உள்ளடக்கத்துக்குச் செல்

மொழிக் கொள்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அனேக நாடுகள் அல்லது அரசுகள் மொழி தொடர்பாக ஒரு கொள்கையைக் கொண்டிருக்கின்றன. பல நாடுகளில் அரசமைப்புச் சட்டத்திலேயே மொழிப் பயன்பாடு தொடர்பான கூற்றுக்கள் உண்டு. மொழிக் கொள்கை தவறாக அமையும் பொழுது, அது பெரும் பிரச்சினைகளுக்கு இட்டுச் செல்லலாம். இந்தியாவில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள், இலங்கையில் வெடித்த ஈழப்போராட்டம் ஆகியவற்றுக்கு அந்த நாடுகளின் ஏற்றுக்கொள்ளப்படாத மொழிக் கொள்கைகள் காரணமாக அமைந்தன. இன்றைய காலகட்டத்தில் பல நாடுகள் பன்மொழிகளையும் பாதுகாக்கும் பண்புடனேயே சட்டங்களை அமைக்க முனைகின்றன.

மொழி உரிமை

[தொகு]

மொழி உரிமை என்பது, ஒரு மொழி அல்லது பல மொழிகளை எந்த சூழலிலும் பயன்படுத்த அளிக்கப்படும் மனித மற்றும் சமூக உரிமை ஆகும். மொழி உரிமை + மனித உரிமை=மொழியியல் மனித உரிமை. அனைத்து மொழி உரிமைகளும் மொழியியல் மனித உரிமை ஆகாது,ஆனால் அனைத்து மொழியியல் மனித உரிமைகளும் மொழி உரிமை ஆகும்.மொழி சார்ந்த உரிமைகளுக்கு எடுத்துக்காட்டு மொழி அடையாளம்,தாய் மொழி அணுகுமுறை,எந்த மொழியயையும் கட்டயாப்படுத்தி திணிக்காமை,மொழி அடிப்படையில் முறையான முதன்மை கல்விக்கான அணுகல் மற்றும் சிறுபான்மை மொழிக் குழுக்களை தனித்துவமான குழுக்களாக நிலைநிறுத்தும் உரிமை முதலியனவாகும்.

மொழியியல் உரிமைகளின் உலகளாவிய பிரகடனத்தை, ஸ்பானியா நாட்டிலுள்ள பார்சிலோனா நகரில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் ஜூன் 6,1996 அன்று அங்கீகரித்தது..

அரச மொழி

[தொகு]

ஒரு அரசின் மொழிக் கொள்கை அரச மொழியை தீர்மானிக்கிறது. அரச மொழி என்பது ஒரு அரசின் நாளாந்த அலுவல்கள் நடைபெறும் மொழி ஆகும். எடுத்துக்காட்டாக தமிழ்நாடு அரசு தமிழ் மொழியை அரச மொழியாக கொண்டுள்ளது.

இணைப்பு மொழி

[தொகு]

மொழிக் கொள்கை இணைப்பு மொழியையும் வரையறை செய்யலாம். இந்தியாவில் ஆங்கிலம் அல்லது இந்தி நடுவண் அரசுக்கும் தமிழ்நாடு அரசுக்கும் இணைப்பு மொழிகளாக இருக்கின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மொழிக்_கொள்கை&oldid=3515681" இலிருந்து மீள்விக்கப்பட்டது