டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ்
Terminator 3: Rise of the Machines
இயக்கம்ஜோனதன் மியோவோ]]
தயாரிப்பு
  • மரியோ கஸார்
  • ஆண்ட்ரூ ஜி. வாஜ்னா
  • ஜோயல் பி. மைக்கேல்ஸ்
  • ஹால் லிபர்மேன்
  • கொலின் வில்சன்
மூலக்கதை{{ஜேம்ஸ் கேமரன் மற்றும் கேல் ஆன் ஹார்ட்|ஆகியோரால் உருவாக்கப்பட்ட|கதாப்பாத்திரங்கள்}}
திரைக்கதை
  • ஜான் ப்ரன்காடோ
  • மைக்கேல் பெர்ரிஸ்
இசைமார்கோ பெல்ட்ராமி
நடிப்பு
ஒளிப்பதிவுடான் பர்கெஸ்
படத்தொகுப்பு
  • நிக்கோலா டி டோத்
  • நீல் டிராவிஸ்
கலையகம்
  • இண்டர்மீடியா[1]
  • சி2 பிக்சர்ஸ்[1]
விநியோகம்
வெளியீடுசூலை 2, 2003 (2003-07-02)
ஓட்டம்109 நிமிடங்கள்[2]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$187.3 மில்லியன் ($167.3 million excluding production overhead)
மொத்த வருவாய்$433.4 மில்லியன்

டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் (Terminator 3: Rise of the Machines ( டெர்மினேட்டர் 3 அல்லது டி3 என்றும் குறிப்பிடப்படுகிறது) என்பது 2003 ஆண்டைய அமேரிக்க அறிபுனை அதிரடித் திரைப்படமாகும்.[3] படத்தை ஜொனாதன் மோதோ இயக்கினார். படத்தில் ஆர்னோல்டு சுவார்செனேகர், நிக் ஸ்டால், க்ளைர் டேனஸ், கிறிஸ்டானா லோகென் ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இது டெர்மினேட்டர் தொடர் படங்களான டெர்மினேட்டர் 2:த ஜட்ச்மண்ட் டே (1991), த டெர்மினேட்டர் (1984) ஆகியவற்றைத் தொடர்ந்து மூன்றாவதாக 2003 ஆண்டு வெளிவந்தத் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் அமெரிக்காவில் ஜூலை 2, 2003 இல் வெளிவந்தது. இத்திரைப்படம் ஆர்னோட் கலிபோர்னியா மாநில ஆளுநர் ஆவதற்கு முன்னர் வெளிவந்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தின் டிவிடி ஆர்னோல்ட் கலிபோர்னியா ஆளுநர் ஆனபின்பே வெளிவந்தது. இந்த வரிசையின் முதல் இரண்டு படங்களையும் இயக்கிய ஜேம்ஸ் கேமரன் இதில் பணியாற்றவில்லை. இது உலகளவில் $ 434 மில்லியன் வசூலைக் கடந்துவிட்டது.

ஜான் கானர் (ஸ்டாஹ்ல்) பிறப்பதற்கு முன்னரே அவரது தாயாரான சாரா கானரைக் கொல்லத் ஸ்கானெட் முயன்று அது தவறிய பின்னர், ஜான் கானர் சிறுவனாக இருக்கும்போதும் கொல்ல முயன்று தோல்வியுற்றது, இப்போது ஸ்கைநெட் மற்றொரு டெர்மினேட்டரான டி-எக்ஸ் (லோக்கன்) என்ற எந்திரத்தை அனுப்பி, முடிந்தவரை எதிர்க்கும் பல மனித சக்திகளை அழிக்க முயற்சிக்கின்றது. இதில் ஜான் கானரின் எதிர்கால மனைவியான கேட் ப்ரூஸ்டரையும் (டேன்ஸ்) கொல்ல முயல்கிறது. டி-எக்ஸ் ஜானை கொல்லத் துரத்துவதால் அவனின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதேசமயம் டி-எக்சின் இலக்குகளை பாதுகாக்கவும் அதை எதிர்க்கவும் தங்கள் சொந்த டெர்மினேட்டரை (ஸ்வார்ஸ்னேக்கர்) எதிரிகாலத்தில் இருந்து மீண்டும் அனுப்புகின்றனர்.

இந்தத் திரைப்படத்தின் தொடர்ச்சியாக டெர்மினேட்டர் சால்வேசன் (2009) வெளிவந்தது.

கதை[தொகு]

ஜான் கானர் தன் பழைய ஊர் வாழ்கை என அனைத்தையும் விடுத்து ஒரு புதிய இடத்தில் வாழ்கிறான். அவனது தாயார் அவனது சிறுவயதில் அவனது எதிர்காலத்தில் நாட்டின் தலைவனாகி இயந்திரங்களுக்கும் மனிதர்களுக்கும் நடக்கும் போரில் இயந்திரங்களுக்கு எதிராக மனிதர்களுக்கு தலைமை ஏற்று அவர்களைக் காப்பான் என கூறிவந்ததையும், உலகின் அழிவையும் நினைத்துக் கவலைகொள்கிறான்.

இக்காலகட்டத்தில் எதிர்காலத்தில் இருந்து டி-எக்ஸ் என்ற நவீன இயந்திரப் பெண் ஜான் கானரின் எதிர்கால மனைவியும், அவனுக்குப் பின்னாள் நாட்டை வழிநடத்தப் போகிறவளுமான கிளையர் டோனசை கொல்லும் எண்ணத்துடன் அவளைத் தேடி வருகிறது. அதேசமயம் எதிர்காலத்தில் இருந்து கேட் ப்ரூஸ்டரையும், ஜான் கானரையும் காக்கும் நோக்கத்துடன் டெரிமினேட்டர் இயந்திர மனிதன் வருகிறது. இது டி-எக்ஸ் இயந்திரப் பெண்ணைவிட ஆற்றலிலும் தொழில் நுட்பத்திலும் பழையது.

ஜான் கானரின் மற்றும் கிளையர் டோனசையும் தேடிவந்து கொல்ல முயலும் டி-எக்சிடம் இருந்து இருவரையும் டெரிமினேட்டர் காக்த்து ஒரு ஜீப்பில் ஏற்றிக் கொண்டு தப்பிக்கிறது. அவர்களிடம் அவர்கள் எதிர்காலத்தில் என்னவாக இருப்பார்கள் என்றும், இன்று நாட்டின் அணு ஆயுதங்கள் போன்றவை ஸ்கானெட்டின் கட்டுப்பாட்டில் செல்லும் என்றும் இதனால் பெருமளவிலான மனிதர்கள் கொல்லப்படுவார்கள். என்றும் கிளைர் டோனசின் தந்தை டி-எக்சால் கொல்லப்படுவார் என கூறுகிறது. இந்த அழிவில் இருந்து உலகை காக்க டோனசின் தந்தையை எச்சரித்து ஸகானெட்டின் கட்டுப்பாட்டில் நாட்டின் கணிணி தகவல் வலையமைப்பை ஒப்படைப்பதை தடுக்க வேண்டுமென டெர்மினேட்டருடன் விரைகின்றனர்.

இந்நிலையில் கிளைர் டோனசின் தந்தை ராபர்ட் பிரிவ்சர் அமேரிக்க படைத்துறையில் தலைமைப் பொறுப்பில் இருக்கிறார். இவர் தலைமையினான குழுவினர் ஸ்கானெட் என்னும் அதி புத்திசாலியான இயந்திரத்தை இராணுவத் தேவைக்காக வடிவமைக்கிறார். இந்நிலையில் இராணுவத்தின் கணிணிகளையும், தகவல் தொடர்பையும் தீநிரல்கள் தாக்குகின்றன. இதனால் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. இதற்கு தீர்வாக நாட்டின் அனைத்து கணிணிகளையும் ஸகானெட்டின் கட்டுப்பாட்டில் விட்டால் தீநிரல்கள் அழிக்கப்படும் என என்ற ஆலோசனையை செயல்படுத்துமாறு நாட்டின் அதிபர் இவருக்கு ஆணையிடுகிறார். ஜான் கானரின் மற்றும் கிளையர் டோனஸ் ஆகியோர் வந்து சேர்வதற்குள் ஸ்காய்னெட்டின் கட்டுப்பாட்டின்கீழ் படைத்துறையின் கணிணிகள் போன்றவை ராபர்ட் பிரிவ்சரால் விடப்படுகின்றன. ஸ்காய்னெட் மனிதர்களுக்கு எதிரான போரைத் துவக்குகிறது இதில் பலர் கொல்லப்படுகின்றனர். இதைக்கண்டு வருந்தி காயமுற்றதால் இறக்கும் தறுவாயல் உள்ள ராபர்ட் பிரிவ்சர் ஜான் கானரினிடம் தன் மகளைப் பார்த்துக் கொள்ளுமாறும், மெக்சிகோ எல்லையில் அமைந்துள்ள நிலவறைக்கு செல்லுமாறு கூறி அதற்கான கோப்புகளை அளித்துவிட்டு இறந்துவிடுகிறார்.

இதைத் தொடர்ந்து ராபர்ட் பிரிவ்சரின் குடிட்டி விமானத்தில் நிலவறை இருக்கும் பகுதிக்குச் செல்கின்றனர். இவர்களைக் கொல்ல தொடர்ந்து டி-எக்சும் ஒரு உலங்கு வானூர்தியில் வர, அதைத் தொடர்ந்து டெர்மினேட்டரும் இன்னொரு உலங்கு வானூர்தியில் வந்து இருவரையும் நிலவறைக்குள் அனுப்பி டி- எக்சுடன் மோதி டெர்மினேட்டர் தன்னை அழித்து உடன் டி-எக்சையும் அழிக்கிறது.

நடிகர்கள்[தொகு]

  • ஆர்னோல்டு சுவார்செனேகர் - டெர்மினேட்டர் / டி-850 (மாடல் 101):
  • நிக் ஸ்டால் - ஜான் கானர்
  • கிறிஸ்டானா லோகன் - டி-எக்ஸ்
  • க்ளைர் டேனஸ் - கேட் ப்ரூஸ்டர்
  • டேவிட் ஆண்ட்ரூஸ் லெப்டினன்ட் ஜெனரல் ராபர்ட் பிரிவ்சர் - எந்திரமனிதப் பிரிவு, USAF: கேட்னின் தந்தையும் ஸ்கைனட்டை உருவாக்கியில் முதன்மையாக ஈடுபட்டவர்.
  • மார்க் ஃபேமிகிலிட் - ஸ்காட் மேசன்
  • ஏர்ல் பொன் - டாக்டர் பீட்டர் சில்மேர்மன்

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 IM International Media AG (2010). "Terminator 3 – Rise of the Machines". பிப்ரவரி 6, 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. June 24, 2010 அன்று பார்க்கப்பட்டது.
  2. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; BOM என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  3. http://www.allmovie.com/movie/v272537