அனந்த் நாக்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அனந்த நாகர்கட்டே கர்நாடக நடிகரும், அரசியல்வாதியும் ஆவார். இவர் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு, மராத்தி, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் அனந்த் நாக் என்ற பெயரில் அறியப்படுகிறார். 1973 முதல் 2013 வரையிலான பல தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். இது தவிர, கன்னடத் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்தார். இவர் பல முறை சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றுள்ளார்.
திரைப்படங்கள்[தொகு]
தமிழில் நாட்டுக்கு ஒரு நல்லவன் என்ற திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுவாதி திருநாள் என்ற திரைப்படத்தில் நடித்தார். கன்னடத்தில் நூற்றுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.