உள்ளடக்கத்துக்குச் செல்

டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டெட்ராகுளோரோ ஆக்சிரேன்
வேறு பெயர்கள்
பெர்குளோரோயெத்திலீன் ஆக்சைடு, எப்பாக்சிபெர்குளோரோவினைல், டெட்ராகுளோரோயெப்பாக்சியீத்தேன்
இனங்காட்டிகள்
16650-10-5 Y
ChemSpider 26022
InChI
  • InChI=1S/C2Cl4O/c3-1(4)2(5,6)7-1
    Key: PHEPAUSSNBXGQO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 27973
  • ClC1(Cl)C(Cl)(Cl)O1
UNII 2PJ36AO63Q
பண்புகள்
C2Cl4O
வாய்ப்பாட்டு எடை 181.82 g·mol−1
தோற்றம் நீர்மம்
அடர்த்தி 1.72 கி/செ.மீ3[1]
உருகுநிலை –58 °செல்சியசு[2]
கொதிநிலை 110 °செல்சியசு [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு (Tetrachloroethylene oxide) என்பது C2Cl4O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஆலசனேற்றம் அடைந்த எப்பாக்சைடு சேர்மமான இது பெர்குளோரோயெத்திலீன் ஆக்சைடு, டெட்ராகுளோரோ ஆக்சிரேன் என்ற பெயர்களாலும் இச்சேர்மம் அடையாளப்படுத்தப்படுகிறது. எத்திலீன் ஆக்சைடின் பெர்குளோரினேற்றம் அடைந்த ஒப்புமையாகக் கருதப்படும் இச்சேர்மம் டெட்ராகுளோரோயெத்திலீன் வளர்சிதைமாற்ற வேதிப்பொருளாக முன்மொழியப்படுகிறது.[3] டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு மிகவும் நிலைப்புத்தன்மை கொண்டது ஆனால் அதிக வெப்பநிலையில் முக்குளோரோ அசிட்டைல் குளோரைடு சேர்மமாக மறுசீரமைக்கப்படுகிறது.[4]

டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு முக்குளோரோ அசிட்டிக் அமிலமாக வளர்சிதைமாற்றம் செய்யப்படுகிறது. இது நீராற்பகுப்புக்கு உட்படுத்தப்பட்டு முக்குளோரோ அசிட்டைல் குளோரைடாக மாறுகிறது.[5]

தயாரிப்பு

[தொகு]

முதன்முதலில் ஆங்கில வேதியியலாளர் பிரடெரிக்கு வில்லியம் கிர்க்பிரைடு 1940 ஆம் ஆண்டில் டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு சேர்மத்தை தயாரித்தார். டெட்ராகுளோரோயெத்திலீனில் உள்ள குளோரினுடன் ஆக்சிசனை சேர்த்து இக்கலவையை புற ஊதா ஒளிக்கு வெளிப்படுத்துவதன் மூலம் பிரடெரிக்கு வில்லியம் இதை தயாரித்தார்.[6]

டெட்ராகுளோரோயெத்திலீனை புற ஊதா ஒளியின் கீழ் நேரடியாக ஆக்சிசனேற்றம் செய்தும் டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது.[4]

வினைகள்

[தொகு]

பெரும்பாலான எப்பாக்சைடுகள் பலபடியாவது போல, டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு பலபடியாகாது.[4]

பாதரசம்(II) குளோரைடு வினையூக்கியின் முன்னிலையில் டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு மெத்தனாலுடன் வினைபுரிகிறது. இவ்வினையில் மெத்தில்முக்குளோரோ அசிட்டேட்டும் ஐதரசன் குளோரைடும் உருவாகின்றன:[2]

C2Cl4O + CH3OH -> CH3O(CO)CCl3 + HCl

மெத்தனாலிக் பொட்டாசியம் ஐதராக்சைடுடன் டெட்ராகுளோரோயெத்திலீன் ஆக்சைடு வினைபுரிந்து பொட்டாசியம் ஆக்சலேட்டைக் கொடுக்கிறது.[2] இது நீர்த்த அமிலம் அல்லது காரக் கரைசல்களால் மெதுவாக சிதைந்து, கார்பன் மோனாக்சைடு, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஐதரசன் குளோரைடு ஆகியவற்றைக் கொடுக்கிறது. இடைநிலை ஆக்சாலில் குளோரைடு மேலும் சிதைவடைவது இதற்கு காரணமாக இருக்கலாம்.[2]

இதையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Yaws, C. L. (2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics.
  2. 2.0 2.1 2.2 2.3 Frankel, Donald; Johnson, Claude; Pitt, Harold (1957). "Notes - Preparation and Properties of Tetrachloroethylene Oxide". The Journal of Organic Chemistry (American Chemical Society (ACS)) 22 (9): 1119–1120. doi:10.1021/jo01360a614. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-3263. 
  3. Raat, W. K. d. (2003). 133 Tetrachloroethylene (PER). Sweden: Arbetslivsinstitutet.
  4. 4.0 4.1 4.2 Campbell, R. W.; Vogl, O. (1977). "A Practical Synthesis of Tetrachloroethylene Oxide". Journal of Macromolecular Science: Part A - Chemistry (Informa UK Limited) 11 (3): 515–534. doi:10.1080/00222337708061286. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-233X. 
  5. Testa, B., Mayer, J. M. (2003). Hydrolysis in Drug and Prodrug Metabolism. page 633
  6. Oxidation of Perchloroethylene, Official Gazette of the United States Patent Office. (1943)