ஜீனோடெர்மிடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜீனோடெர்மிடே
உயிரியல் வகைப்பாடு
உலகம்: மெய்க்கருவுயிரி
திணை: விலங்கு
பிரிவு: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: இசுகொமாடா
குடும்பம்: ஜீனோடெர்மிடே
கிரே, 1849
பேரினம்

6 பேரினங்கள், உரையினை காண்க

வேறு பெயர்கள்

ஜீனோடெர்மாடினே Gray, 1849
ஜீனோடெர்மிடே கிரே, 1849[1][2]

ஜீனோடெர்மிடே (Xenodermidae) என்பது கிழக்கு ஆசியா, தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த பாம்புகளின் குடும்பமாகும்.[3][4] ஜீனோடெர்மிடே குடும்பத்தில் உள்ள அனைத்து சிற்றினங்களும் சிறிய அல்லது மிதமான அளவிலான பாம்புகள் ஆகும். இவை 80 cm (31 அங்)க்கு மேல் வளர்வதில்லை. ஆனால் இவற்றின் பொதுவான நீளம் 55 cm (22 அங்)(வால் உட்பட) உள்ளன. இவை மறைந்து வாழ்வன. இரவாடுதல் வகையின. பொதுவாக ஈரமான வன வாழ்விடங்களில் வாழ்கின்றன. இவை சந்தர்ப்பவாத மாமிச உண்ணிகள். மற்ற முதுகெலும்புகளை வேட்டையாடி உண்ணும்.[4]

வகைப்பாட்டியல்[தொகு]

ஜீனோடெர்மிடே கொலுப்ராய்டு பரவலில் அடித்தள நிலையைக் கொண்டுள்ளது.[1] இருப்பினும், இவற்றின் சரியான நிலை இன்னும் முடிவு செய்யப்படவில்லை. எ.கா. இவை மற்ற கொலுப்ராய்டியாவின் சகோதர குழுவாக இருக்கலாம்; அல்லது அக்ரோகார்டிடேவின் சகோதர குழுவாக இருக்கலாம்.[4] மேலும் இந்த இரண்டு குடும்பங்களும் சேர்ந்து கொலுப்ராய்டியாவிற்கு உட்கிளையினை உருவாக்குகின்றன.[1]

பேரினம்[தொகு]

ஜெனோடெர்மிடே குடும்பம் பின்வரும் 6 பேரினங்களைக் கொண்டுள்ளது:[3]

  • அச்சலினசு பீட்டர்சு, 1869
  • பிம்ப்ரியோசு சுமித், 1921
  • பாராபிம்ரியோசு தெய்னி, டேவிட், லோட்டியர், லீ, விடால் & நக்யுயென், 2015
  • பராக்செனோடெர்மசு தீபக், லால்ரோனுங்கா, லால்க்மின்கினை, தாசு, நாராயணன், தாசு & கெளவர், 2021
  • இசுடோலிக்சுகியா ஜெர்டான், 1870
  • ஜெனோடெர்மசு ரெயின்ஹர்ட், 1836

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Durso, Andrew (23 February 2016). "Dragonsnakes and Filesnakes Revisited". Life is Short, but Snakes are Long. பார்க்கப்பட்ட நாள் 27 February 2016.
  2. Jay M. Savage (2015). "What are the correct family names for the taxa that include the snake genera Xenodermus, Pareas, and Calamaria?". Herpetological Review 46 (4): 664–665. http://www.zenscientist.com/index.php/pdflibrary2/func-finishdown/2496/. 
  3. 3.0 3.1 "Search results". reptile-database.reptarium.cz. பார்க்கப்பட்ட நாள் 2023-08-08.
  4. 4.0 4.1 4.2 Vitt, Laurie J.; Caldwell, Janalee P. (2014). Herpetology: An Introductory Biology of Amphibians and Reptiles, Fourth Edition. London: Academic Press. பக். 613–614. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0123869197. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜீனோடெர்மிடே&oldid=3771176" இலிருந்து மீள்விக்கப்பட்டது