தம்பலகாமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

தம்பலகாமம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு விவசாயக் கிராமம் ஆகும். கொழும்பிலிருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையில் கந்தளாய் மற்றும் திருகோணமலை நகர்களினிடையில் திருகோணமலையில் இருந்து 22 கிமீ தொலைவில் இது அமைந்துள்ளது.

முள்ளிப்பொத்தானை[தொகு]

இப்பிரதேசத்தினை மையப்படுத்தி இங்கு முஸ்லிம் தமிழ் சிங்கள மக்கள் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றார்கள்.முள்ளிப்பொத்தானை நகரத்தில் அமைந்திருக்கும் முள்ளிப்பொத்தானை பிரதேச சபையானது இப்பிரதேசத்தின் முன்னணி நிறுவனமாகும். இங்கு அநேகமாக முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள் என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கதாகும். மூதூர்த் தொகுதிக்கு உட்பட்ட இப்பிரதேசம் பல அரசியல் வாதிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்பியதில் பெருமை காணத்தக்க ஒரு பிரதேசமாகும் .

கல்வியும் பாடசாலைகளும்[தொகு]

தி அல்ஹிஜ்ரா மத்திய கல்லூரி தாய்ப்பாடசாலை ஆகவும் முனைப்பான பாடசாலையாகவும் இப்பிரதேசத்தில் காணப்படுகிறது.அத்தோடு தி-ஆதிகோணேஸ்வரா மகா வித்தியாலயம் மற்றும் தி- அல் ஹிக்மா மகா வித்தியாலயம் என்பன மிக முக்கியமான பாடசாலைகளாக தம்பலகமப் பிரதேசத்தில் முனைப்புப் பெறுகின்றது.

அரசியல்[தொகு]

தொழில்துறை[தொகு]

மக்களின் தொழிலாதாரமாக விவசாயம் காணப்பட்டாலும் பாரிய விருத்தியினை மக்கள் இதுவரையில் காணாத நிலையே இன்னும் காணப்படுகின்றது. அத்தோடு காட்டுத்தொழில் நன்னீர் மீன்பிடி என்பன மக்களுக்கு தடைப்பட்டுக் காணப்படுவதால் தொழில் முன்னேற்றங்கள் தொடர்பாக வரலாறு இல்லை.

கோயில்கள்[தொகு]

ஆதிகோணேசராலயம்[தொகு]

இங்கு ஆதிகோணேச்சரம் எனும் பெயரில் ஒரு சிவன் ஆலயம் உள்ளது. இந்த ஆலயம் சம்பந்தரால் பாடல் பெற்ற திருக்கோணேச்சரம் ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடையது.

ஒல்லாந்தர் திருக்கோணேச்சரம் ஆலயத்தை அழித்த போது சில நலன் விரும்பிகள் ஆலயத்தில் இருந்த சில விக்கிரகங்களை அகற்றி தம்பலகாமத்தில் பாதுகாத்தனர். பிற்காலத்தில் பாதுகாத்த விக்கிரகங்களைக் கொண்டு ஆதி கோணேஸ்வரம் ஆலயத்தை அமைத்தனர். இ. தன்ராஜ்

தம்பலகாமம் முத்துமாரியம்மன் கோவில்[தொகு]

முத்துமாரியம்மன் கோயில் தம்பலகமத்தில் கள்ளிமேடு, சம்மாந்துறையில் அமைந்துள்ளது.

விவசாயம்[தொகு]

கந்தளாய் குளத்தில் இருந்து பெறும் நீர் மூலம் இங்கு விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. நெல் பெரும்படியாக இங்கே விவசாயம் செய்யப்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தம்பலகாமம்&oldid=2087349" இருந்து மீள்விக்கப்பட்டது