தணிகா சர்க்கார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தணிகா சர்க்கார் (Tanika Sarkar) ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள நவீன இந்தியாவின் வரலாற்றாளர் ஆவார் . இவரது பணியானது, காலனித்துவ மற்றும் பின்காலனித்துவ தெற்காசியாவில் மதம், பாலினம் மற்றும் அரசியலில் கவனம் செலுத்துகிறது, குறிப்பாக பெண்கள் மற்றும் இந்து வலதுசாரிகள் தொடர்பாக.

வாழ்க்கை மற்றும் தொழில்[தொகு]

தணிகா சர்க்கார், மாநிலக் கல்லூரியின் ஆங்கிலப் பேராசிரியரான அமல் பட்டாச்சார்யா மற்றும் ஆரம்பகால இந்திய கலாச்சாரம் பற்றிய சிறந்த சமஸ்கிருதவாதியும் , அறிஞருமான சுகுமாரி பட்டாச்சார்யா ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் சக வரலாற்றாளரை மணந்தார்.

சர்க்கார் 1972 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் மாநிலப் பல்கலைக்கழகத்தில் வரலாறு பிரிவில் இளங்கலைப் பட்டம் பெற்றார். 1974 இல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் நவீன வரலாற்றில் பட்டமும் பெற்றார். 1981 இல் தில்லி பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக உள்ளார். இவர் செயின்ட் ஸ்டீபன் கல்லூரி மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் இந்திரபிரஸ்தா கல்லூரியிலும் கற்பித்துள்ளார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் நவீன இந்திய வரலாற்றையும் கற்பித்துள்ளார். [1]

வெளியீடுகள்[தொகு]

தனிகா சர்க்கார் பின்வரும் தனிவரை நூல்களை வெளியிட்டுள்ளார்:

  • வங்காளம் 1928-1934: தெ பாலிடிக்ஸ் ஆஃப் புரடஸ்ட், (ஆக்ஸ்போர்டு யுனிவர்சிட்டி பிரஸ் இந்தியா, 1987),ISBN 978-0195620764 .
  • வேர்ட்ஸ் டூ வின்: எ மாடர்ன் ஆடோபயோகிராபி (காளி ஃபார் விமன் ,1999)
  • காக்கி ஷார்ட்ஸ் அண்ட் சஃப்ரான்:எ கிரிடிக் ஆஃப் தெ இந்து ரைட் (தபன் பாசு, பிரதீப் தத்தா, சுமித் சர்க்கார் மற்றும் சம்புத்த சென் ஆகியோருடன் இணைந்து; ஓரியண்ட் லாங்மேன் 1993),ISBN 978-0863113833 .
  • விமன் அண்ட் ரைட் விங் மூவ்மண்ட்:இண்டியன் எக்ஸ்பீரியன்ஸ்(ஊர்வசி புட்டாலியாவுடன் இணைந்து திருத்தப்பட்டது, 1995),ISBN 978-8185107677 .

அங்கீகாரங்கள்[தொகு]

2004 ஆம் ஆண்டில், மேற்கு வங்காளத்தில் வழங்கப்படும் மிக உயர்ந்த இலக்கிய விருதான வங்காள அகாதமியின் ரவீந்திர புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளார். மார்ச் 2007 இல் நந்திகிராமில் காவல் துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் அவர் அதைத் திருப்பித் தருவதாகத் தெரிவிக்கப்பட்டது. [2]

சான்றுகள்[தொகு]

  1. "Curriculum Vitae: Tanika Sarkar". Trinity College Dublin (30 April 2005).
  2. "Historians to return award". http://www.thehindu.com/todays-paper/tp-national/historians-to-return-award/article1812002.ece. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தணிகா_சர்க்கார்&oldid=3320868" இருந்து மீள்விக்கப்பட்டது