உள்ளடக்கத்துக்குச் செல்

ஜி. யு. போப் விருது (தமிழ்நாடு அரசு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜி. யு. போப் விருது இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஜி. யு. போப் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2014 ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்படுகிறது. அயல்நாட்டு மொழிகளில் தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்கும் சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு ஜி.யு.போப் விருது வழங்கப்பெற்று வருகிறது. இவ்விருதுக்கு இரண்டு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டுக் கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1ஜெ.நாராயணசாமி2014
2மதுரை இளங்கவின்2015
3வைதேகி ஹெர்பர்ட்2016
4கோ. இராசேசுவரி கோதண்டம்2017
5கு.கோ. சந்திரசேகரன் நாயர்2018
6மரிய ஜோசப் சேவியர்2019
7முனைவர் உல்ரீகே நிகோலசு[1]2020
8அ.சு. பன்னீர் செல்வன்2021
9முனைவர் அமுதன் அடிகள்2022
10முனைவர் வெ.முருகன் [2], [3]2023

சிறப்புப் பயண அட்டை

[தொகு]

விருதாளர்கள் அனைவருக்கும், அனைத்துத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளிலும் (குளிரூட்டப்பட்டப் பேருந்துகள் தவிர) வாழ்நாள் முழுவதும் கட்டணமின்றி பயணிப்பதற்கான சிறப்புப் பயண அட்டை வழங்கப்படுகிறது. [4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "தமிழக அரசின் விருதுகள்: பல்வேறு துறை சார்ந்த 77 பேருக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார்". Hindu Tamil Thisai. 2021-02-01. Retrieved 2025-02-12.
  2. ↑ "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  3. ↑ "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.
  4. ↑ தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு

வெளி இணைப்புகள்

[தொகு]