தகடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தகடு
இயக்கம்எம். தங்கதுரை
தயாரிப்புரகாதேவி
கதைஎம். தங்கதுரை
இசைகார்த்திகேயன் எஸ்
நடிப்புபிரபா
அஜய்
சனம் ஷெட்டி
ஒளிப்பதிவுசர்லஸ் மெல்வின்
கலையகம்தாய் தந்தை மூவிஸ்
வெளியீடு2 செப்டம்பர் 2016 (2016-09-02)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தகடு (Thagadu) என்பது 2016ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் அதிரடி நாடகத் திரைப்படம் ஆகும். எம். தங்கதுரை எழுதி இயக்கிய இப்படத்தில் பிரபா, அஜய், சனம் ஷெட்டி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படமானது 2016 செப்டம்பர் 2 அன்று வெளியானது.[1][2]

நடிகர்கள்[தொகு]

  • பிரபா
  • அஜய்
  • சனம் ஷெட்டி
  • ராம் கிரண்
  • விவின்
  • பிரியங்கா சுக்லா
  • ஆயிஷா
  • ஆர். தீபக் ராஜ்
  • ராஜ் கபூர் அரசனின் அமைச்சராக
  • மிப்பு ரவுடியாக
  • ராஜேந்திரன் குப்புசாமி
  • எம். தங்காதுரை
  • சபிதா ஆனந்த்
  • நெல்லை சிவா பூங்கா அதிகாரியாக
  • ஹசிகா தத் சிறப்பு தோற்றத்தில்

தயாரிப்பு[தொகு]

இப்படத்தில் சனம் ஷெட்டி இளவரசி வேடத்தில் நடித்தார்.[3][4] இப்படத்தில் கல்லூரி மாணவர்களாக பல புதுமுகங்கள் நடித்தனர்.[5] படத்தில் இடம்பெற்ற வரலாற்று காலகட்டப் பகுதிகள் ஆந்திராவின் கங்குண்டி கோட்டையில் படமாக்கப்பட்டன. இப்படத்தில் பிரபா, அஜய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

படத்தின் இசை வெளியீடானது 2016 சூலையில் நடந்தது. இதில் தமிழ் திரையுலகில் ஆளுமைகளான ஆர். கே. செல்வமணி, டி. சிவா, பேரரசு ஆகியோர் கலந்துகொண்டனர்.[6]

வெளியீடு[தொகு]

டைம்ஸ் ஆப் இந்தியா சமயம் படத்திற்கு ஐந்து நட்சத்திரங்களில் இரண்டை வழங்கியது. விமர்சகர் கதையை விமர்சிக்கும் போது வரலாற்றுக் கால காட்சிகளைப் பாராட்டினார்.[7] மலை மலரின் ஒரு விமர்சகர் படத்திற்கு எதிர்மறையான விமர்சனத்தை அளித்தார், கதை "பழையது" என்று கூறினார்.[8] திரைப்பட போர்ட்டல் இஃப்லிக்ஸ்.காமில் எழுதப்பட்ட விமர்சனத்தில், "கதையை குறுகிய காலத்தில் சித்தரிக்க முடியும், தேவையற்ற காட்சிகள் திரைப்படத்தை ஜவ்வாக இழுக்கிறது." [9]

குறிப்புகள்[தொகு]

  1. "தகடு". Tamil Murasu. 11 June 2016. Archived from the original on 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  2. "'தகடு' கதை! - Dinamalar Tamil Cinema News". www.dinamalarnellai.com. Archived from the original on 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  3. Subramanian, Anupama (30 August 2016). "Playing a princess was a fresh experience: Sanam Shetty". Deccan Chronicle. Archived from the original on 27 November 2019. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
  4. "Sanam Shetty in a period flick". Deccan Chronicle. 31 May 2016. Archived from the original on 10 June 2016. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
  5. "Sanam Shetty plays a queen in Thagadu - Times of India". The Times of India. Archived from the original on 19 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
  6. "தகடு இசை விழா". Dinamani. Archived from the original on 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 6 November 2020.
  7. "தகடு - திரை விமர்சனம் -Samayam Tamil". The Times of India Samayam. 19 September 2016. Archived from the original on 28 October 2020. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
  8. "தகடு". maalaimalar.com. 7 September 2016. Archived from the original on 31 October 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.
  9. "Thagadu". Iflicks. 9 September 2016. Archived from the original on 6 November 2020. பார்க்கப்பட்ட நாள் 25 October 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தகடு_(திரைப்படம்)&oldid=3660137" இலிருந்து மீள்விக்கப்பட்டது