ஜெயபென் தக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெயபென் தக்கர்
Jayaben Thakkar
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1998-2009 (3 முறை)
தொகுதிவதோதரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு14 மே 1952 (1952-05-14) (அகவை 71)
வடோதரா, பம்பாய் மாகாணம், இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்பரத்குமார் எச். தக்கர்
பிள்ளைகள்2 மகன்கள்
வாழிடம்பரோடா
As of 25 பிப்ரவரி, 2006
மூலம்: [1]

ஜெயபென் தக்கர் (Jayaben Thakkar)(பிறப்பு 14 மே 1952) என்பவர் குசராத்து மாநிலத்தினைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார்.

சொந்த வாழ்க்கை[தொகு]

குசராத்து மாநிலம் பரோடாவில் உள்ள மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தில் தக்கர் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார். ஜெயபென் தக்கார், பரத்குமார் எச். தக்கார் என்பவரை மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் ‘அப்னே சமஸ்கிருதிக் பிரதிக்’ ('நமது கலாச்சார சின்னங்கள்') எனும் புத்தகத்தினை இந்தியிலிருந்து குசராத்தி மொழிக்கு மொழிபெயர்த்துள்ளார்.

இவர் ஆத்திரேலியா, செக் குடியரசு, மலேசியா, ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்குப் பயணம் செய்துள்ளார்.

அரசியல்[தொகு]

ஜெயாபென் தக்கர் பாரதிய கட்சியினை சேர்ந்தவர். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். ஜெயபென் தக்கர் இந்திய நாடாளுமன்றத்தின் 12வது,[1] 13வது,[2] 14வது மக்களவை[3] தேர்தல்களில் குசராத்து மாநிலம் வதோதரா மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

வெளி இணைப்புகள்[தொகு]

  1. "Statistical Report on General Elections, 1998 to the Twelfth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 194. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.
  2. "Statistical Report on General Elections, 1999 to the Thirteenth Lok Sabha" (PDF). Election Commission of India. pp. 188–189. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.
  3. "Statistical Report on General Elections, 2004 to the Fourteenth Lok Sabha" (PDF). Election Commission of India. p. 224. Archived from the original (PDF) on 18 July 2014. பார்க்கப்பட்ட நாள் 30 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயபென்_தக்கர்&oldid=3701066" இலிருந்து மீள்விக்கப்பட்டது