ஆக்சாலில் குளோரைடு
![]() | |||
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
ஆக்சாலில் டைகுளோரைடு[1] | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
ஈத்தேன்டையாயில் டைகுளோரைடு[1] | |||
வேறு பெயர்கள்
ஆக்சாலிக் அமில குளோரைடு
ஆக்சாலிக் அமில டைகுளோரைடு ஆக்சாலிக் டைகுளோரைடு ஆக்சாலாயில் குளோரைடு | |||
இனங்காட்டிகள் | |||
79-37-8 ![]() | |||
ChemSpider | 59021 ![]() | ||
EC number | 201-200-2 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 65578 | ||
வே.ந.வி.ப எண் | KI2950000 | ||
SMILES
| |||
பண்புகள் | |||
C2O2Cl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 126.93 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
அடர்த்தி | 1.4785 கி/மி.லி | ||
உருகுநிலை | −16 °C (3 °F; 257 K) | ||
கொதிநிலை | 63 முதல் 64 °C (145 முதல் 147 °F; 336 முதல் 337 K) at 1.017 bar | ||
வினைபுரியும் | |||
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.429 | ||
தீங்குகள் | |||
முதன்மையான தீநிகழ்தகவுகள் | நச்சு, அரிக்கும், கண்ணீர்புகை உப்பு [2] | ||
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | External MSDS | ||
GHS pictograms | ![]() ![]() | ||
GHS signal word | Danger[2] | ||
H314, H331[2] | |||
P261, P280, P305+351+338, P310[2] | |||
ஈயூ வகைப்பாடு | ![]() | ||
R-சொற்றொடர்கள் | R14 R23 R29 R34 [2] | ||
S-சொற்றொடர்கள் | (S1/2) S26 S30 S36/37/39 S38 S45 S61 [2] | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
![]() ![]() ![]() | |||
Infobox references | |||
ஆக்சாலில் குளோரைடு (Oxalyl chloride) (COCl)2 என்ற வேதியியல் வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். ஆக்சாலிக் அமிலத்தின் ஈரமில குளோரைடு உப்பான இச்சேர்மம் நிறமற்றும் வலிமையான கார மணமும் கொண்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் இச்சேர்மம் மிகவும் பயனுள்ளதாக செயற்படுகிறது[3]. ஆக்சாலிக் அமிலத்துடன் பாசுபரசு ஐங்குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலமாக ஆக்சாலில் குளோரைடு தயாரிக்கப்படுகிறது[4].
வினைகள்[தொகு]
ஆக்சாலில் குளோரைடு தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் குளோரைடு (HCl), கார்பனீராக்சைடு (CO2) மற்றும் கார்பனோராக்சைடு (CO) போன்ற வாயு விளைபொருட்களை மட்டும் தருகிறது.
(COCl)2 + H2O → 2 HCl + CO2 + CO
இப்பண்பினால் இச்சேர்மம் பிற அசைல்குளோரைடுகளில் இருந்து மாறுபடுகிறது, பிற அசைல் குளோரைடுகள் ஐதரசன்குளோரைடாகவும் அதனுடன் தொடர்புடைய அசல் கார்பாக்சிலிக் அமிலமாகவும் நீராற்பகுப்பு அடைகின்றன.
கரிம வேதியியல் பயன்கள்[தொகு]
ஆல்ககால்களின் ஆக்சிசனேற்றம்[தொகு]
டைமெத்தில்சல்பாக்சைடும் ஆக்சாலில் குளோரைடும் சேர்ந்த கரைசலை டிரையெத்திலமீன் சேர்த்து வெப்பந்தணித்தால் ஆல்ககால்கள் அவற்றுடன் தொடர்புடைய ஆல்டிகைடுகளாகவும் கீட்டோன்களாகவும் மாற்றப்படுகின்றன. இவ்வினை சுவெர்ன் ஆக்சிசனேற்ற வினை என்ற பெயரால் அழைக்கப்படுகிறது[5][6][7].
அசைல் குளொரைடுகள் தொகுத்தல்[தொகு]
தொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலங்களிலிருந்து அசைல் குளோரைடுகளைத் தயாரிக்கும் கரிமத் தொகுப்பு வினைகளில் ஆக்சாலில் குளோரைடு பிரதானமாகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வினையில் என்,என்-டைமெத்தில்பார்மமைடுடன் சேர்ந்து ஆக்சாலில் குளோரைடு ஒரு வினையூக்கியாகச் செயல்படுகிறது. தயோனைல் குளோரைடைப் போல, இவ்வினையூக்கி வினையில் தோன்றுகின்ற ஆவியாகின்ற பக்க விளைபொருட்களை சிதைக்கிறது. இப்பக்கவிளை பொருட்களில் ஆற்றல்மிக்க புற்றுநோய் காரணியும் தோன்றுகிறது[8] என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். தயோனைல் குளோரைடுடன் ஒப்பிடுகையில் ஆக்சாலில் குளோரைடு மிதமானது என்பதால் அதிகமான தெரிவுநிலை வினையூக்கியாகக் கருதப்படுகிறது. ஆனால் விலையுடன் ஒப்பிடுகையில் இது தயோனைல் குளோரைடை விட விலை உயர்வானது என்ற காரணத்தினால் குறைந்த அளவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
இவ்வினையில், வில்சுமெயர்-ஆக் வினையின் முதல்படியில் நிகழ்வதைப் போல டைமெத்தில்பார்மமைடை இமிடோயில் குளோரைடு வழிப்பொருளாக (Me2N=CHCl+) மாற்றஞ்செய்யும் செயல்முறையும் உள்ளடங்கியுள்ளது. இமிடோயில் குளோரைடு செயல்திறன் மிக்க ஒரு குளோரினேற்றும் முகவராகும்.
அரீன்களை பார்மைலேற்றுதல்[தொகு]
அலுமினியம் குளோரைடு முன்னிலையில் ஆக்சாலில் குளோரைடு, அரோமாட்டிக் சேர்மங்களுடன் வினைபுரிந்து தொடர்புடைய அசைல் குளோரைடுகளை உருவாக்குகிறது. இவ்வினை பிரைடல் கிராப்ட்சு அசைலேற்ற வினையென்ற பெயரால் அழைக்கப்படுகிறது[9][10]. இவ்வாறு உருவாகும் அசைல் குளோரைடை தண்ணீருடன் சேர்த்து நீராற்பகுப்புக்கு உட்படுத்தி தொடர்புடைய கார்பாக்சிலிக் அமிலங்கள் தயாரிக்கப்படுகின்றன.
ஆக்சாலிக் இருயெசுத்தர்கள் தயாரித்தல்[தொகு]
பிற அசைல் குளோரைடுகள் போலவே ஆக்சாலில் குளோரைடும் ஆல்ககால்களுடன் வினைபுரிந்து எசுத்தர்களைக் கொடுக்கிறது.
- 2 RCH2OH + (COCl)2 → RCH2OC(O)C(O)OCH2R + 2 HCl
குறிப்பாக இவ்வினைகள் பிரிடின் போன்ற காரத்தின் முன்னிலையில் நிகழ்கின்றன. சயலும் என்ற இரு எசுத்தர் சேர்மமானது, பீனால் , பீனைல் ஆக்சலேட்டு எசுத்தரிலிருந்து வருவிக்கப்படுகிறது. ஒளிரும் குச்சிகளில் இவ்விரு எசுத்தர் செயல்திறன் மிக்க ஒர் இடுபொருளாக உள்ளது.
= பிற பயன்கள்[தொகு]
கார்பனின் ஆக்சைடான டையாக்சேன் டெட்ராகீட்டோன் (C4O6) தயாரிப்பிலும் ஆக்சாலில் குளோரைடு பயன்படுவதாக அறியப்படுகிறது[11].
முன்பாதுகாப்பு[தொகு]
2000 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் மலேசிய ஏர்லைன்சு ஏர்பசு விமானம் பழுதடைந்ததற்கு காரணம் ஆக்சாலில் குளோரைடு கசிவுதான் காரணம் என்று அறிவிக்கப்பட்டது[12]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ 1.0 1.1 Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 797. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 Oxalyl chloride MSDS
- ↑ Salmon, R. (2001). "Oxalyl Chloride". Encyclopedia of Reagents for Organic Synthesis. New York: John Wiley & Sons. DOI:10.1002/047084289X.ro015.
- ↑ DE patent 2840435, Vogel, A.; Steffan, G.; Mannes, K.; Trescher, V., "Process for the preparation of oxalyl chloride", issued 1980-03-27, assigned to Bayer
- ↑ Dondoni, A.; Perrone, D. (2004). "Synthesis of 1,1-Dimethyl Ethyl-(S)-4-formyl-2,2-dimethyl-3-oxazolidinecarboxylate by Oxidation of the Alcohol". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=v77p0064.; Collective Volume, vol. 10, p. 320
- ↑ Bishop, R. (1998). "9-Thiabicyclo[3.3.1]nonane-2,6-dione". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv9p0692.; Collective Volume, vol. 9, p. 692
- ↑ Leopold, E. J. (1990). "Selective hydroboration of a 1,3,7-triene: Homogeraniol". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv7p0258.; Collective Volume, vol. 7, p. 258
- ↑ Clayden, Jonathan (2005). Organic chemistry (Reprinted (with corrections). ). Oxford [u.a.]: Oxford Univ. Press. பக். 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-850346-0.
- ↑ Neubert, M. E.; Fishel, D. L. (1983). "Preparation of 4-Alkyl- and 4-Halobenzoyl Chlorides: 4-Pentylbenzoyl Chloride". Organic Syntheses 61: 8. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv7p0420.; Collective Volume, vol. 7, p. 420
- ↑ Sokol, P. E. (1964). "Mesitoic Acid". Organic Syntheses 44: 69. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV5P0706.; Collective Volume, vol. 5, p. 706
- ↑ Strazzolini, P.; Gambi, A.; Giumanini, A. G.; Vancik, H. (1998). "The reaction between ethanedioyl (oxalyl) dihalides and Ag2C2O4: a route to Staudinger’s elusive ethanedioic (oxalic) acid anhydride". Journal of the Chemical Society, Perkin Transactions 1 1998 (16): 2553–2558. doi:10.1039/a803430c.
- ↑ "Firm told to pay $65 mln for ruining plane". ராய்ட்டர்ஸ். 2007-12-06. http://www.reuters.com/article/oddlyEnoughNews/idUSN0620441720071206. பார்த்த நாள்: 2007-12-06.