ஜி. ரெங்கசாமி மூப்பனார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜி.ரெங்கசாமி மூப்பனார்

ஜி. ரெங்கசாமி மூப்பனார் (இறப்பு:19 ஆகத்து 2019)[1] ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

இவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பாபநாசம் வட்டத்தில் உள்ள கபிஸ்தலத்தில் ரெங்கசாமி மூப்பனார் மற்றும் செல்லத்தம்மாள் ஆகியோருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இவர் ஆன்மீகத்திலும், சமூகசேவையிலும், அரசியலிலும் ஈடுபட்டு வந்தார். இவருடன் பிறந்தவர்கள் 6 பேர் ஆகும். இவரது சகோதரர்கள், ஜி. கருப்பையா மூப்பனார், சம்பத் மூப்பனார், ஜி. சந்துரு மூப்பனார் மற்றும் சகோதரிகள் ராமானுஜத்தம்மாள், சாந்தா அம்மாள் மற்றும் சுலோச்சனா அம்மாள் ஆகியோர் ஆவர். இவருக்கு சரோஜாஅம்மாள் என்னும் மனைவியும், ஆண்டாள் என்னும் ஒரு மகளும் உள்ளனர். தன்மகளை பாபநாசம் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர், ஆர். சவுந்தராஜ மூப்பனார் மகன் எஸ். சுரேஷ் மூப்பனாருக்கு மணம் முடித்தார். தன் அண்ணன் ஜி. கருப்பையா மூப்பனாருடன் இணைந்து ஆன்மீகம், கலைத்துறை, அரசியல் ஆகியவற்றில் ஈடுபட்டார்.

அரசியல்[தொகு]

இந்திய தேசிய காங்கிரசில் மாநிலசெயற்குழு உறுப்பினராக உள்ளார்.

சமூக சேவை[தொகு]

ரெங்கசாமி மூப்பனாரின் முன்னோர்கள் 1770[சான்று தேவை] ஆம் ஆண்டு தொடங்கி இன்று முதல் ஸ்ரீ வெங்கடாசலபதி டிரஸ்ட் மூலம் தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு[சான்று தேவை] குறிப்பாக ஆன்மீகப் பயணம் மேற்கொள்ளும் தேசாந்திரிக்களுக்கும் மிகவும் வறுமையில் உள்ளவர்களுக்கும் அன்ன தானம் செய்து வருகிறார்கள்.[சான்று தேவை] தற்போது இந்த அறக்கட்டளையை இவரும் நிர்வகித்து வந்தார்.[சான்று தேவை]

கலைத்துறைப் பங்களிப்புகள்[தொகு]

  • திருவையாறு ஸ்ரீ தியாக பிரம்ம மகோத்சவ சபையின் தலைவராக இருந்தார்.[2]
  • பாரதியார் பேரவையின் தலைவராக இருந்து பாரதியை பற்றி பட்டிமன்றம், பாரதியார் பாடல் கச்சேரிகளையும் தொடந்து நடத்தி வந்தார்.
  • கும்பகோணம் ஆதி கும்பேசுவரர் கோயில் ஆண்டுதோறும் பிற மாநிலங்கள், நாடுகளைச் சேந்தவர்களும், இளம் கலைஞர்களையும் கலந்து கொண்டு நான்கு நாட்கள் நடக்கும் நாட்டியாஞ்சலிக்கு நடன சபா தலைவராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஜி.கே.மூப்பனாரின் சகோதரர் ரெங்கசாமி மூப்பனார் காலமானார்… அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்". ஒன்இந்தியா தமிழ் (ஆகத்து 19, 2019)
  2. "தியாகராஜ சுவாமிகள் 164வது ஆராதனை விழா திருவையாறில் இன்று பஞ்சரத்ன கீர்த்தனை". தினமலர் (ஜனவரி 24, 2011)