ஜியோபெலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜியோபெலியா
வரிக்குதிரை புறா, ஜியோபெலியா இசுட்ரைட்டா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கொலும்பிடே
பேரினம்:
ஜியோபெலியா

சுவைன்சன், 1837
மாதிரி இனம்
ஜியோபெலியா இசுட்ரைட்டா
லின்னேயஸ், 1766
சிற்றினங்கள்

உரையினை காண்க

ஜியோபெலியா (Geopelia) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள சிறிய, நீண்ட வால் புறாக்களின் பேரினமாகும் . இவை தென்கிழக்காசியா மற்றும் ஆத்திரேலியாவை பூர்வீகமாகக் கொண்டவை. இவை பெரும்பாலும் திறந்தவெளி மற்றும் புதர் நிலங்களில் காணப்படுகின்றன. இவை முக்கியமாக நிலத்தில் உணவு தேடி விதைகளை உண்கின்றன. இவை பொதுவாகக் கிளைகள் மற்றும் புல் கொண்ட ஒரு எளிய கூட்டில் இரண்டு முட்டைகள் வரை இடுகின்றன. இவற்றின் இறகுகள் பெரும்பாலும் சாம்பல்-பழுப்பு நிறத்தில் புள்ளிகள் அல்லது கோடுகளுடன் இருக்கும். வரிக்குதிரை புறா மற்றும் வைர புறா ஆகியவை பொதுவாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன.

இந்த பேரினமானது 1837ஆம் ஆண்டு இங்கிலாந்து இயற்கை ஆர்வலர் வில்லியம் ஜான் சுவைன்சனால் வரிக்குதிரை புறா (ஜியோபெலியா இசுட்ரைட்டா) மாதிரி இனமாக அறிமுகப்படுத்தப்பட்டது.[1][2] இந்தப் பேரினத்தின் பெயர் பண்டைய கிரேக்கச் சொல்லான geō- அதாவது "தரையில்-" மற்றும் பீலியா என்றால் "புறா" என்று ஒருங்கிணைத்து வழங்கப்படுகிறது.[3]

இந்த பேரினத்தில் ஐந்து சிற்றினங்கள் உள்ளன. அவை:[4]

  • வைர புறா, ஜியோபெலியா குனேட்டா
  • வரிக்குதிரை புறா, ஜியோபெலியா இசுட்ரைட்டா
  • அமைதியான புறா, ஜியோபெலியா பிளாசிடா (சில நேரங்களில் ஜியோபெலியா இசுட்ரைட்டாவின் துணையினமாகக் கருதப்படுகிறது)
  • வரிப்புறா, ஜியோபிலியா மாஜியசு (சில நேரங்களில் ஜியோபெலியா இசுட்ரைட்டாவின் துணையினமாகக் கருதப்படுகிறது)
  • பட்டை-தோள் புறா, ஜியோபெலியா ஹுமரலிசு

மேற்கோள்கள்[தொகு]

  1. William John Swainson (1837). On the Natural History and Classification of Birds. 2. London: John Taylor. பக். 348. https://www.biodiversitylibrary.org/page/41945126. 
  2. Check-list of Birds of the World. 3. Cambridge, Massachusetts: Harvard University Press. 1937. பக். 100. https://www.biodiversitylibrary.org/page/14477815. 
  3. Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. பக். 172. https://archive.org/details/helmdictionarysc00jobl. 
  4. Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (2020). "Pigeons". IOC World Bird List Version 10.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 5 March 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜியோபெலியா&oldid=3639578" இலிருந்து மீள்விக்கப்பட்டது