டாட்டா குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டாட்டா குடும்பம்
Current regionமும்பை, மகாராட்டிரம், இந்தியா
Place of originநவ்சாரி, குசராத்து, இந்தியா
Membersஜம்சேத்ஜீ டாட்டா
தோரப்ஜி டாட்டா
இரத்தன்ஜி டாட்டா
நேவல் டாட்டா
இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா
ஜே. ஆர். டி. டாட்டா
ரத்தன் டாட்டா
சிமோன் டாட்டா
நோயல் டாட்டா
Connected familiesஜின்னா குடும்பம்
பெட்டிட் குடும்பம்
சக்லத்வாலா குடும்பம்
பாபா குடும்பம்
மிஸ்திரி குடும்பம்
Heirloomsடாட்டா​ சன்ஸ்

டாட்டா குடும்பம் (Tata family) என்பது மும்பை நகரத்தை மையமாகக் கொண்ட ஒரு முக்கிய இந்திய வணிக குடும்பமாகும். இவர்களின் தாய் நிறுவனம் டாட்டா குழுமத்தின் முக்கிய அதிகார வரம்புகளை கொண்டிருக்கும் நிறுவனமான டாட்டா சன்ஸ் ஆகும். மேலும் இந்த நிறுவனங்களில் சுமார் 65 சதவீதப் பங்கு டாட்டா தொண்டு அறக்கட்டளைகளுக்கு சொந்தமானது. முக்கியமாக இரத்தன் டாட்டா அறக்கட்டளையும், தோரப்ஜி டாடா அறக்கட்டளைக்கும் சொந்தமானது. ஏறக்குறைய 18 சதவிகித பங்குகள் பல்லோன்ஜி மிஸ்திரி குடும்பத்தினரிடமும், மீதமுள்ளவை பல்வேறு டாட்டா சன்ஸ் நிறுவனங்களிடமும் உள்ளன. டாட்டாக்கள் ஒரு பார்சி குடும்பம், முதலில் குசராத்து மாநிலத்தில் உள்ள நவ்சாரியிலிருந்து மும்பைக்கு வந்தவர்கள். குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை நிறுவியவர் ஜம்சேத்ஜீ டாட்டா என்பவராவார். டாட்டாக்கள் டாட்டா சன்ஸின் அசல் நிறுவனர்கள் ஆவர்.

டாட்டா குடும்பம் முக்கிய பெட்டிட் பரோனெட்டுகளுடன் தொடர்புடையது. சில்லா டாட்டா வழியாக ஒரு பார்சி, 3 வது பரோனெட்டின் சர் தின்சா மானெக்ஜி பெட்டிட் என்பவரை மணந்தார்.

முக்கிய உறுப்பினர்கள்[தொகு]

 • ஜம்சேத்ஜி நுசர்வான்ஜி டாட்டா (3 மார்ச் 1839 - 19 மே 1904), இவர் இந்தியத் தொழில் துறையின் பிதாமகன்களில் ஒருவராக அறியப்படுகிறார். [1]
  • தோரப்ஜி டாட்டா (27 ஆகத்து 1859 - 3 சூன் 1932), ஜம்சேத்ஜியின் மூத்த மகனான இவர், இந்திய தொழிலதிபராகவும், தொண்டு நிறுவனங்களை நடத்தியவராகவும், டாட்டா குழுமத்தின் 2 வது தலைவராகவும் அறியப்படுகிறார். இவரது மனைவி, மெகர்பாய் டாட்டா, அணு விஞ்ஞானி ஓமி ஜே. பாபாவின் தந்தைவழி அத்தையாவார்.
  • இரத்தன்ஜி டாட்டா (20 சனவரி 1871 - 5 செப்டம்பர் 1918), ஜம்சேத்ஜியின் இளைய மகனான இவர், அறப்பணிகளை செய்துவந்தவராகவும், வறுமை ஆய்வுகளின் முன்னோயாகவும் திகழ்ந்தார்.
   • நேவல் டாட்டா, (30 ஆகத்து 1904 - 5 மே 1989) நவாஜ்பாய் டாட்டாவின் தத்தெடுக்கப்பட்ட மகன். இவரது தாய்வழி பாட்டி டாட்டா குழுவின் நிறுவனர் ஜம்சேத்ஜி டாட்டாவின் மனைவி ஹீராபாய் டாட்டாவின் சகோதரியாவார். மேலும், இவரது உயிரியல் தந்தை ஆர்முஸ்ஜி டாட்டா பரந்த டாட்டா குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆகவே நேவல் "டாட்டா" என்ற குடும்பப் பெயரை பிறப்புரிமையால் சுமந்தார். [2] பல டாட்டா நிறுவனங்களில் இயக்குனராகவும், ஐ.எல்.ஓ உறுப்பினராகவும் இருந்த இவர், பத்ம பூசண் விருதினை பெற்றவராவார். இரண்டு முறை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர்.
   • சிமோன் டாட்டா, நேவல் டாட்டாவின் இரண்டாவது மனைவி, சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கத்தோலிக்கர். இவர் இந்திய அழகுசாதனப் பொருளான லக்மேவை நடத்தி வருகிறார். மேலும், செங்கல் மற்றும் மோட்டார் சங்கில் கடையான டிரெண்ட் என்ற நிறுவனத்தின் தலைவராக பணியாற்றினார் [3]
    • டாட்டா குழுமத்தின் 5 வது தலைவரான இரத்தன் டாட்டா, நேவல் டாட்டாவின் முதல் மனைவி சூனியின் மகன்.
    • ஜிம்மி டாட்டா, நேவல் டாட்டாவின் முதல் மனைவி சூனியின் மகன்
    • டிரெண்டின் தலைவரான நோயல் டாட்டா, நேவல் டாட்டாவின் இரண்டாவது மனைவி சிமோனின் மகன்
 • இரத்தன்ஜி தாதாபாய் டாட்டா (1856-1926), டாட்டா குழுமத்திற்கு ஆரம்ப காலத்தில் உழைத்த கடின உழைப்பாளிகளில் ஒருவர். இவரது தந்தை தாதாபாய் மற்றும் ஜம்சேத்ட்ஜி டாட்டாவின் தாய் ஜீவன்பாய் ஆகியோர் உடன்பிறப்புகள். இரத்தன்ஜி ஜம்சேத்ஜியின் தந்தைவழி உறவினர். இவர் ஒரு பிரெஞ்சு கத்தோலிக்கரான சுசான் பிரையர் என்பவரை மணந்தார். இவருக்கு ஐந்து குழந்தைகள் இருந்தனர்:
  • ஜெ. ர. தா. டாட்டா (29 சூலை 1904 - 29 நவம்பர் 1993), இவரது மனைவி சுசான் மூலம் இரத்தன்ஜி டாட்டா பிறந்தார். டாட்டா குழுமத்தின் 4 வது தலைவராக, இவர் இந்திய விமான போக்குவரத்துக்கு முன்னோடியாக இருந்தார். டாடா ஏர்லைன்ஸை நிறுவினார் .(பின்னர் ஏர் இந்தியா என்று அழைக்கப்பட்டது )
  • சில்லா டாட்டா, இரத்தன்ஜி தாதாபாயின் மகளும் ஜே. ஆர். டி இன் மூத்த சகோதரியுமாவார். மூன்றாவது பரோனெட் பெட்டிட் என்ற தின்ஷா மானெக்ஜி பெட்டிட்டை மணந்தார். இவரது மைத்துனி ரத்தன்பாய் பெட்டிட், பாக்கித்தானின் நிறுவனர் முகம்மது அலி ஜின்னாவை மணந்தார். இரத்தன்பாய் ஜின்னாவின் மகள் தினா ஜின்னா ஆகியோர் நெவில் வாடியாவின் மனைவி ஆவார். [4]

குறிப்புகள்[தொகு]

நூலியல்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாட்டா_குடும்பம்&oldid=3015767" இருந்து மீள்விக்கப்பட்டது