தமிழ்க் காப்பியங்கள் (காலநிரல்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

காப்பியம் என்பது தலைவனின் வரலாற்றைக் கூறும் இலக்கியம். காப்பியத் தலைவன் ஒருவனையோ, பலரையோ இது கொண்டிருக்கும். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நாற்பொருளும் பயப்பதாக இருக்கும். செய்யுள் வடிவில் அமைந்திருக்கும். வேறு மொழியிலுள்ள நூலைத் தழுவி உருவாக்கப்பட்ட காப்பியங்களும் தமிழில் உண்டு. சமயம் தழுவிய காப்பியங்கள் தமிழில் மிகுதி.[1]

1[தொகு]

நூற்றாண்டு நூல் யாப்பு ஆசிரியர் செய்யுள் எண்ணிக்கை மூலமா, தழுவலா சமயம்
(?) சிலப்பதிகாரம் ஆசிரியப்பா இளங்கோவடிகள் 5270 அடிகள் மூலம் பொது
7 மணிமேகலை ஆசிரியப்பா சீத்தலைச் சாத்தனார் 4835 அடிகள் மூலம் பௌத்தம்
8 பெருங்கதை ஆசிரியப்பா கொங்குவேளிர் 16,230 அடிகள் தழுவல் சைனம்
9 சீவக சிந்தாமணி விருத்தம் திருத்தக்க தேவர் 3154 தழுவல் சைனம்
9 இராமாயணம் விருத்தம் கம்பர் 10,480 தழுவல் பொது [2]
9 வளையாபதி [3] விருத்தம் (?) - (?) (?)
9 பாரத வெண்பா வெண்பா பெருந்தேவனார் 1180 மூலம் [4] பொது

2[தொகு]

நூற்றாண்டு நூல் யாப்பு ஆசிரியர் செய்யுள் எண்ணிக்கை மூலமா, தழுவலா சமயம்
10 சூளாமணி விருத்தம் தோலாமொழித்தேவர் 2131 தழுவல் சைனம்
10 குண்டலகேசி [3] விருத்தம் நாதகுத்தனார் - மூலம் பௌத்தம்
11 நீலகேசி விருத்தம் (?) 894 மூலம் சைனம்
11 கல்லாடம் ஆசிரியப்பா கல்லாடர் 100 மூலம் சைவம்
12 பெரியபுராணம் விருத்தம் சேக்கிழார் 4286 மூலம் சைவம்
12 உத்தர ராமாயணம் விருத்தம் ஒட்டக்கூத்தர் 1510 தழுவல் வைணவம்

3[தொகு]

நூற்றாண்டு நூல் யாப்பு ஆசிரியர் செய்யுள் எண்ணிக்கை மூலமா, தழுவலா சமயம்
13 நளவெண்பா வெண்பா புகழேந்தி 424 மூலம் [5] பொது
13 யசோதர காவியம் விருத்தம் (?) 320 தழுவல் சைனம்
13 திருவிளையாடல் விருத்தம் பெரும்பற்றப்புலியூர் நம்பி 1752 தழுவல் சைவம்
14 பாரதம் விருத்தம் வில்லிபுத்தூரார் 4351 தழுவல் பொது [6]
14 கந்தபுராணம் விருத்தம் கச்சியப்ப சிவாசாரியார் 10,345 மூலம் சைவம்

4[தொகு]

நூற்றாண்டு நூல் யாப்பு ஆசிரியர் செய்யுள் எண்ணிக்கை மூலமா, தழுவலா சமயம்
15 திருவாதவூரர் புராணம் விருத்தம் கடவுள்மாமுனிவர் 545 மூலம் சைவம்
15 ஸ்ரீ புராணம் உரைநடை (?) - தழுவல் சைனம்
15 உதயணகுமார காவியம் விருத்தம் (?) 369 தழுவல் சைனம்
15 நாக்குமாரகாவியம் [7] விருத்தம் (?) - - -
15 காதம்பரி விருத்தம் ஆதிவராக கவி 1232 தழுவல் பொது

5[தொகு]

நூற்றாண்டு நூல் யாப்பு ஆசிரியர் செய்யுள் எண்ணிக்கை மூலமா, தழுவலா சமயம்
16 அரிச்சந்திர புராணம் விருத்தம் வீரை ஆசுகவிராசர் 1215 மூலம் பொது
16 புரூரவ சரிதை விருத்தம் ஐயம்பெருமாள் சுமார் 1000 மூலம் பொது
16 நைடதம் விருத்தம் அதிவீர ராம பாண்டியன் 1172 தழுவல் பொது
16 பாகவதம் விருத்தம் செவ்வைச்சூடுவார் 4973 தழுவல் வைணவம்
16 பாகவதம் விருத்தம் அருளாளதாசர் 9147 தழுவல் வைணவம்
17 பிரபோத சந்திரோதயம் விருத்தம் மாதை திருவேங்கட நாதர் 2019 தழுவல் வேதாந்தம்

அடிக்குறிப்பு[தொகு]

  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1972, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பத்தாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. pp. 50, 51. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. வைணவம் என எடுத்துக்கொள்வாரும் உண்டு
  3. 3.0 3.1 நூல் இல்லை
  4. தமிழகத்தில் நிலவிவந்த கதைகளைத் தழுவி உருவாக்கப்பட்டது
  5. தமிழ்நாட்டில் நிலவிய கதை
  6. ஆசிரியர் பாடியுள்ள இறைவணக்கப் பாடல்கள்
  7. நூல் கிடைக்கவில்லை

வெளி இணைப்புகள்[தொகு]