டெபோரா பிரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெபோரா பிரியா
Deborah Priya
德博拉·普
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்புடெபோரா பிரியா ராஜ்
சூலை 21, 1985 (1985-07-21) (அகவை 34)
அயர்லாந்து குடியரசு டப்ளின், அயர்லாந்து
இருப்பிடம்
மலேசியா மேடான் டாமன்சாரா
கோலாலம்பூர்
கல்வி நிலையம்ஆத்திரேலியா பிரிஸ்பேன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம்
தொழில்அழகுநய அலங்காரம்
தொலைக்காட்சி அறிவிப்பாளர்
முகமைThe Talent Factory
உயரம்1.78 m (5 ft 10 in)
எடை62 kg (137 lb)
அளவுகள்28-23-35
தலைமுடி வண்ணம்கரும் பழுப்பு
விழிமணி வண்ணம்கரும் பழுப்பு
பட்ட(ம்)ங்கள்மலேசிய அழகி 2007
மலேசிய உலக அழகி 2011
Major
competition(s)
உலக அழகி 2007[1]
16வது இடம்
Miss Universe 2011[2]
Official website

டெபோரா பிரியா ஹென்றி, (Deborah Priya Henry) 2007ஆம் ஆண்டின் மலேசிய அழகி. 2011இல் உலக அழகிகளில் 16வது இடத்திற்குத் தேர்வு செய்யப்பட்டவர்.[3] ஆப்பிரிக்கா, சொமாலியா நாட்டில் இருக்கும் பூகி அனாதை ஆசிரமத்தை உருவாக்கியவர். அந்த ஆசிரமத்தில் அடைக்கலம் பெற்றுள்ள 120 அனாதைக் குழந்தைகளின் பராமரிப்புச் செலவுகளைக் கவனித்துக் கொள்கின்றார்.[4]

மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்களுக்கு தன்முனைப்பு, விழிப்புணர்வு பயிலரங்குகளை நடத்தி வருகிறார். சமூகத்திற்குப் புறம்பான கருத்தரிப்புகளின் பின்விளைவுகளைப் பற்றி, மலேசிய உயர்க்கல்விக்கூடங்களில் பரப்புரை செய்து வருகின்றார்.[5] மலேசியாவில் பஞ்ச நிவாரண தேவதை (ஆங்கிலம்: Famine Angel) என்று அன்பாக அழைக்கப்படுகின்றார்.[6] இவருடைய வயது 27.

வரலாறு[தொகு]

டெபோரா பிரியா அயர்லாந்து, டப்ளின் நகரில் பிறந்தவர். மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் வளர்ந்தவர். தந்தையாரின் பெயர் ராஜ் ஹென்றி. தாயாரின் பெயர் மேரி. அயர்லாந்திற்குப் படிக்கச் சென்ற அவருடைய தந்தையார், அங்கு தன்னுடன் படித்துக் கொண்டிருந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் மகள் டெபோரா பிரியா ராஜ்.

கோலாலம்பூர், ஜாலான் அம்பாங்கில் இருக்கும் சாய்புல் அனைத்துலகப் பள்ளியில்,[7] தன்னுடைய தொடக்க, உயர்நிலைப்பள்ளிப் படிப்புகளைப் பயின்றார். பின்னர், ஆஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டார். ஆட்சி இயல், பொருளியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார்.

அழகுநய நடைத் துறை[தொகு]

பள்ளியில் படிக்கும் காலத்தில் கூடைப்பந்து, கைப்பந்து விளையாட்டுகளில் சிறந்து விளங்கினார். கோலாலம்பூர் அனைத்துலகப் பள்ளிகள் விளையாட்டுகளிலும் தங்கப் பதக்கம் பெற்றார். பள்ளியில் சிறந்த விளையாட்டாளராகவும் தேர்வு செய்யப்பட்டார்.

தம்முடைய 15வது வயதில், கோலாலம்பூரில் ‘மாடலிங்’ எனப்படும் அழகுநய நடைத் துறையிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். 2003ஆம் ஆண்டு லண்டன் மாநகருக்குச் சென்று அந்தக் கலையைப் பற்றியும் பயின்றார். அதன் பின்னர், ஆஸ்திரேலியா சென்றார். பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு 2007இல் மலேசியா திரும்பி, மலேசிய அழகிப் போட்டியில் கலந்து கொண்டார்.

உலக அழகிப் போட்டி[தொகு]

டெபோரா பிரியா, 2007ஆம் ஆண்டு மலேசிய அழகியாகத் தேர்வு செய்யப்பட்டார். அதே ஆண்டு உலக அழகிப் போட்டியிலும் கலந்து கொண்டார். 16வது இடத்தைப் பெற்றார். அந்தத் தகுதி 1998ஆம் ஆண்டிற்குப் பின்னர், உலக அழகிப் போட்டியில் மலேசியாவிற்கு கிடைத்த ஆக உயர்வான தகுதி நிலையாகும். 1998ஆம் ஆண்டு, உலக அழகிப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதித்த லீனா தியோ என்பவர் மூன்றாம் நிலையில் தகுதி பெற்றார்.

உலக அழகிப் போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கும் அழகித் தேர்வு, 2011 ஜனவரி மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. அதில் டெபோரா பிரியா தேர்வு செய்யப்பட்டார்.[2] உலக அழகிப் போட்டி பிரேசில், சா பாலோ நகரில் நடைபெற்றது. அதில் அவர் 16வது இடத்தைப் பெற்றார்.

பொதுச் சேவைகள்[தொகு]

சிறு வயதில் இருந்தே சமூக சேவைகளில் ஈடுபடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆப்பிரிக்கா, சொமாலியா நாட்டில் இருக்கும் பூகி அனாதை ஆசிரமத்தை உருவாக்கியவர்களில் இவரும் ஒருவர் ஆவார். அந்த ஆசிரமத்தில் அடைக்கலம் பெற்றுள்ள அனாதைக் குழந்தைகளுக்கு நிதியுதவி, மனிதநேய உதவிகளைச் செய்து வருகின்றார்.

இதைத் தவிர, மலேசியாவில் தனித்து வாழும் தாய்மார்களுக்கு தன்முனைப்பு, விழிப்புணர்வு பயிலரங்குகளை நடத்தி வருகின்றார். சட்டத்திற்குப் புறம்பான கருத்தரிப்புகளின் அவலநிலைகளைப் பற்றி, மலேசியப் பெண்கள் கல்லூரிகள், உயர்க்கல்விக்கூடங்களில் விரிவுரைகள் செய்கின்றார்.

சிறார் பராமரிப்பு இல்லம்[தொகு]

கோலாலம்பூர், சௌக்கிட் பகுதியில் இருக்கும் Pusat Aktiviti Kanak-Kanak எனும் சிறார் பராமரிப்பு இல்லத்திற்குச் சென்று, அங்குள்ள குழந்தைகளுக்கு சமூக சேவைகளையும் வழங்கி வருகிறார்.[8]

2011ஆம் ஆண்டு The Malay Chronicles: Bloodlines எனும் மலாய்த் திரைப்படத்திலும் நடித்து இருக்கிறார்.[9] மலேசியத் தொலைக்காட்சியில் ‘பெல்லா’ எனும் நிகழ்ச்சியின் அறிவிப்பாளர்களில் ஒருவராகவும் பணிபுரிகின்றார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெபோரா_பிரியா&oldid=2720046" இருந்து மீள்விக்கப்பட்டது