உள்ளடக்கத்துக்குச் செல்

கபிலர் விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கபிலர் விருது (Kabilar Award) என்பது தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் ஆண்டுதோறும் அளிக்கப்படும் விருதுகளில் ஒன்றாகும். 2012 ஆம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்படுகிறது. பழந்தமிழர் தொன்மை, வரலாறு, நாகரீகம், பண்பாடு முதலியன புலப்படும் வகையிலும்; தமிழுக்கு உயிரூட்டும் வண்ணம் படைப்புகளைப் புனைந்து வழங்கும் கவிஞர் மற்றும் அறிஞர் பெருமக்களுக்கு இந்த விருது அளிக்கப்படுகிறது. இந்த விருதுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசுத் தொகையும், எட்டு கிராம் அளவிலான தங்கப்பதக்கமும், தகுதிச்சான்று அளித்துச் சிறப்பிக்கப்படுகின்றனர்.

விருது பெற்றவர்கள் பட்டியல்[தொகு]

வரிசை எண் விருது பெற்றவர் பெயர் விருது வழங்கப்பட்ட ஆண்டு
1 பேராசிரியர் முனைவர் அ. அ. மணவாளன் 2012
2 கவிஞர் முத்துலிங்கம் 2013
3 ச. கிருட்டிணமூர்த்தி[1] 2017
4 புலவர் வெற்றி அழகன்[2] 2019
5 செ.ஏழுமலை[3] 2020

மேற்கோள்கள்[தொகு]

  1. "2016 மற்றும் 2017ம் ஆண்டுக்கான தமிழ்த்தாய், கபிலர் உ.வே.சா., கம்பர் விருது: முதல்வர் வழங்கினார்". www.dinakaran.com. Archived from the original on 2021-01-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.
  2. "2019-ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சி விருதுகள் அறிவிப்பு". Dailythanthi.com. 2020-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.
  3. "தமிழக அரசின் சார்பில் 2020-21ம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது அறிவிப்பு". www.dinakaran.com. Archived from the original on 2022-03-15. பார்க்கப்பட்ட நாள் 2021-03-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபிலர்_விருது&oldid=3725092" இலிருந்து மீள்விக்கப்பட்டது