உள்ளடக்கத்துக்குச் செல்

தமிழில் சமசுகிருதத்தின் பாதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மொழியில் மாற்றம் இயல்பானது. அருகாமையில் உள்ள மொழிகளும், செல்வாக்கு உள்ள மொழிகளும், மாறும் தேவைகளும் ஒரு மொழியில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒலியியல், எழுத்துமுறை, உருபனியல், தொடரியல், பொருளியல், சொற்கள், இலக்கணம், இலக்கியம், பேச்சு என ஒரு மொழியின் எல்லா பிரிவுகளிலும் மாற்றம் ஏற்படலாம். தமிழ் மொழி அதன் நீண்ட வரலாற்றில் பல மொழிகளுடன் தொடர்பு கொண்டு வெவ்வேறு முறைகளில் மாற்றம் கண்டிருக்கிறது. இக் கட்டுரை தமிழ் மொழியில் சமசுகிருதத்தின் பாதிப்பு பற்றியதாகும்.

வரலாறு[தொகு]

தமிழ் மீது சமசுகிருதத்தின் பாதிப்பு வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வீச்சுடன் அமைந்துள்ளது.

கிபி 7 ம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலம்[தொகு]

சங்க காலத்திலேயே தமிழுக்கும் வட மொழிகளுக்கும் தொடர்பு இருந்துவந்துள்ளது. தொல்காப்பியத்தில் இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல் எனற சொல் வகைப்பாட்டில் வடசொல் வடமொழிகளில் இருந்து வந்த சொற்களைக் குறிக்கிறது. 7 ம் நூற்றாண்டு வரை தமிழில் சேர்ந்த வட மொழிச் சொற்கள் பெரும்பாலும் பிராகிருதம் அல்லது பாலி மூலம் கொண்டவை.[1]


கிமு 250 ஆண்டளவில் தமிழ் மொழி எழுதப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன.[2]ஆனால் சமசுகிருதம் கிபி 1-3 காலப்பகுதியிலேயே எழுதப்பட்டதற்கான ஆதாரங்களே உள்ளன.[3] ஆகையால் தமிழுக்கு சமசுகிருதுக்கு இணையான, அல்லது அதை விட தொன்மையான எழுத்து வரலாறு உண்டு என்பது புலனாகிறது. அன்று வட இந்தியாவில் பேச்சு வழக்கில் இருந்த பிராக்கிருத அல்லது பாலி சொற்கள் பண்டைத் தமிழ் மொழியில் சேர்ந்தன எனலாம்.

கிபி 7[தொகு]

"கி.பி ஏழாம் நூற்றாண்டிலிருந்தோ அல்லது அதற்குச் சற்று முன்னர் இருந்தோ சமசுகிருதத்தின் உண்மையான பாதிப்புக் காலம் தொடங்கிறது." [4] இக்காலத்தில் சமசுகிருதம் அரசியல், சமய, கல்வி, தத்துவச் செல்வாக்கைப் பெற்றிருந்தது.

கிபி 11-15[தொகு]

முதன்மைக் கட்டுரைகள்: மணிப்பிரவாளம், கிரந்தம், மலையாளம்

கிபி 11 நூற்றாண்டில் தமிழ் சமசுகிருத மொழிகள் கலப்பு மிகுந்து, மணிப்பிரவாளம் என்ற ஒரு இலக்கிய நடை செல்வாக்குப் பெற்றது. மணியும், பவளமும் சேர்த்து உருவாக்கப்பட்ட மாலை போல இரண்டு மொழிகள் கலந்து உருவான இலக்கிய நடை என்பது இதன் பொருளாகும். சமசுகிருதம் இறைவனுடைய மொழியாக பேற்றப்பட்ட, இக்காலத்தில் இந்நடையில் எழுதுவது கற்றோரிடம் கருத்துப் பரிமாற அவசியம் என்ற நிலையை உருவாக்கியது. இராமனூசர், ஆதி சங்கரர், வில்லிபுத்திரர் என பல தமிழ் சமயப் பெரியோர்கள் இந்நடையிலியே எழுதினர். இந் நடை 15-ம் நூற்றாண்டு வரை அதிக செல்வாக்கோடு வழக்கில் இருந்தது. இதனால் தமிழ் மொழி ஒரு பெரும் இலக்கிய பங்களிப்பை இழந்தது. அன்றைய சேர நாட்டில், மணிப்பிரவாளத்தின் தாக்கம் கடுமையாக இருந்ததால் சேர நாட்டுத் தமிழ், இன்று மலையாளம் என அழைக்கப்படும் புதிய மொழியாக மாறிவிட்டது.

கிபி 16 - 18[தொகு]

கிபி 16 ம் நூற்றாண்டில் ஐரோப்பியர் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் வரத் தொடங்கினர். இவ்வாறு போர்த்துகீச நாட்டில் இருந்து வந்த என்றீக்கே என்றீக்கசு தமிழ் மொழியில் கிறித்துவப் பாடல்களை 1554 ம் ஆண்டு முதன் முதலாக அச்சடித்து வெளியிட்டார்.[5][6]. கிறித்தவத்தின் வரவு சமசுகிருதம் பெற்றிருந்த இறை மொழி என்ற நிலையை அச்சுறுத்தியது.

கிபி 19[தொகு]

முதன்மைக் கட்டுரை: தனித்தமிழ் இயக்கம்

18 ம் நூற்றாண்டு தொடக்கம் தமிழின் மறுமலர்ச்சிக் காலம் எனலாம். இக்காலத்திலேயே தமிழர்களின் இலக்கிய மரபு தமிழர்களுக்கே புலப்படத் தொடங்கியது. உ. வே. சாமிநாதையர், சி. வை. தாமோதரம்பிள்ளை, ஆறுமுக நாவலர் உட்பட பல தமிழறிஞர்கள் ஏட்டுத் தமிழ் இலக்கியங்களை தேடிப் பதிப்பித்து பாதுகாத்தனர். 1916 ம் ஆண்டில் தமிழில் மிகுதியாகக் காணப்பட்ட சமசுகிருத சொற்களையும் மணிப்பிரவாள நடையையும் தடுக்க தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்டது. தேவநேயப் பாவாணர், மறைமலை அடிகள், பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் ஆகியோர் முன்னின்று தனித் தமிழ் இயக்கத்தைத் தொடங்கினர்.

மொழியியல் பாதிப்பு[தொகு]

ஒலியின் அமைப்பில் சமசுகிருதத்தின் செல்வாக்கு[தொகு]

எழுத்துமுறையில் சமசுகிருதத்தின் செல்வாக்கு[தொகு]

கலைச்சொற்கள்[தொகு]

சமசுகிருத மூலம் தமிழ் மூலம் முரண்பாடு[தொகு]

 • விஞ்ஞானம் - அறிவியல்
 • புவிசாத்திரம் - புவியியல்

சமசுகிருதமொழி அறிஞர்களின் தமிழ்ப் பழிப்பு[தொகு]

வடமொழிக்கும் தமிழ் மொழிக்கும் இடையேயான தொடர்பு சமனாக பெரும்பாலும் இருக்கவில்லை. சமசுகிருதம் தமிழ்மொழி மீது அதிகாரமும் செலுத்தியது. இதை பன்மொழி ஆய்வாளர் மு. வரதராசன் பின்வருமாறு கூறுகிறார்.[7]

சமூகப் பாதிப்பு[தொகு]

நீச்ச மொழி (தாழ் மொழி) இறை மொழி வேறுபாடு[தொகு]

 • தமிழில் அரிச்சினை
 • தமிழில் வழிபாடு

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. தெ.பொ.மீனாட்சி சுந்தரனார். (1962). தமிழ் மொழி வரலாறு (ச. செயப்பிரகாசம், மொழிபெயர்ப்பு). சென்னை: காவ்யா பதிப்பகம். பக்கம் 259.
 2. "The Brahmi script reached Upper South India (Andhra-Karnataka regions) and the Tamil country at about the same time during the 3rd century B.C. in the wake of the southern spread of Jainism and Buddhism" Iravatham Mahadevan (2003). Early Tamil Epigraphy from the Earliest Times to the Sixth Century A.D. Cambridge, Harvard University Press. [1] E. Annamalai, Sanford B. Steever, 'Modern Tamil' in: Sanford B. Steever (ed.) The Dravidian Languages Routledge (1998), 100–128, mention 254 BC as the date of the earliest datable inscription.
 3. Richard Salomon, Indian Epigraphy (1998), p. 37.
 4. தெ. பொ. மீனாட்சி சுந்தரனார். (1962). தமிழ் மொழி வரலாறு (ச. செயப்பிரகாசம், மொழிபெயர்ப்பு). சென்னை: காவ்யா பதிப்பகம். பக்கம் 262.
 5. http://books.google.com/books?id=VToJrBPbQ9AC&pg=RA1-PA495&lpg=RA1-PA495&dq=henrique+tamil&source=web&ots=W6YGxwsW3Y&sig=ifOAr9a-NSD5B2jP8EkEXZ2ZPkk#PRA1-PA496,M1
 6. Donald F. Lach, Asia in the making of Europe. Publisher?
 7. மு. வரதராசன். (2004). தமிழ் இலக்கிய வரலாறு. புது தில்லி: சாகித்திய அகாதெமி.

வெளி இணைப்புகள்[தொகு]