பாலமுரளி பாலு
பாலமுரளி பாலு | |
---|---|
பிறப்பு | 16 சூலை இந்திய ஒன்றியம், தமிழ்நாடு, சென்னை |
தொழில்(கள்) | இசை இயக்குநர், பாடல் எழுத்தாளர், இசை தயாரிப்பாளர் |
இசைத்துறையில் | 2016 – தற்போது வரை |
பாலமுரளி பாலு (Balamurali Balu) என்பவர் தமிழ் திரைப்படத்துறையில் பணியாற்றும் ஒரு இசை இயக்குனர் ஆவார். [1]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]பாலு தனது இசை வாழ்க்கைக்கு முன்னர், ஜோர்ஜியா தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் வேதிப் பொறியியலில் முனைவர் படிப்பை முடித்து, [2] 2009 இல் இன்டெல் டெக்னாலஜிஸில் செயல்முறை பொறியாளராக பணியாற்றினார். [3] [4] இவர் பெர்க்லீ இசைக் கல்லூரியின் முன்னாள் மாணவர் ஆவார். [5]
தொழில்
[தொகு]2017 ஆம் ஆண்டில் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட பீச்சாங்கை திரைப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றார். வித்தியாசமான திரைக்கதையின் நகைச்சுவைக்கு வலு சேர்த்ததற்காக இசைக்கு நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது. [6] இத்திரைப்படத்திற்காக இந்திய ரெக்கார்டிங் ஆர்ட்டிஸ்ட் அசோசியேஷன் விருதுகள் 2018 இல் பிராந்திய திரைப்பட பிரிவில் சிறந்த இசை தயாரிப்பாளர் விருதை பெற்றார். [7]
2018 இல், கௌதம் கார்த்திக் நடித்த ஹரஹர மஹாதேவகி படத்திற்கு இசையமைக்க இயக்குநர் சந்தோஷ் பி. ஜெயக்குமாருடன் பாலு கைகோர்த்தார். குறிப்பாக "ஹர ஹர மஹாதேவகி" என்ற தலைப்பு பாடல் மிகுந்த புகழ்பெற்றதால் இந்த இசை அதிக கவனத்தை ஈர்த்தது. [8] ஹர ஹர மஹாதேவகி யின் வெற்றியுடன், பாலு வெற்றிப்படமான இருட்டு அறையில் முரட்டு குத்து, [9] படத்தின் வழியாக ஜெயக்குமார் மற்றும் கௌதம் கார்த்திக் ஆகியோருடனான கூட்டணியில் அவர்களின் இரண்டாவது படத்திலும் தொடர்ந்தார். பின்னர் தனிமனித வரலாற்றுப் படமான டிராபிக் ராமசாமி வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட ராபிக் ராமசாமி படத்திற்கு இசையமைத்தார். அதன்பிறகு, தெலுங்கு படமான பலேமகோடியின் மறுஆக்கமான ஆர்யா தடித்த கஜினிகாந்த் படத்தின் வழியாக மூன்றாவது முறையாக ஜெயக்குமாருடன் பாலு இணைந்தார்.
2019 இல், இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் தெலுங்கு மறு ஆக்கமான சிக்கடி கடிலோ சித்கொடுடுவுக்கு பாலு இசையமைத்தார், இதன் வழியாக இவர் தெலுங்கு திரைப்படத் துறையில் அறிமுகமானார்.
மற்ற வேலைகள்
[தொகு]பாலு தனது ஆல்பங்களான ராப் ஸ்மாஷ் மற்றும் வில்லுப்பாட்டு ஆகியவற்றில் இசை தயாரிப்பாளரான லேடி காஷுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.[10] [11] சென்னையில் சோனிக் பிரோ ஸ்டுடியோஸ் என்ற இசை பதிவகத்தையும் வைத்திருக்கிறார். [12]
இசைத்தொகுப்பு தரவுத்திரட்டு
[தொகு]ஆண்டு | படத்தின் தலைப்பு | பிற மொழிகள் | குறிப்புகள் |
---|---|---|---|
2016 | மதியால் வெல் | வெளிவராத படம் | |
2017 | பீச்சாங்கை | சிறந்த இசை தயாரிப்பாளர் (IRAA விருதுகள் - 2018) [7] | |
ஹரஹர மஹாதேவகி | |||
2018 | இருட்டு அறையில் முரட்டு குத்து | சிக்கடி கடிலோ சித்கொடுடு (தெலுங்கு) | |
பிராபிக் ராமசாமி | |||
கஜினிகாந்த் | |||
2020 | பல்லு படாம பாத்துக்க [13] | தயாரிப்பிற்குப்பின் | |
2020 | தட்றோம் தூக்றோம் |
குறிப்புகள்
[தொகு]
- ↑ "Balamurali Balu - Composer". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Plasma processing of cellulose surfaces and their interactions with fluids". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Hess Group Alumni - Georgia Institute of Technology". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Interview of Iruttu Arayil Murattu Kuththu Music Composer - Balamurali Balu". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Berklee College of Music - Alumni Member". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Director Ashok talks about his first feature, the quirky 'Peechaankai'". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ 7.0 7.1 "IRAA Awards - 2018 Winners". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Viral Hit: Hara Hara Mahadevaki- Official Video Song". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Iruttu Arayil Murattu Kutthu - Box office Success". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Rap Smash - Lady Kash & Balamurali Balu". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Villupaattu - Lady kash & Balamurali Balu". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Sonic Pro Studios - Chennai". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.
- ↑ "Pallu Padama Paathuka, Tamil cinema's second zombie film". பார்க்கப்பட்ட நாள் 16 June 2018.