தட்றோம் தூக்றோம்
தட்றோம் தூக்றோம் | |
---|---|
![]() | |
இயக்கம் | அருள் எஸ். |
தயாரிப்பு | அருள் எஸ். |
கதை | கபிலன் வைரமுத்து |
இசை | பாலமுரளி பாலு |
நடிப்பு | டீஜே அருணாச்சலம் பௌசி |
ஒளிப்பதிவு | சத்தீஷ் முருகன் |
படத்தொகுப்பு | ஆர். சுதர்சன் |
கலையகம் | மீடியா மார்சல் |
வெளியீடு | செப்டம்பர் 2020(Toronto Tamil Film Festival) 14 நவம்பர் 2020 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தட்றோம் தூக்றோம் (Thatrom Thookrom) என்பது 2020 ஆம் ஆண்டு வெளியான இந்தியத் தமிழ் அதிரடி நாடகத் திரைப்படமாகும், அருள் எஸ். எழுதி, இயக்கிய இப்படத்தில் டீஜே அருணாசலம், சீனு மோகன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சம்பத் ராம் எதிர்மறை பாத்திரத்தில் நடித்துள்ளார்.[1] படத்திற்கு பாலமுரளி பாலு இசையமைத்துள்ளார். கபிலன் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த படம் 14 நவம்பர் 2020 அன்று குறைந்த அளவு திரையரங்குகளில் வெளியானது.[2]
நடிகர்கள்
[தொகு]- டீஜே அருணான்னலம் காகாவாக
- பௌசி அஞ்சனாவாக
- நண்டு சுரேஷ் கடுகுவாக
- சக்திவேல் ல்கோனா உருளையாக
- சீனு மோகன் இராஜமாணிக்கமாக
- காளி வெங்கட் பாண்டியனாக
- லிங்கா காவல் ஆய்வாளர் சேகராக
- சக்தி சரவணன் ஏசிபி ராஜாராம்
- ஜி. மாரிமுத்து தண்டபாணியாக
- கிரேன் மனோகர் முருகனாக
- சம்பத் ராம் சின்னாவாக
- ஜி. வி. சுப்பா ராவ்
- சிவவேலவன்
- ரவி வெங்கட்ராமன் மணிகண்டனாக
- சூப்பர்குட் சுப்பிரமணி மதுசுந்தரமாக
- உடுமலை ரவி
தயாரிப்பும், வணிகமும்
[தொகு]படத்தின் ஒளிப்பதிவு 2018 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் துவங்கியது. முன்னதாக டீஜே அருணாசலம் இப்படத்தின் முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க 2017 இல் ஒப்பந்தமானார். படத்தின் பெரும்பாலான பகுதிகள் சென்னையில் படமாக்கப்பட்டன. இந்த படம் துவக்கத்தில் 2016 இந்திய பணத்தாள் மதிப்பிழப்பு நடவடிக்கையை அடிப்படையாகக் கொண்டதாக ஊகிக்கப்பட்டது,[3] இருப்பினும், படம் இந்த அடிப்படையாக கொண்டது அல்ல என்று இயக்குநர் தெளிவுபடுத்தினார்.[4]
இசை
[தொகு]இப்படத்திற்கான இசையை பாலமுரளி பாலு அமைத்தார். முதல் ஒற்றை பாடலான "டிமானிடேசன் ஆன்தம்" 2017 நவம்பரில் வெளியிடப்பட்டது. இது சர்ச்சைகளை உருவாக்கியபோதிலும் வைரலாகியது.[5] நவம்பர் 8, 2016 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியால் திணிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையிலிருந்து இருந்து இந்த பாடல் உந்துதல் பெற்றது [6]
கௌரவம்
[தொகு]- இந்த படம் டொராண்டோ சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது [7]
சர்ச்சை
[தொகு]நடிகர் சிலம்பரசன் பாடிய "டிமானிடேசன் ஆன்தம்" என்று அழைக்கப்படும் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கருப்பொருளாக கொண்ட பாடல் 2017 நவம்பரில் இந்தியாவில் பண மதிப்பிழப்பின் முதலாம் ஆண்டு நாளின் போது வெளியிடப்பட்டது.[8] எவ்வாறாயினும், இந்த குறிப்பாக பாடல் அதன் பணமதிப்பிழப்பை விமர்சிக்கும் உள்ளடக்கத்தால், அரசியல் வட்டாரங்களில் சர்ச்சையை எழுப்பியது.[9] நடிகர் சிம்பு பாடலைப் பாடியதற்காக கண்காணிப்பில் இருந்தார், அவருக்கு சிறப்பு காவல் பாதுகாப்பு வழங்கப்பட்டது.[10][11]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "'Teejay-வின் தட்றோம் தூக்றோம்' - ஹீரோவாக களமிறங்கு 'அசுரனின் மகன்'". NDTV Tamil Cinema. Retrieved 2020-04-16.
- ↑ https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/our-team-is-excited-about-thatrom-thookroms-selection-for-ttiff-arul-s/articleshow/78057907.cms?from=mdr
- ↑ "Teejay's film as lead is based on demonetisation - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-04-16.
- ↑ "We are not analyzing demonetisation, says Arul - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2020-04-16.
- ↑ "I will be back with something different: Simbu thanks fans for support". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-12. Retrieved 2020-04-16.
- ↑ "Demonetization Anthem: Simbu sings 'No cash, No cash', takes on Narendra Modi government". The Indian Express (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-10. Retrieved 2020-04-16.
- ↑ https://www.ttff.ca/official-selection-2020
- ↑ "No cash! STR sings #DemonetisationAnthem". The New Indian Express. Retrieved 2020-04-16.
- ↑ "Now, Simbu sings on note ban woes" (in en-IN). https://www.thehindu.com/news/national/tamil-nadu/now-simbu-sings-on-note-ban-woes/article20242884.ece.
- ↑ Pramod Madhav (November 12, 2017). "No cash!: New Silambarasan song criticises demonetisation, GST. Actor gets police protection". India Today (in ஆங்கிலம்). Archived from the original on 16 March 2022. Retrieved 2020-04-16.
- ↑ "Singer Silambarasan back in the news, with demonetisation anthem" (in en). 12 November 2017 இம் மூலத்தில் இருந்து 23 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200523183749/https://timesofindia.indiatimes.com/city/chennai/simbu-back-in-the-news-with-demon-anthem/articleshow/61611050.cms.