உள்ளடக்கத்துக்குச் செல்

சொல்லின்செல்வர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சொல்லின் செல்வர் விருது என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2013 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. சிறந்த இலக்கியப் பேச்சாளருக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்றும் அளித்து சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்

[தொகு]
வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1முனைவர் ம.லோகநாயகி[1]2013
2மருத்துவர் சுதா சேசையன்2014
3முனைவர் சோ. சத்தியசீலன்2015
4பி. மணிகண்டன்2016
5முனைவர் வைகைச் செல்வன்2017
6ஆவடிக்குமார்2018
7சிந்தனைக் கவிஞர் முனைவர் கவிதாசன்2019
8நாகை முகுந்தன்2020
9சூர்யா சேவியர்2021
10முனைவர் தி. இராசகோபாலன் [2]2022
11முனைவர் இ. சா. பர்வீன் சுல்தானா [3],[4]2023

மேற்கோள்கள்

[தொகு]
  1. தினமணி நாளிதழ் செய்தி [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "தமிழறிஞர்களுக்கு 2022ம் ஆண்டிற்கான விருதுகள் வழங்கல்". தினமலர். 2024-02-23. Retrieved 2025-01-08.
  3. "26 பேருக்கு தமிழ் வளர்ச்சித் துறை விருதுகள்: அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார்". தினமணி. 2025-01-08. Retrieved 2025-01-08.
  4. "பர்வீன் சுல்தானா உள்ளிட்ட 26 பேருக்கு விருதுகள்: அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்". மக்கள்குரல். 2025-01-08. Retrieved 2025-01-08.

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சொல்லின்செல்வர்_விருது&oldid=4588948" இலிருந்து மீள்விக்கப்பட்டது