தாரா (கன்னட நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தாரா

The Minister of Culture & Urban Development Shri S.Jaipal Reddy inaugurating the International Film Festival of India - 2005, in Panaji, Goa on November 24, 2005 (1).jpg

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் தாரா, 2005
கருநாடக சட்டமன்றத்தின் மேலவையின் நியமிக்கப்பட்ட உறுப்பினர்
பதவியில்
10 ஆகத்து 2012 – 2018
கர்நாடக சலனச்சித்ர அகாடமியின் தலைவர்
பதவியில்
15 மார்ச் 2012 – சூன் 2013
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான கர்நாடக மாநில ஆணையத்தின் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
சனவரி 2020
தனிநபர் தகவல்
பிறப்பு அனுராதா
4 மார்ச்சு 1971 (1971-03-04) (அகவை 50)[a]
பெங்களூர், மைசூர் மாநிலம் (தற்போதைய கருநாடகம்), இந்தியா
அரசியல் கட்சி பாரதிய ஜனதா கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) எச். சி. வேணுகோபால் (2005)
பிள்ளைகள் 1
பணி நடிகை, அரசியல்வாதி

தாரா (Tara) என்ற தனது திரைப் பெயரால் அறியப்பட்ட அனுராதா (பிறப்பு: மார்ச் 4, 1971) ஒரு இந்திய நடிகையும், கன்னடத் திரையுலகில் பணிபுரிந்தவருமாவார். மேலும் இவர் ஒரு அரசியல்வாதியாக 2009ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார். தற்போது கர்நாடக சட்டமன்றத்தில் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.

தாரா 1984 ஆம் ஆண்டில் இங்கேயும் ஒரு கங்கை என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவரது கன்னட திரைப்பட அறிமுகம் 1986இல் துளசிதளம் என்ற படத்துடன் இருந்தது. பின்னர் பல வேடங்களில் நடித்தார். இவரது குறிப்பிடத்தக்க நடிப்பு கிரமா (1991), முஞ்சனேயா மஞ்சு (1993), கனூரு ஹெக்கதிதி (1999), மாததானா (2001), ஹசினா (2005), சயனைடு (2006),ஈ பந்தனா (2007) போன்ற படங்களில் இருந்தது. ஹசினாவில் இவரது நடிப்பு இவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை பெற்றுத் தந்தது. [2]

பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்த பிறகு, 2012இல் கர்நாடக சலனச்சித்ர அகாடமியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரு வருடம் அந்த பதவியில் இருந்தார். [3] அதே ஆண்டில், இவர் கர்நாடகவின் சட்டப் பேரவை மேலவை உறுப்பினராகப் பரிந்துரைக்கப்பட்டார் .

தொழில்[தொகு]

Tara
2004 ஆம் ஆண்டில் தாரா நடித்த கன்னடத் திரைப்படமான ஹசினா, சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றது

1984 ஆம் ஆண்டில் பிரபல இயக்குநரும் நடிகருமான மணிவண்ணன் இயக்கிய "இங்கேயும் ஒரு கங்கை" என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இதில் முரளியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதைத் தொடர்ந்து, 1985ஆம் ஆண்டில் தனது முதல் கன்னட திரைப்படமான துளசிதளத்தில் நடித்தார். இருப்பினும், 1986ஆம் ஆண்டில் ராஜ்குமார் நடித்த குரி மூலம் தனது தொழில் வாழ்க்கையின் பெரிய வெற்றியைப் பெற்றார். அதன்பிறகு இவர் பல திரைப்படங்களில் ஒரு முன்னணி வேடத்தில் துணை நடிகையாக நடித்துள்ளார். கிரீஷ் கர்னாட்டின் கனூரு ஹெக்கதிதி படத்தில் இவரது நடிப்பு இவருக்கு பரவலான அங்கீகாரத்தைக் கொடுத்தது. அறிமுக இயக்குனர் அஸ்ரர் அபித் இயக்கிய கன்னடத் திரைப்படமான கிரமா (1991) படத்திற்காக சிறந்த நடிகையாக தனது முதல் விருதைப் பெற்றார். 1980களின் பிற்பகுதியில், மணிரத்னத்தின் தமிழ் படங்களான நாயகன், அக்னி நட்சத்திரம் ஆகிய படங்களில் துணை நடிகையாக தோன்றினார்.

தாரா 1980கள் மற்றும் 1990களில் ராஜ்குமார், சங்கர் நாக், விஷ்ணுவர்தன், அம்பரீசு, அனந்த் நாக், வீ. ரவிச்சந்திரன், சசி குமார், டைகர் பிரபாகர், சிவ ராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார், முரளி, கார்த்திக், சுனில், தேவராஜ் போன்ற அனைத்து முன்னணி ஆண் நடிகர்களுடன் பணியாற்றியுள்ளார். கனூரு ஹெக்கதிதி திரைப்படத்திற்காக தனது இரண்டாவது "சிறந்த நடிகை" மாநில விருதையும், முஞ்சநேய மஞ்சு படத்திற்கான "சிறந்த துணை நடிகை" விருதையும் பெற்றார்.

2005 ஆம் ஆண்டில், கிரிஷ் காசரவள்ளியின் இயக்கத்தில் ஹசினா திரைப்படத்தில் நடித்ததற்காக இவருக்கு இந்திய அரசாங்கத்திடம் இருந்து தேசிய விருது கிடைத்தது. அதைத் தொடர்ந்து, கன்னடத் திரைப்படமான டெட்லி சோமாவில் இவரது பாத்திரம் பாராட்டப்பட்டது. பின்னர் சயனைடு திரைப்படத்தில் மற்றொரு திருப்புமுனை ஏற்பட்டது. [4] 2007ஆம் ஆண்டில், தனது மூன்றாவது சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். [5] நடிப்பு தவிர, கிரிஷ் காசரவள்ளி இயக்கிய ஹசினாவை இவர் தயாரித்தார். மேலும் படங்களையும் இயக்கும் எண்ணத்தை இவர் அறிவித்துள்ளார்.[6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

தாரா 2005 இல் ஒளிப்பதிவாளர் எச். சி வேணுகோபாலை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். [7]

இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ( 2005 ) செய்தியாளர் சந்திப்பில் தாரா (இடது) மற்றும் கிரிஷ் காசரவள்ளி (வலது)

குறிப்புகள்[தொகு]

  1. 1971 மார்ச் 4 அன்று தான் பிறந்ததாக கூறினார்.[1] அதேசமயம் 2013இல் டைம்ஸ் ஆப் இந்தியாவில் வெளிவந்த ஒரு செய்தியில் இவருக்கு 48 வயதென மேற்கோள் காட்டியது, (பிறந்த வருடம் 1965)

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாரா_(கன்னட_நடிகை)&oldid=3339792" இருந்து மீள்விக்கப்பட்டது