திய சீனா
இனப்பெருக்கம்
[தொகு]மே முதல் ஆகத்து வரையிலான காலத்தில் இப்பறவை இனப்பெருக்கம் செய்கிறது. இலை, காய்ந்த புற்கள், தாவர நார்களைக் கொண்டு தரிசான மலைகளில் பாறைகள் மற்றும் குட்டைப் புதர்களுக்கு மத்தியில் கூடுகட்டுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2017). "Phylloscopus affinis". IUCN Red List of Threatened Species 2017: e.T22715270A118853090. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T22715270A118853090.en. https://www.iucnredlist.org/species/22715270/118853090. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ "Bushtits, leaf warblers, reed warblers". IOC World Bird List Version 12.1. International Ornithologists' Union. January 2022. பார்க்கப்பட்ட நாள் 8 June 2022.
- ↑ Martens, J.; Sun, Y.-H.; Päckert, M. (2008). "Intraspecific differentiation of Sino-Himalayan bush-dwelling Phylloscopus leaf warblers, with description of two new taxa (P. fuscatus,P. fuligiventer, P. affinis, P. armandii, P. subaffinis)". Vertebrate Zoology 58 (2): 233–265. doi:10.3897/vz.58.e30935. https://avibirds.com/wp-content/uploads/pdf/west-chinese-leaf-warbler.pdf.