தலப்பாறை

ஆள்கூறுகள்: 11°4′20″N 75°54′10″E / 11.07222°N 75.90278°E / 11.07222; 75.90278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தலப்பாறை
மூனியூர்
தலைவெட்டிப்பாறை
ஊர்
மூனியூர் சிவன் கோயில்
மூனியூர் சிவன் கோயில்
ஆள்கூறுகள்: 11°4′20″N 75°54′10″E / 11.07222°N 75.90278°E / 11.07222; 75.90278
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்மூனியூர் தெற்கு: 676311
தொலைபேசி குறியீடு04942
வாகனப் பதிவுKL-65
அருகில் உள்ள நகரம்செம்மடு
மக்களவைத் தொகுதிமலப்புறம்

தலப்பாறை (Thalappara) என்பது இந்தியாவின், கேரளத்தின், மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் மூனியூர் அருகே அமைந்துள்ள ஒரு ஊராகும். இது தே.நெ. 17 இல் உள்ளது. [1] இது திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகியவற்றை இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும்.

தலப்பாறையைச் சுற்றி பாடிக்கல், பாலக்கல், வெளிமுக்கு, அழிஞ்சுவடு, முட்டிச்சிரா, களியடமூக்கு, பாறக்கடவு, குன்னத்து பறம்பு, சுழலி, களத்திங்கல்பாறை, அரீப்பாறை, முள்ளங்குழி மற்றும் செகுத்தான் மூலா போற்ற முக்கியமான இடங்கள் உள்ளன.

மூனியூர் கிராம ஊராட்சி[தொகு]

தலப்பாறை ஊரானது மூனியூர் கிராம ஊராட்சிக்கு உட்பட்டதாகும். இந்த ஊராட்சியில் முட்டிச்சிரா, வெளிமுக்கு, பாலக்கல் , பணிக்கொட்டும்பாடி போன்ற கிராமங்களை உள்ளடக்கியுள்ளது. மூனியூர் ஊராட்சிக்கு அடுத்ததாக பணிக்கொட்டும்பாடி (பாடிக்கல்) அடுத்து வரும் தேனிப்பாலம் ஊராட்சி உள்ளது. மூன்னியூர் ஊராட்சியின் மக்கள் தொகை 38,000 ஆகும். [2]

தலப்பாறை சந்திப்பு

போக்குவரத்து[தொகு]

தலப்பாறை கிராமமானது பரப்பனங்காடி நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 ராமநாட்டுக்கரை வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் பரப்பனங்காடியில் உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Census of India : Villages with population 5000 & above, Registrar General & Census Commissioner, India". பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.
  2. "മൂന്നിയൂര്‍ ഗ്രാമപഞ്ചായത്ത് (Moonniyur Grama Panchayat)". Archived from the original on 30 November 2013. பார்க்கப்பட்ட நாள் 6 February 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தலப்பாறை&oldid=3882245" இலிருந்து மீள்விக்கப்பட்டது