தானாலூர்
தானாலூர் | |
---|---|
கணக்கெடுப்பில் உள்ள ஊர் | |
ஆள்கூறுகள்: 10°57′0″N 75°54′35″E / 10.95000°N 75.90972°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | மலப்புறம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 40,884 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676 307 |
வாகனப் பதிவு | KL-55 &KL-10 |
தானாலூர் (Tanalur) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு ஊராகும். இது தானூர் நகராட்சியின் புறநகராகும், இது தானூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தானூர் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. இது திரூர் வட்டத்திற்கு உட்பட்டது.
தானாலூர் வார்டுகள்
[தொகு]தானாலூர் கிராம ஊராட்சி பின்வரும் 23 வார்டுகளை கொண்டது: [1]
வார்டு எண். | பெயர் | வார்டு எண். | பெயர் |
---|---|---|---|
1 | மூலக்கல் | 2 | தேவதர் |
3 | புத்தன்தெரு | 4 | பாண்டியது |
5 | பரேங்கத் | 6 | தாறயில் |
7 | தீண்டாபர | 8 | பகர வடக்கு |
9 | தவளாம்குன்னு | 10 | அரீகாடு |
11 | அரீக்காடு நிறைப்பு | 12 | பகர தெற்கு |
13 | மீனாடத்தூர் கிழக்கு | 14 | மீனாடத்தூர் மேற்கு |
15 | மூச்சிக்கல் | 16 | வலியபாதம் |
17 | தானாலூர் | 18 | வட்டத்தாணி |
19 | கைனிபாதம் | 20 | புதுகுளங்கரை |
21 | பட்டருபரம்ப | 22 | குண்டுங்கல் |
23 | கேரளாதீஸ்வரபுரம் |
மக்கள்தொகையியல்
[தொகு]2001[update] இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி, தானாலூரின் மொத்த மக்கள் தொகை 40884 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 19542 என்றும், பெண்களின் எண்ணிக்கை 21342 என்றும் உள்ளது.
மேலும் தகவலுக்கு பார்வையிடவும் : [1]
போக்குவரத்து
[தொகு]தானாலூர் கிராமமானது திரூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 திரூர் வழியாக செல்கிறது. இந்தச் சாலை வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. நெடுஞ்சாலை எண்.966 பாலக்காடு மற்றும் கோவைக்கு செல்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் திரூர், தானூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது. மேலும் நம்பகமான மற்ற போக்குவரத்தாக கேரள அரசு போக்குவரத்து கழக பேருந்துகளாக இருக்கின்றன.