தனுஜா சந்திரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தனுஜா சந்திரா
2007 இல் தனுஜா சந்திரா
பிறப்பு1969 (அகவை 54–55)
தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட இயக்குநர், எழுத்தாளர்
உறவினர்கள்விக்ரம் சந்திரா (சகோதரர்)
அனுபமா சோப்ரா (சகோதரி)
Zuni Chopra (niece)

தனுஜா சந்திரா (Tanuja Chandra பிறப்பு 1969) என்பவர் ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவர் எழுத்தாளர் கம்னா சந்திராவின் மகளும், எழுத்தாளர் விக்ரம் சந்திரா மற்றும் திரைப்பட விமர்சகர் அனுபமா சோப்ராவின் சகோதரி ஆவார். இவர் யஷ் சோப்ராவின் தில் தோ பாகல் ஹை (1997) படத்தின் திரைக்கதையை இணைந்து எழுதினார். மேலும் பெண் மைய கதாபாத்திரங்களைக் கொண்ட திரைப்படங்களை அடிக்கடி இயக்கியதற்காக அறியப்படுகிறார். அவ்வாறான படங்களில் குறிப்பிடத்தக்கவை துஷ்மன் (1998) மற்றும் சங்கர்ஷ் (1999) ஆகும். [1]

குடும்பம்[தொகு]

தனுஜா சந்திரா தில்லியில் பிறந்தார். [2] இவர் எழுத்தாளர் விக்ரம் சந்திரா மற்றும் திரைப்பட விமர்சகர் அனுபமா சோப்ரா ஆகியோரின் சகோதரி ஆவார். இவரது தாயார் திரைப்பட எழுத்தாளர் கம்னா சந்திரா . [3] [4]

தொழில்[தொகு]

தனுஜா சந்திரா 1995 இல் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் தன்வி ஆஸ்மி நடித்த ஜமீன் ஆஸ்மான் என்ற தொலைக்காட்சி தொடரின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். 1996 இல், சப்னம் சுக்தேவ் உடன் இணைந்து மும்கின் என்ற மற்றொரு தொலைக்காட்சித் தொடரை இயக்கினார். 1997 இல், யஷ் சோப்ராவின் தில் தோ பாகல் ஹை திரைப்படத்திற்கான திரைக்கதையை இவர் எழுதினார், இது வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

இவர் இயக்குநர் மகேசு பட் உடன் அவ்வப்போது இணைந்து பணியாற்றினார். மேலும் அவரது படமான ஜக்ம் (1998) படத்துக்கு திரைக்கதை எழுதினார். அதே ஆண்டில் இவர் துஷ்மன் மூலம் திரைப்பட இயக்குனராகவும் அறிமுகமானார். கஜோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. மேலும் வணிகரீதியாக மிதமான வெற்றியைப் பெற்றது.

இவரது அடுத்த படமான சங்கர்ஷ் (1999), மகேசு பட்டால் தயாரிக்கப்பட்டது. அப்படத்தில் அக்‌சய் குமார், பிரீத்தி சிந்தா, அசுதோஷ் ராணா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். [5]

அதன்பிறகு, தனுஜா பல படங்களை இயக்கியுள்ளார், அவற்றில் பல கவனிக்கப்படாமல் போனது. என்றாலும் சந்திரா எழுதி, இயக்கிய சுர் - தி மெலடி ஆஃப் லைஃப் (2002) மற்றும் ஃபிலிம் ஸ்டார் (2005) போன்ற திரைப்படங்கள் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றன. மேலும் ஒரு இயக்குனராகவும் எழுத்தாளராகவும் இவரது பணிக்காக பாராட்டுக்களைப் பெற்றன.

இவரது அண்மைய படங்கள் சுஷ்மிதா சென் நடித்த ஜிந்தகி ராக்ஸ் (2006) ஆகும். இப்படத்திற்கு கதை, திரைக்கதையையும் தனுஜா சந்திரா எழுதினார். இவரது அண்மைய திரைப்படமான ஹோப் அண்ட் எ லிட்டில் சுகர் (2008), அமெரிக்காவில் முழுவதுமாக ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டது. 2016 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இவர் ஜீ டெலிஃபிலிம்களுக்காக சில்வாட் என்ற குறும்படத்தை இயக்கினார், அதில் கார்த்திக் ஆர்யன் நடித்தார். [6] [7]

இர்பான் கான் மற்றும் பார்வதி நடித்த கரீப் கரீப் சிங்கிள்லே [8] தனுஜாவின் அண்மைய திரைப்படம். ஸ்டார் தொலைக்காட்சிக்காக விரைவில் தயாரிக்கப்பட உள்ள தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்கும் பணியில் இவர் ஈடுபட்டுள்ளார். இவரின் சிறுகதைகள் அடங்கிய "BIJNIS WOMEN" [9] என்ற பெயரிலான ஒரு புத்தகம் பென்குயின் ரேண்டம் ஹவுஸால் வெளியிடப்பட்டுள்ளது.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு திரைப்படம் இயக்குனர் எழுத்தாளர் குறிப்பு
1997 தமன்னா இல்லை ஆம்
1997 தில் தோ பாகல் ஹை இல்லை ஆம்
1998 ஜக்ம் இல்லை ஆம்
1998 துஷ்மன் ஆம் இல்லை
1999 சங்கர்ஷ் ஆம் இல்லை
2001 யே ஜிந்தகி கா சஃபர் ஆம் இல்லை
2002 சுர் - தி மெலடி ஆப் லைப் ஆம் ஆம்
2005 பிலிம் ஸ்டார் [10] ஆம் ஆம்
2006 ஜிந்தாகி ராக்ஸ் ஆம் இல்லை
2008 ஹோப் அண்ட் லிட்டில் சுகர் ஆம் ஆம்
2016 சில்வட் ஆம் இல்லை குறும்படம்
2017 கரீப் கரீப் சிங்கிள்லே [11] ஆம் ஆம்
2019 எ மான்சூன் டேட் [12] ஆம் இல்லை குறும்படம்
2019 ஆண்டி சுதா ஆண்டி ராதா [13] ஆம் இல்லை ஆவணப்படம்

மேற்கோள்கள்[தொகு]

  1. Jha, Subhash K. (3 January 2007). "Why Tanuja Chandra is an angry young woman". Indo-Asian News Service, Press Trust of India. Hindustan Times. Archived from the original on 25 January 2013.
  2. "I'm a migrant, this is my city". https://timesofindia.indiatimes.com/home/sunday-times/deep-focus/Im-a-migrant-this-is-my-city/articleshow/2788430.cms. 
  3. "I've inherited creative genes from mom: Tanuja Chandra". https://www.business-standard.com/article/news-ians/i-ve-inherited-creative-genes-from-mom-tanuja-chandra-118021800424_1.html. 
  4. "Tanuja Chandra's film is stuck". பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
  5. Dubey, Bharati. "Exclusive! Filmmaker Tanuja Chandra: Ashutosh Rana posed as a woman on the phone and convinced me to cast him as Lajja Shankar Pandey in 'Sangharsh'" (in en). https://timesofindia.indiatimes.com/entertainment/hindi/bollywood/news/exclusive-filmmaker-tanuja-chandra-ashutosh-rana-posed-as-a-woman-on-the-phone-and-convinced-me-to-cast-him-as-lajja-shankar-pandey-in-sangharsh/articleshow/79153353.cms. 
  6. "Kartik Aaryan plays Muslim boy in Tanuja Chandra's film". The Indian Express. 18 February 2016. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
  7. "Kartik Aaryan plays Muslim boy in Tanuja Chandra's film". indianexpress.com. 18 February 2016. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  8. "Qarib Qarib Singlle director Tanuja Chandra: Even when we are single, we are never free". 11 November 2017.
  9. ""Women Have Always Had To Move Against The Tide!" Says Tanuja Chandra, Writer And Director". 24 May 2017.
  10. "Tanuja Chandra: Today there is more openness towards films with fresh content". 5 December 2017.
  11. "Qarib Qarib Singlle Movie Review: Irrfan Khan, Parvathy Star In Freewheeling Tale Of Lonely Hearts".
  12. "Konkona Sensharma on playing a transsexual in 'A Monsoon Date' and more..." 8 June 2019. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
  13. Dipankar Sarkar (24 May 2020). "Tanuja Chandra's insightful documentary Aunty Sudha Aunty Radha". பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனுஜா_சந்திரா&oldid=3886219" இலிருந்து மீள்விக்கப்பட்டது