ஜூலியா கிலார்ட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜூலியா கிலார்ட்
Julia Gillard
ஆஸ்திரேலியாவின் 27வது பிரதமர்
பதவியில்
24 ஜூன் 2010 – 27 ஜூன் 2013
துணை உவைன் சுவான்
முன்னவர் கெவின் ரட்
பின்வந்தவர் கெவின் ரட்
ஆஸ்திரேலியத் தொழிற்கட்சித் தலைவர்
பதவியில்
24 ஜூன் 2010 – 27 ஜூன் 2013
முன்னவர் கெவின் ரட்
பின்வந்தவர் கெவின் ரட்
ஆஸ்திரேலியாவின் துணைப் பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
3 அக்டோபர் 1998
பிரதமர் கெவின் ரட்
முன்னவர் பாரி ஜோன்ஸ்
லேலோர் தொகுதியின்
நாடாளுமன்ற உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 29 செப்டம்பர் 1961 (1961-09-29) (அகவை 62)
பாரி, வேல்ஸ், ஐக்கிய இராச்சியம்
அரசியல் கட்சி ஆஸ்திரேலியத் தொழிற்கட்சி
இருப்பிடம் ஆல்ட்டோனா, விக்டோரியா[1]
படித்த கல்வி நிறுவனங்கள் மெல்பேர்ண் பல்கலைக்கழகம்
அடிலெயிட் பல்கலைக்கழகம்

ஜூலியா ஐலீன் கிலார்ட் (Julia Eileen Gillard, பிறப்பு: செப்டம்பர் 29, 1961) ஆஸ்திரேலியாவின் 27வது பிரதமரும், ஆஸ்திரேலியாவின் முதலாவது பெண் பிரதமரும் ஆவார். இவர் 2010, ஜூன் 24 ஆம் நாள் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் ஆஸ்திரேலியத் தொழிற்கட்சியின் தலைவராக 2010 ஜூன் 24 இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே நாளில் அவர் நாட்டின் பிரதமராகவும் பதவியேற்றார். இவர் முன்னர் கெவின் ரட்டின் அரசில் உதவிப் பிரதமராகப் பதவியில் இருந்தவர்.

1915 முதல் 1923 வரை பிரதமராக இருந்த பிலி ஹியூசிற்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்த ஒருவர் நாட்டின் பிரதமராக வருவது இதுவே முதற் தடவையாகும்[2][3][4]. அண்மைக்காலத்தில் கெவின் ரட்டின் செல்வாக்கு நாட்டில் குறைந்து வந்ததன் காரணமாக அவர் கட்சித் தலைமையில் இருந்து விலக அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்த அவர் 2010 ஜூன் 24 இல் பிரதமர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜூலியா_கிலார்ட்&oldid=3573215" இருந்து மீள்விக்கப்பட்டது